முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'டாணாக்காரன்' தமிழ் திரைப்படத்தில் பார்த்திராத புதிய களம்

டாணாக்காரன்


சென்னை வாழ் மக்கள் பேச்சில் (காவல்காரன்) திரைப்படம்

டிஸ்னி ஹாட் ஸ்டார். தமிழ் திரைப்படத்தில் பார்த்திராத புதிய களம் படம் பார்க்கும் ஆவலாக.

எல்லோரையும் அடிக்கலாம்,  மாமுல் வாங்கி செட்டிலாகலாம், ஊர்ல பொண்ணு தர்றேன்னு சொன்னாங்கய்யா, ஆர்ப்பாட்டம் நடத்தறவங்களையெல்லாம் சுட்டுத் தள்ளனும்யா, குடும்பத்தைக் காப்பாற்ற, அப்பாவின் ஆசையை நிறைவேற்றி ஒரு நல்ல Police ஆக வாழ என எத்தனையோ காரணங்களுக்காக Police வேலைக்கு வருபவர்கள், காவல் துறை பயிற்சி நிலையத்தில் படும் அவஸ்தையின் பாட்டை மிகவும் நுட்பமாக எடுத்துச் சொல்லும் திரைப்படம்.

Police ஆவதை லட்சியமாக, மற்றும் பெருங் கனவாகக் கொண்ட ஒருவன் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற பரவசத்துடன் பயிற்சி நிலையத்துக்கு வருகிறான். ஆனால அங்கு அவன் பார்ப்பது நினைத்தற்கு நேரெதிரான காட்சிகளைத் தான். தன் காலில் விழுந்து அடிமையாக இருப்பவனுக்குத் தான் நல்லது நடக்கும். எதிர்த்து நியாயம் கேட்பவன் கடுமையான,கொடுமையான தண்டனைக்கு ஆளாகிச் சாக வேண்டியது தான் என்கிற நிசர்சனம் ஓங்கி அரைத்தபோது, அவன் என்ன செய்கிறான் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்தத் திரைப்படம்.

இலஞ்சம்,சக மனிதனை அடிமையாக நடத்துதல்,கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருப்பவனை உச்சபட்சமாக அவமானப்படுத்துதல், என நமது நாட்டின்,நமது வாழ்வின் ஒரு மாதிரிதானே காவல்துறை பயிற்சி நிலையமும்

82 வருடம் தேர்வாகி ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களினால் பாதிக்கப்பட்டு,நீதிமன்ற ஆணையால் மிகவும் தாமதமாகப் பணி ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த 40 களில் இருப்பவர்கள், இப்போது தேர்வான இளைஞர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுவதும், அவமானப்படுவதும்  இயல்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்க யாருக்காவது குறையிருக்கா? என்ற அதிகாரியின் கேள்விக்கு, இங்க நிறைய பேர் இருக்கோம். ஆறு டாய்லட் தான் குடுத்துருக்காங்க. இன்னும் நாலு குடுக்கச் சொல்லுங்கய்யா என்று கேட்டதும்,இங்க நீங்க உங்க பொண்டாட்டியோட ஹனிமூனுக்கு வரல. அஞ்சு டாய்லட் குடுங்க என்றதும், அதன் பிறகு யாருக்கும் குறைகளேயில்லாமல் போய் விடுகிறது. இனி நிகழப் போகும் கொடுமைகளை இந்த ஆரம்பக் காட்சி நமக்கு உணர்த்தி விடுகிறது.

அந்த பில்டிங்க நகர்த்தி வையுங்க என்று சொன்னதும் ஒருவனைத் தவிர எல்லோரும் நகர்த்த முயலும் காட்சி,நம்மை  23 வருடங்களுக்குப் பின் நகர்த்தியது தான் உணர்வு.

உயரதிகாரிங்க அந்த மலைய நகர்த்துன்னு சொன்னா,அதெப்படி சார் முடியும்னு எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது. அதுவே கீழ்படிதல் . சரிங்கய்யான்னு சொல்லிட்டுப் போய் ஒரு டீ சாப்பிட்டு வந்து, அய்யா தள்ளிப் பாத்தங்கய்யா நகர மாட்டேங்குதுன்னு சொல்லணும் என நமக்கு வேண்டிய அலுவலக அதிகாரி ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

அதிகாரி உத்தரவுன்னு ஆடு மாடு மேயாமல் இருப்பதற்காகப் போடப்பட்ட கார்டை, மரம் வளர்ந்த பின்னும் மாறாமல் நிற்க வைக்கும் காட்சி, பயிற்சி நிலையத்தின் இறுகிப் போன அபத்தத்தை அவ்வளவு அழகாகச் சொல்கிறது.

என்ன ஆளுகளே? என்று ஜாதியைக் கேட்டு சொல்ல மறுப்பவனை வெறியுடன் தாக்குவது, பயிற்சிக்கு வந்தவர்களை மிருகத்தனமாக அடித்து நொறுக்குவது, தவறு செய்பவர்களுக்கான கொடுந் தண்டனையான  ஒரு மணி ஈடியில் தாக்குப் பிடித்தவனைக் கண்டு அதிர்வது,  பரேடில் உத்தரவுகளைத் தொடர முடியாமல் தடுமாறுவது, தோற்றும் வென்றதாகத் தரப்பட்ட மெடலை குற்றவுணர்வோடு ஏற்றுக் கொள்வது என லால் அசத்துகிறார் என ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் ஒரு சிறு குறையும் சொல்ல முடியாதபடி அத்தனை இயல்பாக அத்தனை சிறப்பாக நடித்து வாழ்ந்திருக்கிறார்கள்.

நீ என் கால ந.......யிருந்தேன்னு வைய்யி,உன்னை எங்கயோ கொண்டு போயிருப்பேன். ஆனா நீ என் முஞ்சிய ந.......ற

ஈஸ்வரமூர்தியும் என் பையனும் நின்னு,       என் பையன் ஜெயிச்சிருந்தாக் கூட நான் ஈஸ்வரமூர்த்தியத்தான் ஜெயிக்க வைப்பேன். ஏன்னா,ஈஸ்வரமமூர்த்திங்கறது ஒரு ஆள் இல்ல. He is part of the system

இப்படி இயல்பான எதார்த்தமான கூர்மையான வசனங்கள்.காட்சிகளை அழுத்தமாக நம்முள் பதிய வைக்கின்றன.

திரைப்படம் முடிந்ததும் ஒரே சமயத்தில் பலர் இது நல்ல படம் என்கிறார்கள் பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலர் உறக்கம் வராமல் யோசிக்க .படமும் காட்சிகளும் கண்முன்னே நிகழ்ந்து கொண்டேயிருந்தன,

பாலைவனத்தில் ஒற்றை ரோஜா போல ஒரு மெல்லிய காதலும் கதையின் போக்கில் உறுத்தாமல் சொல்லப்பட.

 ஒரு பயிற்சி நிலையத்தில் ஆளையே கொல்லுமளவு இத்தனை கொடுமைகள் நடக்குமா என்ற கேள்வியும் எழாமலில்லை.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்,படத்தில் நாயகன் என்று தனியாக யாரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்பது தான். நடிகர் விக்ரம் பிரபுவையோ, நடிகர் பாஸ்கரையோ , நடிகர் லாலையோ இன்னும் யாரையோ சொல்லி விட முடியாதபடி அத்தனை பேருக்கும் சரியான பங்கு தரப்பட்டிருப்பதும், அத்தனை பேரும் அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாகச் செய்திருப்பதும் பாராட்டுக்குரிய அம்சம்.

அதிகம் மலையாளத் திரைப்படங்களைப்  பார்க்கும் போது இப்படி தமிழ்ப்படங்கள் வருவதில்லையே என ஆதங்கமாய் நினைத்த காலங்கள் உண்டு.

வித்தியாசமான ஒரு கதைக்களத்தைத் தேர்வு செய்து நகைச்சுவை, பாடல் காட்சிகள்,சண்டைக் காட்சிகள் என வழக்கமான தமிழ் சினிமாவில் லாஜிக் குறைத்து இவை ஏதுமில்லாமல்,ஒரு காட்சியைக் கூட நீக்க முடியாதபடி அத்தனை இறுக்கமான கட்டமைப்பில் ஒரு நல்ல திரைப்படத்தைத் தந்த படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் திரைப்படத்தில் முக்கியமான இந்தப் படத்தில் சென்னை, விளையாட்டை மையமாகக் கொண்ட படங்களின் வரிசையில் புதிதாக வந்துள்ள படம் டாணாக்காரன். 1997 ஆம் ஆண்டு Police பயிற்சியின் போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கிறவர்களுக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழ் தான் இந்த திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். Potential Studios தயாரித்துள்ள இந்தத் திரைப்படம்  நேரடியாக ஓடிடி.,யில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Police பயிற்சி, அங்கு நடக்கும் பரைடு (Parade) நடக்கும் நிகழ்வுகள், பல வித பிரச்சனைகள், இடைஞ்சல்கள், போராட்டங்களைத் தாண்டி ஒரு இளைஞன் எப்படி Police ஆகிறான் என்பது தான் படத்தின் கதை. காவல் பயிற்சி மையத்தில் ஒரு டீம் தலைவராக ஈஸ்வர மூர்த்தி என்ற பாத்திரத்தில் லால் அசல் police ஆகவே மாறியுள்ளார். மற்றொரு டீமுக்குத் தலைவராக எம்.எஸ்.பாஸ்கரும் நடித்துள்ளார். இத்தனை போராட்டங்களையும் தாண்டி ஹீரோவான நடிகர் விக்ரம் பிரபு கடைசியில் Police ஆகிறாரா இல்லையா என்பது தான் டாணாக்காரன் படத்தின் கதை. இரண்டு Police அணிகள் இடையேயான பரேடில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.காவல பயிற்சி மையத்தில் என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி எல்லாம் கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்பதை அதன் ஆணி வேரைத் தோண்டியே எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர். Police தொடர்பான சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிக அழகாக, தெளிவாக தொட்டு சென்றுள்ளார் இயக்குனர். காவல் பயிற்சியின் கடுமையின் உச்சத்தைக் காட்டுவதாக, வயதில் மூத்தவரான ஒருவர் எப்படியும் police ஆக வேண்டும் என்ற வெறியுடன் பயிற்சிக்கு வருகிறார். ஆனால் கடுமையான பயிற்சிகள் காரணமாக அவர் உயிரிழக்கிறார். ஒரு மெல்லிய சோகம், ட்விஸ்ட் ஆகியவற்றுடன் இடைவைளை இதற்கிடையில் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி police ஆக வேண்டும் என நடிகர் விக்ரம் பிரபு ஏன் விடாபிடியாக இருக்கிறார் என்பதற்கு ஒரு  ஃபிளாஷ்பேக் லிவிங்ஸ்டன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மிக அழுத்தமான நடிப்பை வெளியிப்படுத்துகிறார். அஞ்சலி நாயரும் காக்கிச் சட்டையில் தனக்கு கீழ் உள்ளவர்களை உருட்டி மிரட்டும் காட்சிகளில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாக இருந்தாலும் ED (EXTRA DRILL) என்ற விஷயத்தை மிக அழுத்தமாக, தெள்ள தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...