முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் சூரியின் மோசடிப் புகாரில் காவல்துறை ஓய்வு அதிகாரி ரமேஷ் குடவாலாவுக்கு சம்மன்

நடிகர் சூரியின் மோசடிப் புகாரில் காவல்துறை ஓய்வு அதிகாரி ரமேஷ் குடவாலாவுக்கு சம்மன். சென்னை சிறுசேரி பகுதியில் நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடிகர் சூரி புகார் அதை விஷ்ணு விஷால் மறுத்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த  'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூரியும் ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படத்தில் அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கியுள்ளதாக நடிகர் சூரி தரப்பு தகவல்.

 உள்ள நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷாலின் தந்தையான காவல்துறையில் பணியாற்றிய வட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் குடவாலாவும்  நடிகர் சூரியை அணுகி, மேலும் 2.70 கோடி ரூபாய் கொடுத்தால் நிலம் வாங்கித்தருவதாகக் கூறியதன்படி நடிகர் சூரி பணம் கொடுத்ததாகவும், ஆனால் நிலம் ஏவாங்கித்தரவில்லை என்பதால் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, நாற்பது லட்ச ரூபாய் மட்டுமே தந்துவிட்டு, ரூ. 2.70 கோடியை தரவில்லை என நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு நடிகர் சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றதாகவும் அது முடியாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சூரியின் புகாரைப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப் பின்னர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த நடிகர் சூரி  புகாரின் அடிப்படையில் அடையாறு காவல்நிலையத்தில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது 406, 420, 465, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஆனால், அப்போது நடிகர் சூரியின் புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

இதற்காக அறிக்கை  வெளியிட்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், "என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்த போது மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

உண்மையில் சூரி தான், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். "கவரிமான் பரம்பரை" என்ற படத்திற்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணமது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்" என்று கூறினார்.

2009 ஆம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷாலும், நடிகர் சூரியும் அறிமுகமாகினர். விஷ்ணு விஷால், தமிழ்நாடு காவல்துறை ADGP ரமேஷ் குடவ்லா-வின் மகன் எம்.பி.ஏ முடித்தவர்,  TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி, ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த போது ஒரு காலில் காயம்  ஏற்ப்படவே கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் திரைப்பட நடிகரானார். அதற்குப் பிறகு, குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் சூரியும் இவரும் ஒன்றாகவே நடித்தனர் 

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தமிழக காவல்துறையில்  டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்ததால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாக நடிகர் சூரி தரப்பில் கூறப்படுவதைத் தொடர்ந்தே அவர் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அவரது தரப்பு கூறுகிறது.     




    சென்னை அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்த  பின்னர், தன்னுடைய புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது..மொத்­தம் ரூ.2.70 கோடி பெற்­றுக்­கொண்டு தம்மை ஏமாற்­றி­விட்­ட­தாக சூரி எழுப்­பி­யுள்ள புகாரை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரமேஷ் குட­வாலா மறுத்­துள்­ளார்.

 புகார் தொடர்­பாக சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் உரிய விசா­ரணை நடத்தி ஆறு மாதங்­க­ளுக்­குள் அறிக்கை தாக்­கல் செய்ய சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டதை­ய­டுத்து நடிகர் சூரி­யி­டம் இரண்­டு முறை விசா­ரணை நடத்­திய காவல்­துறை அதி­கா­ரி­கள், தேவைப்­பட்­டால் மீண்­டும் அழைப்­ப­தா­கக் கூறி­யுள்­ள­னர்.   சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.





இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.  மேலும், நடிகர் சூரி குறிப்­பிட்ட சிறு­சேரி பகு­திக்­குச் சென்று காவல்துறை விசா­ரணை மேற்­கொண்­ட­தா­கத் தெரி­கிறது.

, நடிகர் சூரிக்குத் தர வேண்­டிய தொகை­யில் ரூ.1.30 கோடி ஏற்­கெ­னவே கொடுக்­கப்­பட்டு­ விட்­ட­தா­க­வும் மீத­முள்ள தொகை ரூ.1.40 கோடி­தான் என்­றும் கூறப்படும் சூழ்நிலையில் அடுத்த ­கட்­ட­மாக முன்­னாள் டிஜிபி ரமேஷ் குட­வாலா, அன்­பு­வேல் ராஜன் ஆகிய இரு­வ­ரி­ட­மும் விரி­வான விசா­ரணை நடத்­தப்­பட உள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் தகவல்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...