முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெருங்காமநல்லூர் கண்டது ஜாதியப் போராட்டமல்ல தியாகுவின் பார்வையில்

ஆங்கிலப் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கிய மெட்ராஸ் இராஜதானி


1885 ஆம் ஆண்டில் மியூசியம் அதுவே  தற்போது சென்னை அருங்காட்சியகத்தின் அப்போதய கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்ட எட்கர் தர்ஸ்டன்  தனது பணியுடன், இன இயல் ஆய்வுப்பணியையும் மேற்கொண்டார். அதன் பலனாக 1909 ஆம் ஆண்டு வெளி வந்த "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" (Castes and Tribes in Southern India) என்ற ஆங்கில நூலின் ஏழு தொகுதிகள்.

உலக அளவில் இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோண்ட் பழங்குடிகள் தொடக்கி, இன்றளவும் இன இயல் ஆய்வாளர்களுக்கு புதிரானவர்களாக உள்ள தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரமலைக் கள்ளர் மற்றும் கோட்டை வேளாளர் வரையான இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினரையும்,  ஜாதியினரையும் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்ட பணி 


தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். பலரோடு கடிதங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்கி  எட்கர் தர்ஸ்டன் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த Castes and Tribes in Southern India நூலின் ஏழு தொகுதிகளையும் முனைவர் க.ரத்னம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

அதை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என வெளியிட்டுள்ளது. இன வரைவியலை தமிழில் அறிந்து கொள்வதற்கு இன்றளவும் துணையாக நிற்கும் இந்த ஏழு தொகுதிகளும் ஆய்வாளர் உள்ளிட்ட அனைவருக்கும் உதவியாக இருக்கும்..

முதற்தொகுதியில் "அபிசேகர் முதல் பயகர வரை"யிலான (Abhiseka to Bayagara) குலங்களும் குடிகளும் விவரிக்கப்பட்டது.

இரண்டாம் தொகுதியில் "கஞ்சி முதல் ஜூங்கு வரை"யிலான (Kanji to Jungu) குலங்களும் குடிகளும் விவரிக்கப்பட்டது.மூன்றாம் தொகுதியில் "கப்பேரர் முதல் குறவர் வரை"-யிலான (Kobbera to Korava) குலங்களும் குடிகளும் விவரிக்கப்பட்டது.

ஐந்தாம் தொகுதியில் "மரக்காயர் முதல் பள்ளெ வரை"-யிலான (Marakkayr to Palle) குலங்களும் குடிகளும் விவரிக்கப்பட்டது.

ஆறாம் தொகுதியில் "பள்ளி (அல்லது) வன்னியன் முதல் சிரியன் கிறித்துவர் வரை"-யிலான [Palli (or) Vanniyan to Syriyan Christian] குலங்களும் குடிகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

ஏழாம் தொகுதியில் "தாபேலு முதல் சொன்னல வரை"-யிலான [Tabelue to Zonnala] குலங்களும் குடிகளும் விவரிக்கப்பட்டுள்ளது


(நான்காம் தொகுதி நீண்ட காலமாக இருப்பிலில்லை.) என்ற நிலையில்

₹ 2730/- ரூபாய் விலையில் கிடைக்கும் அந்த நூல்கள்  கூறும் உண்மை வேறு விதமானது இன்று பலரும் பல விதமாக வரலாறு பேசப்படுகிற காரணம் இந்திய சுதந்திரம் தான் ஆனால் அன்று நிலவரம் அப்படி இல்லை.  இன்று பாரம்பரியம் பேசுவதில் தங்களை அரச பரம்பரை எனக் கூறும் பலர் சலுகைகள் பெறுவதில் தங்களுக்கு முன்னுரிமை கேட்பதில் தான் அவர்கள் முரண்பாடு தெரிகிறது


சமீபத்தில்  கள்ளன் என்று  திரைப்படத்திற்குப்  பெயர் வைத்த நபர்கள் பார்வையில் வரலாறு பார்க்கவில்லை அல்லது படிக்கவில்லை  என்பதே உண்மை.

கள்ளன் அல்லது கள்ளர் - அரசன், ஆநிரை கவர்தல். போர் புரிவதற்கு முன்பு எதிரி நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய அந்நாட்டின் கால்நடைகளை கவர்ந்து தன் நாட்டிற்கு வருதல். அரச இயல்பு கால்நடைகளை பொருத்தே அந்நாட்டின் பொருளாதாரம் அப்போதுநிர்ணயம் செய்யப்பட்ட காலம்.

வெட்சி - ஆநிரை கவர்ந்து வருதல், கரந்தை - கவர்ந்து வந்த கால்நடைக்காக போர் புரிதல். இதற்கு உலகலாவிய  உதாரணமாக


ஜப்பான் நாட்டில் போர் முறையை கையாளுபவர்கள் இருவர்கள். சாமுராய் மற்றும் நிஞ்சாக்கள். 


சாமுராய் - பகலில் போர் புரியும் கூட்டம். 

நிஞ்சாக்கள் - இரவில் நிழலோடு நிழலாகப் போர் புரிபவர்கள்.இது நாடுகளைப் பொறுத்து அக்காலத்தில் வேறுபடும்.                கேசம் என்றால் முடி, சடை என்றால் நீளமான முடி,கேசவன் என்றால் முடியை உடையவன் உயர் பிரிவின் மக்கள் வைக்கும் பெயர் சடையன் என்றால் நீளமான முடியை உடையவன். இது அடித்தளத்து மக்கள் வைத்திருக்கும் பெயர்.   சடையன் என்பதை அவமானமாகப் பார்ப்போர்  கேசவன் என்பதை பெருமையாக நினைக்க காரணம் நமது தாய் மொழி தமிழ் மொழியின் பொருள் தெரியாத காரணமேயாகும். யாசிகா என்ற தற்கால பெயர் உள்ள பலர் பிச்சை எனப் பெயர் வைத்தவரை கேவலமாக பார்ப்பது அவர்கள் மொழி அறியாத மூடர்கள்.  ஆதி சடையன் ஆதி முனியன் தான் அல்லது முனீஸ்வரன்.


அதே விஜயநகரப் பேரரசின் மதுரை அரசாளும் சூழல் அமைப்புகளின் காலம் 1450 ஆம் ஆண்டுக்குப் பின்னர்   வைணவ

ஆதி கேசவ பெருமாள் என்று அழைக்கப்படும் நிலையில் பேயாழ்வார் கொண்டாடிய (ஆழ்வார் பேட்டை பெயர்க் காரணம் அதே  அந்த நிலம் ஆதி கேசவ பெருமாள் கோயில் நிலம்) தேவுடு சிவனே.  இப்படித் தான் சைவம் தவிர்க்க வைணவம் உட்புகுந்த வரலாறு. மதுரை சைவ விழாவான சித்திரைத்  திருவிழா நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அழகரை வைகை ஆற்றில் இறங்கும் விழாவாக மாற்றி அமைத்து சைவம் வைணவம் இணையக் காரணமாக அமைந்தது.  கள்ளன் திரைப்படம் நீதிமன்றம் வழக்கில் நிலுவையில் உள்ள போது பலவழிகளில் வெளிவந்த நிலையில் அதன் மூலக் கருத்து அல்லது கதை   


திருமங்கை ஆழ்வார் பிறந்த சமூகத்தில் இப்போது பலர் கேவலமாக பார்க்க பல பொய்யான பிரச்சாரங்கள் தான்  காரணம். 

   தேனி அருகே இருக்கும் ஊரில் வசிக்கும் கரு.பழனியப்பன், காட்டிலிருக்கும் விலங்குகளை வேட்டையாடி பிழைப்பு நடத்தும் நிலையில் காட்டு விலங்குகளை வேட்டையாடக் கூடாது என அரசு தடை போடுவதையடுத்து கரு பழனியப்பன் கள்ளத்துப்பாக்கிகளைத் தயார் செய்து விற்பனை செய்கிறார்.

அதுவும் பிரச்சினையாக மாறியதால் திருடத் துவங்குகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக கொலைகள் நடக்கிற நிலையில் நாயகி கீதாவை சந்திக்கிறார். அது சினிமாவில் வரும் லாஜிக்.

தூக்குத் தண்டனை விதிக்கப்படும் நிலையில், கரு பழனியப்பன் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் கரு பழனியப்பன் ஜெயிலில் இருந்து தப்பித்தாரா? காதலி நிகிதாவுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கரு.பழனியப்பன், முகபாவனைகள் ஏதும் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகியாக வரும் நிகிதா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.


நமோ நாராயணின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சவுந்தரராஜா, அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மாயாவின் எதிர்பாராத நடிப்பு மிரள வைக்கிறது. எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதையை திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார் சந்திரா தங்கராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்களைதா தவிர்த்து இருக்கலாம் கூடுதலாக இரண்டாம் பாதியில் வரும் திருப்பம் திரைக்கதையை சுவாரஸ்யமாக்குகிறது.

கே இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கலாம். எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன் ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு என்ற போதிலும் படத்தின் பெயர் ஒரு ஜாதி சார்ந்த நிலை தேவையில்லை. அதைத் தவிர்த்து இருக்கலாம்.    சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை  10.3.2022 அன்று கள்ளன் திரைப்படத்திற்குத் தடைக்கோரி முறையான ஆவணத்தோடு கள்ளர் பண்பாட்டு மையம் சார்பில் கலைமணி அம்பலம்  வழக்குத் தொடுத்தார். இது சம்பந்தமாக , தென்னிந்திய பார்வார்ட் பிளாக் தலைவர் திருமாறனிடம் தொடர்பு கொண்டு சட்டரீதியாகவும், போராட்ட ரீதியாகவும் துணை நிற்போம் 



எனக் கூறிய பலர் உதவியில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் நேரில் ஆஜராகும் படி உத்தரவு வந்தது.  விசாரனை மீண்டும் ஏப்ரல் மாதம்  2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  கள்ளன் திரைப்படத்தை தென்மாவட்டத்தில் மதுரை இராமநாதபுரம் (எம்.ஆர் விநியோக உரிமை) இத்திரைப்படத்தை திரையிடக்கூடாது என திரைப்பட விநியோகிஸ்தர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய சமூகத்தில் பெரியவர்கள் ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் நோக்கோடு படத்தின் தலைப்பு இருக்கிறது என்று ஒத்துக் கொண்டார்கள். திரைப்படத்தை அப்போது வெளியிடவில்லை. 

திரைப்பட இயக்குனர் சந்திரா தங்கராஜ்  உங்கள் படத்தை நீங்கள் தாராளமாக வெளியிட்டுக் கொள்ளலாம். அதற்கு சமூகம் தடையாக இருக்காது. படத்தின் தலைப்பைத் தான் மாற்றச் சொல்கிறோம் என்று கூறினாலும்


இதை போன்ற  மாற்று சமூக பெயர் கொண்ட  படைப்புகள் வந்ததா? ஆம் விஜயகாந்தின் தெற்கத்திக் கள்ளன் கதை விதிவிலக்கு, மருதநாயகம் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது ஆனால் தயாரிப்பு இதுவரை தடையாக காரணமாக இருந்தது தான் ஜாதி   பட்டங்கள் பெயர் விவாதம் இல்லை இதில் நேரடியாக ஜாதி என்று வருகிறது  உங்களுக்கு இந்நாட்டில் இருக்கும் அதே ஜனநாயக உரிமை தான் இந்த மண்ணில் பிறந்த அணைத்து மக்களுக்கும் இருக்கிறது. யாரும் சொல்வது போல் அந்த வழக்குத் தள்ளுபடியாகவில்லை. 

 உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கு சம்பந்தமாக எதிர் தரப்பினர்  வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா? மீண்டும் மீண்டும் உங்கள் தவறை திருத்தி கொள்ளாமல், ஒரு சமூகத்தினர் மீது வன்மத்தைத் தூண்டும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறீர்கள். இன்று ஒரு படி மேல் போய் இந்த மக்கள் எல்லாம் சாதிவெறி பிடித்தவர்கள் என பிம்பப்படுத்த முயல்கிறீர்கள். ஒரு திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டத் துடிக்கும் தாங்கள்  தென்னக மக்கள் சார்ந்த சமூகத்தை நீங்கள்  இழிவுப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பது பலரது வினா ? விரிவான விவாதம் நீதிமன்றத்தில் தீர்வு வந்த  பின்னர் தான்.   தற்போது இன்று பெருங்காமநல்லூர் படுகொலை  நினைவு தினம் இந்த நிலைக்கெதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடியபோது, ஆளும் வர்க்கம் அவர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிட்டது. மக்கள் அதற்குப் பதிலடி கொடுக்க முயற்சிக்கும் போது அவர்களை வன்முறையாளர்கள் என்றும் அபாயகரமான வகுப்பினர் என்றும் முத்திரை குத்தியது. அதில் பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள், நாடோடிகள் போன்ற ஏற்கனவே நெருக்கடியில் இருந்தவர்களைக் கொடூரமானவர்கள் என்று அறிவித்து, அவர்களின் பெயர்களைப் பதிவு செய்தது. அவர்களின் எண்ணிக்கை மற்றும் இயல்புகளைக் கண்டறிந்து, அவர்களது செயல்பாடுகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அரசு 1861 ஆம் ஆண்டு இந்தியக் காவல் சட்டத்தை உருவாக்கியதன்படி ஐரோப்பியப் பாணியிலான காவல் அமைப்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டது. அது ஏற்கனவே இருந்து வந்த பாரம்பரிய காவல் அமைப்பைச் சட்டவிரோதமாக்கியது. அந்த வகையில்தான், தென்தமிழகத்தில் பாரம்பரிய அமைப்பின்படி திசை காவலாளிகள் ஆகவும், ஸ்தலக் காவலாளிகள் ஆகவும் இருந்து வந்த கள்ளர், மறவர், வலையர் போன்ற ஜாதியினர் தங்கள் குலத் தொழில்களை இழக்க நேரிட்டது. அவர்களுக்குக் காவல் மானியமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதோடு, அதுவரை அவர்கள் பெற்றுவந்த காவல் கூலியும் சட்ட விரோதமாக்கப்பட்டது. இதனால் அவர்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். அதனையொட்டி போராட்டங்கள் வெடித்தது. அதனையே காரணம் காட்டி அவர்களையும் குற்றப் பரம்பரையாக பிரிட்டிஷார் அடையாளப்படுத்தினர்.


பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் நவீனப் பொருளாதாரம் இந்தியச் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாகப் பல பழமையான சமூகங்களின் பாரம்பரியத் தொழில்கள் ஒழித்துக்கட்டப்பட்டன. இதனால் ஊர்சுற்றி வணிகம் செய்யும் சில நாடோடி இனக்குழுக்கள் தங்கள் அன்றாட வருமானத்தை இழக்கத் தொடங்கினர். மேலும், இவர்கள் பிரிட்டிஷாரின் நவீன சந்தைப்படுத்தல் கொள்கைக்கு எதிரிகளாக இருந்தனர். அவர்கள் ஊர் ஊராக மக்களது வாழ்விடங்களுக்குச் சென்று நேரடியாகப் பொருள்களைப் பண்டமாற்று முறையில் விற்றனர். இது ஒரு இடத்தில் கூடி பொருள்களை விற்கின்ற நவீன சந்தை முறைக்கு எதிராக இருந்தது. எனவே, இந்த நாடோடி வணிகர்களைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலையாக வைக்க வேண்டிய அவசியம் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது.



இதனால் நாடோடி வணிகர்களும் சந்தை வணிகர்களும் பல இடங்களில் மோதிக் கொண்டனர்.குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) திருத்தங்களுக்குப் பிறகு 1911- ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேலும் சில ஜாதிகளையும் பழங்குடிகளையும் குற்ற மரபினராக அறிவித்து, அவற்றைப் பதிவுசெய்யத் துவங்கினர். அதன்படி, சென்னை மாகாணம் முழுவதும் மொத்தம் 14 லட்சம் மக்கள் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்தச் சட்டம் படிப்படியாக இந்தியா முழுவதிலும் விரிவாக்கப்பட்டது. சுமார் 213 ஜாதிகளைக் குற்றப் பரம்பரையினர் பட்டியலில் ஆங்கிலேய பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி அரசு இணைத்தது. 1911- ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம் சென்னை மாகாணத்திற்கு விரிவுபடுத்தப்பட்ட போதிலும், அச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி வரையறைகள் 1913 ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் 89 ஜாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றன.       மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி அந்த பட்டியலில் கள்ளர்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக இந்தச் சட்டத்தின் கீழ் 320 ஆண்களில் 70 பேர் தண்டிக்கப்பட்டார்கள். நீதிபதியுடைய பரிந்துரையினை ஏற்றுக் கொண்டு குற்றப் பரம்பரையாகப் பிரகடனம் செய்யப்பட்டு காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டார்கள். அதன் காரணமாக 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்கள் தங்கள் இருப்பிடம் மற்றும் வெளியூர் செல்லுதல் குறித்த தகவல்களைக் குற்றப் பரம்பரையினர் சட்டப்பிரிவு 10-ன்படி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கைரேகைச் சட்டத்தின்படி பதிவு செய்யும் வேலை மதுரை திருமங்கலம் தாலுகாவில் தொடங்கியது. காளப்பட்டி, போத்தம்பட்டி, பெருங்காமநல்லூர், தும்மக்குண்டு, குமரன் பட்டி ஆகிய ஊர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டன. பதிவுசெய்தல் வேகமாக நடந்து வந்தது என்றாலும், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

பதிவு செய்து முடிப்பதற்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதியாக இருந்த ரெய்லி 1920 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதிவரை காலக்கெடு விதித்திருந்தார். ஆனால், தேர்வு செய்யப்பட்டிருந்த 158 கிராமங்களில் 11 கிராமங்களில் மட்டுமே பதிவு செய்யும் பணி முடிக்கப்பட்டிருந்தது.

கள்ளர் மக்கள் தொகை சுமார் 60,000 ஆக இருந்தபோதும் 3000 பேர் மட்டுமே பதிவு செய்தனர். மேலும், ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்வதற்கு வந்துள்ளனர் என்ற தகவல் அறிந்து அதிகாரிகள் கோபம் கொண்டனர். அதிக எண்ணிக்கையில் கள்ளர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமானது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து கூறிவந்தார். அதுமட்டுமல்லாமல் குற்றப் பரம்பரையாகப் பதிவு செய்த ஒவ்வொருவரும் தன் இருப்பிடத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பகல் 11 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், ஊர்த் தலையாரி கூட அவரைக் கைதுசெய்யலாம். அதேபோல, சந்தேகப்படும் படி ஒருவர் நடந்து கொண்டால் கூட அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை உண்டு. காலையில் சூரியன் உதித்ததிலிருந்து மாலையில் சூரியன் மறையும்வரை அவர்கள் தம் வீட்டிலிருந்து வேறு எங்காவது போகவேண்டுமானால், கிராமத் தலைவரால் வழங்கப்படும் ராதாரி சீட்டு எனும் அனுமதிச் சீட்டைப் பெறவேண்டும்.



1920 ஆம் ஆண்டு, உசிலம்பட்டி அருகில் பெருங்காமநல்லூர் கிராமத்தில், இச்சட்டத்தை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 'மாயாக்காள்' என்ற பெண்மணி உட்பட 16 பேர் மரணம் அடைந்தனர். இது, குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய போராட்டமாகும்.

இது குறித்து தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கூறும் போது.

''பெருங்காமநல்லூர் விபத்து நடந்து இன்றோடு நூறாண்டுகள் கடந்து விட்டன.1920 ஆம் ஆண்டில், பெருங்காமநல்லூரில் இதே நாளில் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிறமலைக்கள்ளர் என்ற ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது ஜாதியப் போராட்டமல்ல, வெள்ளையனின் காலனியாதிக்கத்தின் ரேகைச் சட்டத்தை எதிர்த்த போராட்டம். குறிப்பிட்ட சமூகத்தினரை பிறப்பின் அடிப்படையாகக் கொண்டு குற்றப்பரம்பரையினர் என கருதக்கூடிய அந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தான் அது.ஜாலியன் வாலாபாக் நிகழ்வை அடுத்து, அதேபோன்று நிகழ்ந்த கசப்பான நிகழ்ச்சிதான் பெருங்காமநல்லூரில் நடந்ததும். ஜாலியன் வாலாபாக் படுகொலை தெரிந்த அளவுக்கு பெருங்காமநல்லூர் தெரியாமல் இருப்பது மற்றொரு கொடுமையாகும். இதேபோன்ற ரேகைச் சட்டத்துக்கு எதிராகத்தான் தென்னாப்பிரிக்காவில் காந்தியும் போராடினார். எனவே, இதுவும் சர்வதேச நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய ஒன்று.குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே இந்தச் சட்டத்தின்கீழ் சேர்த்திருந்தார்கள். ஆனால், அதை எதிர்த்து அனைத்து சமூகத்தினரும் குரல்கொடுத்துவந்தனர். இந்நிகழ்வே, இது சாதியம் சார்ந்த போராட்டம் இல்லை என எடுத்துரைக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்ட அந்த 16 பேரில், மோசமாகக் கொல்லப்பட்டவர், மாயாக்காள் என்ற பெண்மணி. அவர் பெருங்காமநல்லூரை சொந்த ஊராகக் கொள்ளாதவர். பெருங்காமநல்லூருக்கு வாக்கப்படு வந்தவர் தான் மாயாக்காள். கைரேகை சட்டத்தை எதிர்த்து, ஆண்களுக்கு மத்தியிலும் தைரியமாகக் குரல்கொடுத்து வந்தார்.எப்படி கீழவெண்மணி போராட்டம் இனத்தின் சமத்துவத்திற்கான போராட்டமாக அமைந்ததோ, பெருங்காமநல்லூரும் சமத்துவம் சார்ந்த போராட்டமாகும். ஆட்சியாளர்களை எதிர்த்துத், துணிந்து குரல்கொடுக்க நமக்குக் கற்றுத்தருகிறது, இந்த பெருங்காமநல்லூர் நிகழ்வு. நான் இது தொடர்பாக பாடல் வரிகளையும் எழுதியுள்ளேன். 'கொடுங்கோலுக்கு அடங்காத பெருங்காமநல்லூர்...' என்ற வார்த்தைகளோடு தொடங்கும் அந்தப் பாடல். கைரேகை சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஜோசப் குரல் கொடுத்துவந்தார். ஜோசப்பின் பெயர் மக்களின் வாயில் நுழையாததால், மக்கள் அனைவரும் இவரை ரோஜாப்பூ என்று அழைத்துவந்தனர். இன்றும் அவ்வூர் மக்களிடையே அவர் ஹீரோவாகத்தான் திகழ்கிறார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...