பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2) அளவிலான தேர்வு 2021
மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2021 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.
2) தென் மண்டலத்தில் 2,94,445 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி & வேலூரிலும், ஆந்திரப்பிரதேசத்தில் திருப்பதி, நெல்லூர், கர்நூல், சிராலா, குண்டூர், காக்கிநாடா, ராஜமுந்திரி, விஜயவாடா, விசாகப்பட்டினம் & வைசியநகரம் மற்றும் தெலங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர் & வாரங்கல் ஆகிய இருபது நகரங்களில் உள்ள 23 மையங்களில் நடைபெற உள்ளது.
3) தென்மண்டலத்தில் இத்தேர்வு 24.05.2022 முதல் 27.05.2022 வரையிலும், 30.05.2022 முதல் 03.06.2022 மற்றும் 06.06.2022 முதல் 10.06.2022 வரையிலும் மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் - முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 10 மணி வரை, 2-வது ஷிப்டு பிற்பகல் 12.30 மணி முதல் 01.30 மணி வரையிலும் 3-வது ஷிப்டு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும்.
4) தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பாக இருந்தும், அதன் பிறகு அவர்களது தேர்வு நாள் வரை மட்டும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளத்தக்க வகையில், எங்களது வலைதளத்திலிருந்து மின்னணு – தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதுஃ இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
5)கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டுக்காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா / பட்டன் ஹோல் / ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் எடுத்து வர முற்றிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. அது போன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவன் / அவளது விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன் சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்து வரும் 3 – 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் எதையும்தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
6) மின்னணு தேர்வு கூட அனுமதிச் சீட்டு மற்றும் அசல் அடையாள ஆவணம் இன்றி வரும் விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வுக்கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் தென்மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (லேண்ட் லைன்- 044 – 2825 1139 & செல்போன்: 94451 95946)உதவி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
7) கொவிட்-19-ஐ கருத்தில்கொண்டு பணியாளர் தேர்வாணையம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன், விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கூட மின்னணு அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ளபடி அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி, தேர்வை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
8) விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இந்தசெய்திக் குறிப்பு வெளியிடப்படுவதாக பணியாளர் தேர்வாணயத்தின் தென்மண்டல துணை இயக்குநர் திருமதி எம் லதா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்