முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்லக்கு சுமப்பது மத சடங்கு மத சுதந்திரம் தலைவர்கள் முறையீடு விரைவில் முதல்வர் முடிவு செய்வார் அமைச்சர் பதில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில்

கும்பாபிஷேகம் மே மாதம்  8 ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் யாகசாலை நேற்றுத் துவங்கி முதல் கால பூஜை நடந்ததில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு தருமபுர ஆதீனம் சார்பில் கட்டளைத் தம்பிரான் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு அருகே உள்ள கட்டளை மடத்தில் தங்கியிருந்த தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து இரு சன்னிதானங்களும் யாகசாலை பூர்ணாஹூதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 அப்போது பூர்ணாகுதி நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது. தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் இரண்டு ஆதீன மடாதிபதிகளின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது    .  பல்லாக்கு தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று சட்ட மன்ற பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் நேரமில்லா நேரத்தில் பேசியவர், பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லாக்கு தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும்.


ஆதீனத்தில் வசிக்கும் 72 பேரும் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குவதாக கூறுகின்றனர். தோளில் தூக்கி செல்வதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. மத சுதந்திர உரிமை அடிப்படையில் பல்லாக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டனப்பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது” என்று கூறினார்.


மேலும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தருமபுரம் ஆதீனத்தை பல்லாக்கு தூக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர். தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என பேட்டி அளித்தார். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லாக்கு தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள். வரும் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் தருமபுரம் ஆதீனத்துடன் முதலமைச்சர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்” என்றார். நாம் ஒன்றை இங்கு கவணிக்க வேண்டும் விளையாட்டு மைதானத்தில் வெற்றி பெற்ற 
மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதற்கு கடும் கண்டனம் மீறி தூக்கி சுமந்தால் கூட அது தடை செய்யலாம். என்ற நிலை வரும் .

 - மனிதனை மனிதன் தூக்கி சுமப்பது மனித உரிமை மீறல் எனவே சபரிமலையில் டோலி தூக்கும் தொழிலாளிகளுக்கு

தடை விதிக்க வேண்டும் என பல்வேறு குரல்கள் வரும்  இல்லை என்றால் கேரளா நீதிமன்றத்தில் முறையிடுவது கூட நடக்கலாம்.

இது மத சுதந்திரம் இதில் மனித உரிமைகள் மீரப்படுவதில்லை அதிக பக்தி மட்டுமே இதில் முதன்மையாக வரும்.

"பல்லாக்கு நகர் நுழைதல் என்பதன் பின்னணி."

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

 நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

 இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

 கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே!                                                      தரும்புரம் ஆதினம் சொல்வதை நன்றாக கவனியுங்கள்.500 ஆண்டு பாரம்பரியம். விஜய நகர பேரரசின் மதுரை நாயக்கர் கால ஆட்சியில் சைவ மடாதிபதிகள் மன்னருக்கு ஈடாக பல்லக்கில் நகர் நுழைதல் என்பது அதிகாலத்திற்கு எதிரான ஒரு சமய பண்பாட்டுப் போர்.

இன்றும் நாயக்கர்கள் ஆட்சியை தெலுங்கு சமகிருத மொழி வைதீக சமயத்தை எதிர்த்து நடக்கின்ற போராகவே பலரும் பார்க்கும் நிலையில்

என்ன அதை விதைத்த ஆரிய இனக் குழுக்கள் இடைசாதிகளைக் கொண்டு இதில் ஆதாயம் தேடப் பார்க்கிறது. என்ற குரல்களும் வருகிறது.
சபரி மலையில் இருக்கும் டோலி பற்றிய கருத்துக்களை பல்லக்கோடு ஏன் பொறுத்தி பார்க்கும் பார்வை கூடாது?தருமபுரம் ஆதினத்தில் பல ஆண்டுகளாக  நடைபெற்றுவரும் பட்டினப்பிரவேசம் என்னும் நிகழ்வை தடைசெய்து மயிலாடுதுறை வருவாய் கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

மனிதர்களை பல்லக்கில் மனிதர்களே சுமப்பது ஏற்புடையதில்லை  தான் ஏதோ இந்த முறைதான் ஆதினத்தை பல்லக்கில் சுமப்பது போல அரசு தடை விதித்திருப்பதில் அரசியல் இருப்பதாகத்தான் பலரால் பார்க்கப்படுகிறது.
உடனடியாக இந்துத்துவவாதிகள் இதை கண்டிப்பதும் திராவிட கட்சிகள் இதை ஆதரிப்பதும் ஊடகங்களில் பேசுபொருளாக்குவதும் இதில் உள்மறை அரசியல் தான் சந்தேகம் வலுப்படுத்துகிறது.

 போதாக்குறைக்கு தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களும் இதில் தலையிடுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு வலுசேர்க்கும் விதமாகதான் அமையும்.

மனிதர்களை மனிதர்களே சுமப்பது அநாகரிகமானது  தான் ஆனால் அது ஆதினங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஊரிலும் சுவாமி ஊர்வலங்களின் போது அதை மனிதர்கள் சுமந்து வருவதும் அதில் சுவாமி சிலைகளுக்கருகில் இருக்கும் அந்தணர்களையும் சேர்த்துதான் சுமந்து வருகிறார்கள். அழகர் வைபவம் உட்பட பல பல

தடை செய்தால் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் இல்லையேல் அமைதியாகக் கடக்க வேண்டும் அவ்வளவுதான். 

மனிதர்களை பல்லக்கில் மனிதர்களே சுமப்பது ஏற்புடையதில்லை  தான் ஏதோ இந்த முறைதான் ஆதினத்தை பல்லக்கில் சுமப்பது போல அரசு தடை விதித்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகதான் பார்க்க முடிகிறது.

உடனடியாக இந்துத்துவவாதிகள் இதை கண்டிப்பதும் திராவிடியன்ஸ் இதை ஆதரிப்பதும் ஊடகங்களில் பேசுபொருளாக்குவதும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

 போதாக்குறைக்கு தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களும் இதில் தலையிடுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு வலுசேர்க்கும் விதமாகத்தான் அமையும்  மனம் வருந்தி இதைப் பதிவிடுகிறேன்.‌ 

நாட்டில் எதைப் பற்றி விவாதிப்பது எதை விவாதிக்கக் கூடாது என்ற விவஸ்தையே கொஞ்சம் கூட இல்லாமல் போய் விட்டது நமது நாட்டின் சாபக்கேடு. மக்களின் துரதிருஷ்டம். 

நம் நாடு இதுவரை  காணாத அளவுக்கு  பொருளாதாரச் சரிவில் சிக்கித் தத்தளிக்கிறது.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது.‌ 

சராசரி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுது‌.  மக்களின் வாழ்வாதாரம் குறுகி வாழ்க்கையே கண்ணைக் கட்டுது.‌ இந்த நிலையில் இந்த பல்லக்கு அரசியல் ஆன்மீகம் கலந்த விவாதம் இங்கு நடக்கிறது.

கடவுளே! இந்தக் கல்நெஞ்சக் காரர்கள் பிடியில் இருந்து சாதாரண மக்களைக் காப்பாற்று! உனக்கு எனது வாழ்நாள் முழுவதும் பல்லக்கு தூக்குகிறேன்.

வாழ்க்கையில் தன் சுயலாபத்திற்காக அடுத்தவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப் பட்டவங்களுக்கு... பல்லக்கு தூக்குவது மிக மிக முக்கியம் தான்.‌ அதைத் தவறு என்று தடுக்க நினைப்போருக்கு அதைத் தடுப்பது தான் முக்கியம்.‌

அப்பாவி மக்களை வஞ்சித்து விட்டு பல்லக்கு தூக்கினால் என்ன? தூக்காவிடில் என்ன? 

ஆண்டவனுக்கே பல்லக்கு தூக்குவது அறவே பிடிக்காத போது... ஆதினத்துக்கு மட்டும் அதன் மேல் எதற்கு இந்த அவா.  

பல்லக்கு தூக்குவதால்...

பஞ்சத்தில் பரிதவிக்கும் பாமரனுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் பயன் கிட்டும் என்றால் அதைச் செய்வதில் தவறேதும் இல்லையே!

பல்லக்கு தூக்குவதால் நம் பாரத நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருந்து மீட்கப்படும் என்றால் அதை செய்வதில் தவறேதும் இல்லையே!

பல்லக்கு தூக்கினால் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்றால்... அதை செய்வதில் தவறேதும் இல்லையே!

இதை மறுக்கும் பலர் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களில் 

யாருக்காவது


பல்லக்கு தூக்கியே ஆகனும் என்று முடிவெடுத்து விட்டால்...‌ 

கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு பாடுபட்டு  உங்களை வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தைக்கு  ஆசான் தெய்வம் என பல்லக்கு தூக்கு! பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீமநாராயணனும் கயிலையில் வாசம் செய்யும் பரமநாதனும் பரவசமடைவர். கிருஸ்தவ மக்கள் குருவாக மதிக்கும் போப்பாண்டவர் கூட சமயத்தில் பல்லக்குத் தூக்கி அழைத்து வருகின்றனர் அதுவே மத சுதந்திரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.  வெற்றியூர்  ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1,411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.  சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக , வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா, மதர் சிறப்புப் பள்ளி, நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய