முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தருமபுரம் ஆதீன அருங்காட்சியகம் மற்றும் ஞானரத யாத்திரையுடன் பவள விழா அரங்கத்தையும் தமிழ்நாடு ஆளுநர் துவங்கி வைக்கிறார்

திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீன மடத்தின் பழமை பேசும் பல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் ஞானரத யாத்திரையுடன் பவள விழா அரங்கத்தையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தருமை குருமகா சந்நிதானம் முன்னிலையில் துவங்கி வைக்கிறார் தருமையாதீன அருங்காட்சியகம்

தமிழர்களின் தொன்மையைப்  பழமையைப் பறைசாற்றும் வகையில் தருமாபுரம் ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்டைய பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம், மூன்றாம் நூற்றாண்டுகள் தொடங்கி பழமையான இசைக் கருவிகள் பல்லக்குகள், சிலைகள் சுடு மண்ணால் செய்யப்பட்ட நாதசுரம் உள்ளிட்டவை  இடம் பெற்றுள்ளன, 


மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான சைவ ஆதீனத் திருமடம் பல நூற்றாண்டுகளாகப் பழமை வாய்ந்த பொருட்கள் உள்ளன. மாநிலத்தில் பண்டைய பொருட்கள் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் இதற்கு முந்தைய ஆதீனங்கள் பயன்படுத்திய பொருட்கள், வெள்ளி தந்தப் பல்லக்குகள், தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திய 60 க்கும் மேற்பட்ட பழமையான வாத்திய இன்னிசைக் கருவிகள், தற்போது வழக்கத்திலில்லாத சாரங்கி, பிடிவீணை உள்ளிட்டவை, டி மண்ணால் செய்யப்பட்ட நாதஸ்வரம், சுருதி இசைக்கருவி, பலவகை தேர்ச் சிற்பங்கள், கலம்காரி வகை ஓவியங்கள், பல நூற்றாண்டுகள் பழமையான ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலைகள், வெள்ளியினால் செய்யப்பட்ட குடங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பயன்பாட்டுப் பொருட்கள் ஆகிய மூன்றாம் நூற்றாண்டு துவங்கி பயன்பாடுகளில் இருந்த பழமையான பொருட்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு ஆளுநர்  வி.என்.ரவி இதைத் திறந்து வைக்க உள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு அருங்காட்சியகத்தை விளக்கிக் கூறி, பழமையான இசைக் கருவிகளை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாசித்துக் காண்பித்தார்.



தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி,   மாணவ மாணவிகளுக்கு இது ஒர் அரிய பொக்கிஷமாக விளங்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.தருமபுரம் ஆதீனம் (அ) தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்று தமிழ்நாட்டில் மயிலாடுதுறையிலுள்ளது. 1987 ஆம் ஆண்டு சுமார் 27 சிவாலயங்கள் இதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.




சமயம் சார்ந்த பணிகளோடு, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம்  சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை( அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்குப் பெருந்தொகை வழங்கியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி புரிந்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது.



ஞானசம்பந்தம் என்ற மாத இதழையும்  வெளியிடுகிறத தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' எனப் போற்றுகின்றனர்.

இதன் பரம்பரையில் வரும் முதல் நால்வரைப் அகச் சந்தான குரவரென்றும் கயிலாயவாசிகள் எனவும் இப்பரம்பரை அகச் சந்தான குரவர் புறச் சந்தானக் குரவர் மற்றும் சந்தானக் குரவர் என வரிசைப்படுத்தப்படுகிறது.  இச் சூழ்நிலையில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வானது நடக்கிறது .

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், வி.சி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம்,உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடந்தது.               



  தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜகவினர்  வரவேற்பு அளித்தனர். ஆதின மடம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கறுப்புக்கொடி காட்ட முயன்ற 150 பேரைக்  கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய. தனது மனைவி லட்சுமியுடன் கோவிலுக்கு வந்தவருக்கு




கோவில் வாயிலில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் மேள, தாளங்கள் முழங்க மாலை அணிவித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். இன்று தருமபுர ஆதீனத்தின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.





அதனை அடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார்கள். தொடர்ந்து தர்மபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார்.







ஆளுநர் வருகையை முன்னிட்டு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் இன்று ஞானரத யாத்திரை புறப்படுகிறார்.

இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைக்க வருகை புரிந்தார்.ஆளுநர் வருகைக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர். கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.







வேனை வைத்து மறித்து கறுப்பு கொடி காட்ட விடாமல் தடுத்தையடுத்து ஆளுநரின் கார் கடந்து சென்றது. இதனையடுத்து ஆத்திரத்தில் கறுப்புக்கொடியை சாலைகளில் வீசினர். அதனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனம் முடிந்த பிறகு கவர்னருக்கு தீட்சிதர்கள் பிரசாதங்கள் வழங்கியதையடுத்து கோவிலுக்குள்லுள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சன்னதிக்கு சென்ற ஆளுநர் ரவி அங்கும் சாமி தரிசனம் செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...