முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம் எல் எம் மூலம் ஆம்வே நிறுவனம் பிரமிட் மோசடி

எம் எல் எம் மூலம் ஆம்வே நிறுவனம் பிரமிட் மோசடி மக்களிடம் ஏமாற்றிய ரூ.758 கோடி சொத்துக்கள் முடக்கம்  சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

அமெரிக்காவில் தலைமையிடம் செயல்படும் ஆம்வே நிறுவனம் இந்தியா உள்ளிட்ட உலகில் பல நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவி. (அமெரிக்க வழி விற்பனை என்பதன் சுருக்கமே ஆம்வே). அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறது. சதுரங்க வேட்டை திரைபடத்தில் வருவதுபோல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற  இந்த நிறுவனத்தின் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராக சேர்ந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம் என்று ஆசை  வார்த்தைகளைத் தூண்டி கோடிக் கணக்கான மக்களை ஏமாற்றி அவர்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்த

நிறுவனம் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மண்டபங்களில் கூட்டங்கள் நடத்தி கிராமத்தில் வாழும் பொதுமக்களை ஆசை காட்டி மூளைச்சலவை செய்து அதன்மூலம் சங்கிலி தொடர் போல் உறுப்பினர்களைச் சேர்த்து மோசடியில் நீண்ட காலமாக ஈடுபட்டு் வந்தது . புதிய உறுப்பினர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தயாரிப்புகளை வாங்காமல், உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் திடீர் பணக்காரர்களாக வேண்டுமென்ற ஆசையில் பத்து ரூபாய் பெறாத பொருட்களை நூறு ரூபாய் என அதிக விலை கொடுத்து  வாங்கியுள்ளனர். இதனால் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை ஆந்திரப் பிரதேச சிஐடி காவல்துறை கண்டுபிடித்துடன் 2012-ஆம் ஆண்டு ஆம்வே நிறுவனத்தின் இந்தியக் கிளை சிஇஒ வில்லியம் பிங்கேனே மற்றும் இரண்டு இயக்குநர்களையும் கைது செய்தனர்.

இந்நிறுவனத்தின் மீது 1978-ஆம் ஆண்டு பரிசு சீட்டு மற்றும் தடை செய்யப்பட்ட பண சுழற்சி பரிவர்த்தனைத் திட்டம் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் சட்டவிரோதப் பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்வே நிறுவனம், தங்கள் நிறுவனப் பொருட்களை நேரடி விற்பனை செய்யாமல், மல்டி-லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என்ற எம் எல் எம் எனும்  இமாலய மோசடி செய்திருப்பதை அமலாக்கத்துறை கத்து காலதாமதமாகவே தெரிந்தது அதை கண்டுபிடித்து. அந்நிறுவனம் வழங்கும் பெரும்பாலான தயாரிப்புகளின் விலை மலிவானவை எனவும், உண்மைகளை அறியாத பொதுமக்கள், நிறுவனத்தில் வர்த்தக உறுப்பினர்களாகச் சேர தூண்டப்பட்டு, அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குவதாக கண்டு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பிரமிடு திட்டம் மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில் ஒருவர் தனக்கு கீழ் உறுப்பினர்களை சேர்க்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் சில்வர், கோல்டு, பிளாட்டினம், டைமண்ட் என அவர்களே பெயர் வைக்கும் மோசடி  திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.


இதில் முதல் நிலை உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பல்வேறு உறுப்பினர்களை சேர்த்து அதன் மூலம் கமிஷனாக கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததாக கூறி ஏமாற்றி கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை ஆசை காட்டியதன் மூலம், சுமார் ஐந்து லட்சத்திற்கு மேலாக உறுப்பினர்களை இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். ஆம்வே தன் சொந்தத் தயாரிப்பு என தெரிவித்து விநியோகித்த பொருட்கள் தரமற்றவையாக இருப்பதுடன், வணிக நிறுவனமாக பதிவு செய்து கொண்ட ஆம்வே நிறுவனம், ஆட்களை சேர்த்து மோசடி செய்வதில் முக்கியத்துவம் காட்டியது தான் தற்போது  விசாரணையில் அம்பலமானது. ஆக இதுவரை இந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி வந்த நிலையில் தற்போது நடவடிக்கை பாய்ந்தது, இதுபோன்ற பல நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது கடை விரித்து இதே முறையில் வர்த்தகம் செய்வததை ஆந்திரப் பிரதேசம் போல் தமிழ்நாட்டில் நடக்குமா என்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...