ரூ.47.56 லட்சம் மதிப்புள்ள 1020 கிராம் தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்
ரகசிய நுண்ணறிவு தகவலின் அடிப்படையில் ரியாத்திலிருந்து நேற்றிரவு சென்னை வந்த ஆந்திராவைச் சேர்ந்த மஹபூப் பாஷா இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் மறைத்து எடுத்துவரப்பட்ட 1020 கிராம் எடையுள்ள 6 தங்க ஸ்பேனர்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.47.56 லட்சம் ஆகும்.
இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்