முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், ஏற்பாடு

நாட்டின் சைபர் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த நிறுவனங்களுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், ஏற்பாடு செய்துள்ளது

தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியை தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் மற்றும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்  செயலாளர் டாக்டர் சதீஷ் ரெட்டி ஆகியோருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு கே.சி., அஜித் தோவல், இன்று தொடங்கி வைத்தார். தேசிய சைபர் பயிற்சி, (NCX) ஏப்ரல் 18-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு ஒரு கலப்பினப் பயிற்சியாக நடத்தப்படும். அரசு மற்றும் முக்கிய துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் முகாமைகளின் மூத்த மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இணையத்தளப் பாதுகாப்பு  மற்றும் தரவு மீட்டெடுப்பு குறித்த  பயிற்சியை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS), அதன் அறிவுசார் கூட்டாளியான இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிளுடன் (DSCI) இணைந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆதரவுடன் நடத்தப்படுகிறது. உலகளவில் பல பெரிய அளவிலான இணைய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை நடத்துவதற்கு அங்கீகாரம் பெற்ற்றுள்ள எஸ்டோனிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான சைபர்எக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

லைவ் பயர் மற்றும் திறன்சார்ந்த பயிற்சிகள் மூலம் 140-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள்  இணையவழி ஊடுருவலைக்  கண்டறியம் தொழில்நுட்பங்கள், மால்வேர் தகவல் பகிர்வு தளம் (MISP), பாதிப்பைக் கையாளுதல் சோதனைத் திறன் போன்ற பல்வேறு முக்கிய இணையப் பாதுகாப்புத் தொடர்பான அம்சங்களில் பயிற்சி வழங்கப்படும்.

இணையதள அச்சுறுத்தல்களை நன்கு புரிந்து கொள்ளவும், தயார்நிலையை மதிப்பீடு செய்யவும், இணையதள  நெருக்கடி மேலாண்மை மற்றும் ஒத்துழைப்பிற்கான திறன்களை மேம்படுத்தவும் தேசிய சைபர் பயிற்சி நிறுவனம் முக்கிய தலைவர்களுக்கு உதவிடும். இது சைபர் பாதுகாப்புத் திறன்கள், குழுப்பணி, திட்டமிடல், தகவல் தொடர்பு, விமர்சன சிந்தனை மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றை மேம்படுத்தவும் சோதிக்கவும் உதவிகரமாக இருக்கும்.இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.சி., அஜித் தோவல், நாட்டில் நடைபெற்று வரும் டிஜிட்டல் புரட்சி மற்றும் அரசு தொடங்கியுள்ள ஏராளமான டிஜிட்டல் செபைகள் குறித்து எடுத்துரைத்தார். எந்தவொரு வெற்றிகரமான டிஜிட்டல் மாற்றத்திற்கும் சைபர் பாதுகாப்பு அடித்தளமாக உள்ளது என்று அவர் கூறினார். சைபர்ஸ்பேஸில் ஏற்படும் எந்த அச்சுறுத்தலும் நமது சமூக, பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கிறது என்பதால் நாம் நமது சைபர்ஸ்பேஸைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் பேசுகையில், இந்திய சைபர்ஸ்பேஸின் முக்கியத்துவத்தையும் குடிமக்கள், வணிகங்கள் மற்றும் அரசு ஆகியவற்றின் தரவுகளை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். உலகளவிலும், நாட்டிலும் நடைபெறும் Ransomware மற்றும் விநியோகச் சங்கிலி  தாக்குதல்களின் அதிகரிப்பு குறித்தும், இந்த தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்றும் தெரிவித்தார். ஆயில் இந்தியா நிறுவனத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட ransomware தாக்குதலையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணையதள பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...