பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8 ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6 ம் குறைக்கப்படுகிறது
பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6ம் குறைக்கப்படுகிறது - மத்திய அரசு அறிவிப்பு
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:
திரு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஏழைகளின் நலனுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். ஏழைகள் மாற்றும் நடுத்தர வகுப்பினருக்கு உதவி செய்ய பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். இதன் பயனாக எங்களின் பதவிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசுகளின் காலத்தை விட குறைவாக இருக்கிறது.
இன்று உலகம் சிரமமான நேரங்களை கடந்து கொண்டிருக்கிறது. கொவிட் -19 பெருந்தொற்றிலிருந்து உலகம் மீட்சி அடைந்து வந்தாலும் கூட, உக்ரைன் மோதல் வழங்கல் தொடர் பிரச்சனைகளையும் பல்வேறு பொருட்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாகப் பல நாடுகளில் பணவீக்கம் மற்றும் பொருளாதார அழுத்தம் உருவாகி உள்ளது.
பெருந்தொற்று காலத்திலும் கூட எங்கள் அரசு நலத்திட்டங்களை வெளியிட்டது. குறிப்பாகப் பிரதமரின் வறியோர் நல உணவுத் திட்டம். இது இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்படுகிறது.
சர்வதேச நிலை சவால் மிக்கதாக இருந்த போதும் அத்யாவைசிய பொருட்களின் பற்றாக்குறையோ தட்டுப்பாடோ இல்லாததை நாங்கள் உறுதி செய்தோம். வளர்ச்சி அடைந்த நாடுகள் சிலவற்றில் கூட சில பற்றாக்குறைகளிலிருந்தும் /இடையூறுகளிலிருந்தும் தப்ப முடியவில்லை. அத்யாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
உலக அளவில் உர விலைகள் அதிகரித்த போதும் இத்தகைய விலை உயர்விலிருந்து நமது விவசாயிகளை நாங்கள் பாதுகாத்திருக்கிறோம். பட்ஜெடில் ரூ.1.05 லட்சம் கோடி உர மானியம் என்பதோடு கூட நமது விவசாயிகளுக்கு மேலும் உதவிட கூடுதலாக ரூ 1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசின் அணைத்து துறைகளும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதனை மனதில் கொண்டு நமது மக்களுக்கு உதவ இன்று மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8 ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6 ம் குறைக்கப்படுகிறது இதனால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ 9.5 அளவுக்கும் டீசல் விலையில் ரூ 7 அளவுக்கும் குறையும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாக 2021 நவம்பரில் இத்தகைய வரிக்குறைப்பு அறிவிக்கப்பட்டபோது தங்களின் பங்காக வரிக்குறைப்பு செய்யாத மாநிலங்கள், இதே போன்று வரிக்குறைப்பை அமலாக்கி சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நான் வலியுறுத்துகிறேன்.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு (12 சிலிண்டர்கள் வரை ) சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 200 மானியமாக இந்த ஆண்டும் நாங்கள் வழங்குவோம். இது நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்யும். இதனால் ரூ. 6100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்
நமது இறக்குமதியில் அதிக பட்சத்தை சார்ந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான கச்சா பொருட்கள் மற்றும் உப பொருட்கள் மீதான சுங்க வரியையும் நாங்கள் குறைத்துள்ளோம் இதன் விளைவாக இறுதிவடிவ பொருட்களின் செலவு குறையும் .
இதே போல் இரும்பு மற்றும் எஃகு பொருட்களின் விலையை குறைக்க கச்சா பொருட்கள் மாற்றும் உப பொருட்கள் மீதான சுங்க வரியையும் நாங்கள் குறைத்துள்ளோம் . எகின் சில கட்ச பொருட்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்படுகிறது சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.
சிமெண்ட் கிடைப்பதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான போக்குவரத்து மூலம் சிமெண்ட் விலையும் குறையும். மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் மத்திய அரசு அடுத்த சில மணி நேரங்களில் விரிவான அறிவிக்கையை வெளியிடும் என குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள்