9 வழக்கறிஞர்கள், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 217-இன் உட்பிரிவு (1) தனக்களித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மூப்பு நிலை அடிப்படையில் (1) திருமிகு தாரா விதஸ்தா கஞ்சு, (2) திருமதி மினி புஷ்கர்னா, (3) திரு விகாஸ் மஹாஜன், (4) திரு துஷார் ராவ் கேடேலா, (5) திருமதி மன்மித் பிரீதம் சிங் அரோரா, (6) திரு சச்சின் தத்தா, (7) திரு அமித் மஹாஜன், (8) திரு கௌரங் காந்த், (9) திரு சௌரவ் பானர்ஜி ஆகிய வழக்கறிஞர்களை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
நீதித்துறை (நியமனப் பிரிவு), சட்டம் மற்றும் நீதி அமைச்சகம். உயர்நீதிமன்றங்களுக்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 224-இன் உட்பிரிவு (1) அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, பின்வருபவர்களை உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். 14.5 2022-ன் அறிவிக்கையின்படி, அவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து அவர்களது பதவிக்காலம் செயல்பாட்டுக்கு வருகிறது.
நீதித்துறை அலுவலர்களான திருமிகு அனன்யா பந்தோபாத்யாயா, திருமதி ராய் சட்டோபாத்யாயா, திரு சுபந்து சமந்தா ஆகியோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாகவும், வழக்கறிஞர் சச்சின் சிங் ராஜ்புத், சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், வழக்கறிஞர் திருமதி ஷோபா அன்னம்மா ஈபன், கேரள உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்