முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் பிஜேபி இல்லை ,பின்வாங்கிப் பயந்து பதுக்கிய நடிகர் கே.பாக்யராஜ்

 நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ்  மன்னிப்புக் கேட்ட காணொளியும் வெளியிட்டுள்ளார்.                                    சமூக வலைதளங்களில் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே" பாடல் இசையமைப்பாளர் இளையராஜா விவாதம் கடந்த வாரம் 

"நான் ஆளான தாமரை... ரொம்ப நாளாக தூங்கலைனு" தனது படத்தில்  பாடல் வைத்தவர் இயக்குனர் நடிகர் பாக்யராஜ்  என விவாதம் நடத்த அரசியல் பிரச்சினை ஒரு காரணமாக அமைந்தது. அதை வெகுவாக சமாளித்தவர் .நான் பேசியதை யார் தவறாக நினைத்திருந்தாலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் , நான் பிஜேபி கிடையாது. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்து, சினிமாவிற்குள் வந்து தமிழ் தான் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

'பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நூலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட, நடிகரும், திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டு பேசிய போது,"பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். இத்தகையவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள். பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தான் பேசியது குறித்து உடனடியாக  நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ்  மன்னிப்புக் கேட்ட காணொளியும் வெளியிட்டுள்ளார். அதில், "இன்று காலையில் நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசியபோது, குறைபிரசவத்தில் என்ற வார்த்தை வந்து, ரொம்ப தவறான ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணிவிட்டது என்று கேள்விபட்டபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கும், நான் பேசிய குறை பிரசவரத்திற்கும் சம்பந்தமில்லை. கிராமத்தில் ஒரு மாதம், இரண்டு மாதம் முன்னால் பிறந்தவங்களை குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வார்கள். அவர்களிடம் எந்தத் குறையுமிருக்காது என்று சொல்வார்கள். மற்ற படி, மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையோடு தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று அல்ல, என்றைக்கும் நான் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இப்படி சொல்லியிருப்பேனோ என்று யார் நினைத்திருந்தாலும் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் பிஜேபி கிடையாது. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்து, சினிமாவிற்குள் வந்து தமிழ் தான் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று இருக்கிறேன். தமிழ் தலைவர்கள், திராவிட தலைவர்கள், அந்த காலத்திலிருந்து பெரியாரிலிருந்து அண்ணா, கலைஞரில் இருந்து, எம்ஜிஆர், ஜீவாவிலிருந்து பார்த்து பார்த்து வந்ததால் அவர்களுடைய கருத்துக்கள் தான் என் மனதில் ஊறிப்போய்க் கிடக்கிறது. அந்தத் திராவிட கருத்துக்களின் அடிப்படையில் தான், நான் எடுத்த சினிமாக்களை நீங்கள் பார்த்தீர்களானால், திராவிட கருத்துக்கள் தான் வந்திருக்குமே தவிர, வேற மாதிரி என்னுடைய மனதில் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டிக்குள் தமிழகத் தலைவர்கள் என்ற மனதோடு தான் இருந்துக் கொண்டு இருக்கிறேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். நன்றி" எனத் தெரிவித்தார்.பாக்கியராஜ் இளையராஜா இருவருக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. இளையராஜா இசை மட்டும் தான் அறிவு எனற நினைப்புள்ள முன்கோபி, ஆனால் பாக்கியராஜ் பன்முகத் தன்மை கொண்ட நடிகர் இயக்குநர் மற்றும் பத்திரிகையாளர். பாக்யா இதழ் கேள்வி பதில் படித்தவர்கள் இதை நன்கு அறிவர். 

பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை ஏப்போதோ நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள்லிருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை!

‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! 

அயராத உழைப்பும், விடா முயற்சியும், இசையின் மீதான காதலும் அவரை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டன! அவர் ஒரு பெரிய விருட்சமாக கிளை விரித்து நிற்கிறார்! ஆனால், வேர்களை புறம்தள்ளி வெறுக்கப் பார்க்கிறார்!

சுமார் பத்தாண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரச்சார அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இசைக்குழுவாக அவர் இயங்கிய காலமும், அதன் பின் எட்டாண்டுகள் சென்னையில் சினிமா வாய்ப்புக்காக பசி, பட்டினியோடு தெருவில் திரிந்த காலமும் அவருக்கு நல்ல பட்டறிவையும், பக்குவத்தையும் தந்திருக்க வேண்டும். ஆனால், வெற்றியின் உச்சமும், செல்வக் குவியலின் திரட்சியும் அவருக்குள் ஆணவத்தை உருவாக்கிவிட்டன! என்பதே மூத்த பத்திரிகையாளர் கருத்து.

அவர் ஆதி சங்கரரையும், ரமணரையும் வணங்குகிறார்!

அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளலாரை பெரிதாக பொருட்படுத்தமாட்டார்!

தமிழிசையைத் திருடி கர்நாடக இசைக்கு மாற்றிய தியாகய்யரைத் தான் விதந்தோதுவார்!

உண்மையான சுயம்புவான தமிழ் இசை மாமேதை ஆபிரகாம் பண்டிதரை பொருட்படுத்தமாட்டார்! என்ற குற்றச்சாட்டிலும் உண்மை உண்டு 

இசைக்கு உயிர் தருவதில் தமிழுக்கும், கவிதைக்கும் உள்ள பங்களிப்பை முற்றாக நிராகரிப்பார்!

பலரது கூட்டுப் பங்களிப்பில் தான் பாடலின் வெற்றி சாத்தியமாகிறது என்றால், ஏற்க மாட்டார்!

சகலமும் நானே, சர்வமும் நானே..”என்பதை விடாப்பிடியாக கொண்டிருப்பவர்!

வெற்றி பெற்றவன் சொல்வதெல்லாவற்றையுமே வேதவாக்காக ஏற்கிறது இந்த சமூகம்!

இசைக் கடவுள், இசைக் கடல், இசை தெய்வம், ராகதேவன், இசை ஞானி..என்று உணர்வு ரீதியாக மக்கள் அவரை உச்சத்தில் வைத்துவிட்டனர். ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக அவரே இவற்றை எல்லாம் நம்புவது தான் சோகம்!  இதனால் தனக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்பதையோ, தன்னுடைய பிறப்புக்கு முன்னும் பெரும் இசை மேதைகள் இருந்துள்ளனர், தனக்கு பின்னும் தன்னை விஞ்சக் கூடியவர்கள் வந்து கொண்டுள்ளனர் என்பதை உணர மறுக்கிறார்.

இளையராஜா எனும் இராஜையா பண்ணைபுரத்தில் கரியமனம்பட்டியில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களை அதட்டியும், மிரட்டியும் வேலை வாங்கிய கங்காணி எம்.ஆர்.ராமசாமிக்கும் அவரது நான்காவது மனைவிக்கு பிறந்தவர் என்பதையும், மூன்றாவது மனைவிக்கு பிறந்த பாவலர் வரதராஜனிடம் ஆரம்பகால இசையைக் கற்றவர் என்பதையும் மாற்றிவிட முடியாது. சமகால வரலாறு என்பதால் அதில் புனைவைப் புகுத்தி, அவர் பிறக்கும் போதே வானிலிள்ள தேவர்கள் வாழ்த்தி இசை மழை பொழிந்தனர் எனக் கூறிவிடமுடியாது.

1950 களிலும், 1960 களிலும் பாவலர் வரதராஜன் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். பாவலர் வரதராஜன் ஒரு உண்மையான போராளி! தன் கலைத் திறமையை பாட்டாளி மற்றும் தொழிலாளர்களின் வர்க்க எழுச்சிக்கும், விழிப்புணர்விற்கும் பயன்படுத்தியவர். ” நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒப்பற்ற கலைஞன்” என்பதை அவர் பகிரங்கமாகவே பெருமையோடு அந்த கட்சி மேடைகளில் சொல்வார்.

அந்தக் காலகட்டத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் கட்சி கூட்டம் நடந்தது. பாவலர் வரதராஜனின் இசை கச்சேரியைத் தொடர்ந்து பேச வந்த தோழர்.ஈ.எம்.எஸ். நம்பூதரிபார்ட் சொன்னார். ”இதோ இங்கே நம்மை இசைவெள்ளத்தில் மூழ்கடித்தாரே இவர் தான் கேரளத்தில் நம் கம்யூனிஸ்ட் அரசை காப்பாற்றியவர். இடுக்கியில் நடந்த இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு பிழைக்கும் என்ற சமயத்தில் முதல்வரோ, அமைசர்களோ போய் பவர் பிரயோகத்தை காட்டக் கூடாது என்ற நிலையில் பட்டிதொட்டி எங்கும் பாவலரைத் தான் இசைப் பிரச்சாரத்திற்கு அனுப்பினோம். அவர் தான் வெற்றியை ஈட்டித் தந்தார். இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த எளிய தோழர் ஒருவரால் தான் நமது மந்திரி சபையே பிழைத்தது” என்று சொல்லி பெருமைப்படுத்தினார்.

இளையராஜாவுமே நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.எம்.அலிக்கு ஆதரவாக கச்சேரி செய்ய வந்த போது, தான் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்ததால் தனக்கு ஏற்ப்பட்ட இன்னல்கள் குறித்து பேசினார். ‘கம்யூனிஸ்ட் மேடைகளே தங்களுக்கு கெளரவத்தை பெற்று தந்ததையும், வாழ்வாதாரமாக இருப்பதையும்’ கூறி நெகிழ்ந்தார்.

ஆனால், அதே இளையராஜா ஒரு மேடையில் எழுத்தாளர் சு.சமுத்திரம் நானும், இளையராஜாவும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்பதை சொன்ன போது, ”நான் ஒன்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவனல்ல” என பட்டென மறுத்து கோபமாகப் பேசினார்! உடனே சு.சமுத்திரம் இளையராஜாவின் சாதியைக் குறிப்பிட்டு, ‘அதை நீ ஏன் மறுக்க வேண்டும்’ என்ற தன்மையில் பேசிய நிகழ்வையும் ஜீவபாரதி பதிவு செய்துள்ளார். இதே போல பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் இளையராஜாவின் பெருமைகள் குறித்து எழுதிய நூலில் இளையராஜா ‘ஜாதி’ பற்றி குறிப்பிட்டதால், அந்த நூலுக்கே நீதிமன்றத்தில் தடை பெற்றார்.

இதன் மூலம் இமாலய வெற்றியை குவித்த போதிலும், இன்றைய நிலையில் இளையராஜா தான் பிறந்த சாதியை தாழ்வாக கருதி மறைக்கிறார் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் அதை மறைக்கத் துடித்தது அவரது மனப்பான்மையின் வெளிப்பாடு தான்! இதன் மூலம் அந்த சமூகத்தில் பிறந்த லட்சோப லட்சம் எளிய மனிதர்களுக்கு இயல்பாக அவர் குறித்து ஏற்படும் பெருமிதத்தையும், தன் நம்பிக்கையையும் அவர் சீர்குலைக்கிறார். ஏனென்றால், அவர் இசை தெய்வமாகவல்லவா இருக்கிறார்!

பணம், அதிகாரம், புகழ் இந்த மூன்றிலும் கட்டுக் கடங்காத ஆர்வமும், ஆசையும் உள்ளவர் தான் இளையராஜா! இதை அவரோடு தொடர்புள்ள யாருமே மறுக்க முடியாத உண்மை. தன்னிடம் பேசுபவர்கள் தங்களை பவ்யமாக வைத்துக் கொண்டு ஒடுங்கிய நிலையில் பேச வேண்டும். தன் காலைத் தொட்டு வணங்கி பேசுபவர்களுக்கு தான் ‘ஸ்பெஷல் அட்டென்ஷன்’ தருவார்! காசு விவகாரத்தில் படுகறாராக இருப்பார்! மது, மாது, கறுப்பு பணம் இந்த மூன்றையும் விலக்க முடியாதவர் என்பதெல்லாம் அனைவரும் அறிந்தது! ஆனால், தீடீரென முற்றும் துறந்த மாமுனிவர் போன்ற தோரணைகளை அவர் வெளிப்படுத்துவார். அவரது இந்த போலித் தனங்களுக்கு உலகம் புளகாங்கிதப்பட வேண்டும் எனவும் நினைப்பார்!

இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால், அவர் சகவாசமெல்லாம் உயர்சாதியினரோடு தான்! அவர்களோடு ஒன்றாக அறியப்படுவதில் அவர் பெருமிதம் கொள்கிறார். அவர்களால் கொண்டாடப்படுவதற்கே அதிக கவனம் காட்டுகிறார். அதற்கேற்பவே தன் வாழ்க்கை முறைகளை கட்டமைத்துக் கொண்டுள்ளார். இவை குறித்தெல்லாம் அவர் தம்பி கங்கை அமரன் பல சம்பவங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். ஆனால், சினிமா துறையில் அந்த சமூக இயக்குனர்களோடு அவர் மோதியதால் அவரது உச்சத்தை முறியடித்தவர்களும் அவர்கள் தான்!

பெருமளவு அந்தணர் மட்டுமே கோலோச்சும் டிசம்பர் மாத கர்நாடக சங்கீத கச்சேரிக்கு அவரை அழைக்க வேண்டும். திருவையாறு தியாகய்யர் ஆராதனைக்கு அழைக்க வேண்டும். இசை மும்மூர்த்திகளின் வரிசையில் தன்னையும் சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் அவரது நிறைவேறாத ஆசைகள்!

அவருக்கு கிடைத்த மேஸ்ட்ரோ பட்டத்தைவிட, அவருக்கு இது நாள் வரை கிடைத்த அனைத்து பட்டங்களையும் விட, அவர் ஒரே ஒரு விஷயத்தில் அங்கீகாரம் பெற்றுவிட்டாரென்றால், தன் ஜென்ம சாபல்யம் தீர்ந்ததாகக் கருதுவார்! ஆனால், அது தான் அவருக்கு கிடைப்பேனா…, என மாயமானாக அவரை வாட்டி எடுக்கிறது.

அது, ”நீங்க தாங்க உண்மையான அந்தணர்” என உரியவர்கள் அவரை அங்கீகரிக்க வேண்டும் என்ற அவரது உள்ளக் கிடக்கை தான்! அதை பல மூத்த பத்திரிக்கையாளர்கள்.

 1976 ஆம் ஆண்டில் இளையராஜா, பாரதிராஜா, கவுண்டமணி, மலேசியா வாசுதேவன் இவர்கள் ஜாதி பற்றி எல்லாம் அப்போது இருந்த மக்கள்  கவலைப்படவில்லை. இரசித்தோம். அவரது பாடல்களில் இணைந்து வரும் பாஞ்சாலி உற்பட பலவற்றை நண்பர்களிடம் விவாதம் செய்த காலம் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...