பலநாடுகளின் ரூ.50.71 லட்சம் மதிப்பிலான கரன்சிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
பல்வேறு நாடுகளின் ரூ.50.71 லட்சம் மதிப்பிலான கரன்சிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து வந்த மூன்று பேர், கொழும்பிலிருந்து வந்த ஒருவர், பாங்காக்கிலிருந்து வந்த ஒருவர் ஆகியோரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்களது பெட்டிகள் மற்றும் காலணிகளில் மறைத்து வைத்திருந்த ரூ.50.71 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் திரு கே ஆர் உதய்பாஸ்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள்