முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை பாதுகாப்பை மீறி நடுரோட்டில் பா ஜ க பிரமுகர் வெட்டிப்படுகொலை

பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளரான பாலச்சந்திரனுக்கு காவல்துறை பாதுகாப்பை மீறி நடுரோட்டில் வெட்டிப்படுகொலை.   


 சென்னை சிந்தாதிரிப்பேட்டை  பாலச்சந்தர் , மத்தியசென்னை பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைப்பான ஆதிதிராவிடர் பிரிவுக்கான மாவட்டத் தலைவர் நேற்றிரவு 7.50 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நின்று கொண்டிருந்தவருக்கு பாதுகாப்புக்காக உடன்  சென்ற துப்பாக்கி ஏந்திய காவலர் பாலகிருஷ்ணன், அருகிலிருந்த டீக்கடைக்குச்  சென்ற போது, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை நடுரோட்டில் திடீரென்று சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் பினமானார் சம்பவ இடத்திலேயே,  பின்னர் அந்தகா கும்பல் தப்பியோடியதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை பாலசந்தரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு  சோதனை மேற்கொண்டு கொலை நடந்த இடத்திலிருந்து கொலையாளிகளின் தடயம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட நிலையில் கொலையாளிகளை விரைவாகப் பிடிக்க மூன்று காவல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் ஐந்து தனிப்படை அமைத்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தனிப்படை காவல் துறையினர் கொலை செய்தவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தருகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பானது.கொலை செய்யப்பட்ட பாலச்சந்தருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டலிருந்து வந்துள்ளதன் காரணமாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டார் அது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,

முன் விரோதம் மற்றும் பண விவகாரம் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருக்கலாமெனத் தெரிய வந்துள்ளதாகவும் மேலும், இறந்துபோன பாலசந்தர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையிலுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கொலை வழக்கில் மூன்று பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாகவும், பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய், மற்றொருவர் ரவுடியான கலைவாணன் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் பாலச்சந்திரனுக்கு பாதுகாவலராக கடந்தாண்டில் வீரபத்திரன் என்ற காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதே, அவரிடம் பிரதீப், சஞ்சய் மற்றும் கலைவாணன் ஆகிய மூவரும்  பாதுகாவலர் வீரபத்திரனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரதீப் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் வெளியில் வந்துள்ளான்.

நேராக பாலச்சந்தரின் உறவினரின் துணிக்கடைக்கு சென்று என் வழியில் அடிக்கடி குறுக்கே வருகிறான் பாலச்சந்தர். அவரைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணனிடம் எத்தனை நாள் பாதுகாப்பு கொடுப்பீர்கள் என்று பார்ப்போம். என்றாவது ஒருநாள் அவரை தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறியுள்ளனர். இப்படி ரவுடி பிரதீப் சபதம் போட்டு பாலச்சந்தரை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாதுகாப்புக்கு இருந்த ஆயுதப்படை காவலர் டீ சாப்பிடுவதற்காக அருகிலிருந்த கடைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் டூவீலரில் வந்த ஒரு கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக்  கொலை செய்யப்பட்டார்.

வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது ..காலம்சென்ற இந்து முன்னணியின்  தலைவர் இராம.கோபாலன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டபோது அவருக்கு பணிவிடை செய்ய பாலச்சந்தரை நியமித்தனர் அப்போது அவரது வீட்டிலிருந்து  நகை பணம் திருடியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது ‌..

இந்து முன்னணியிலிருந்து விலகி  இந்து மக்கள் கட்சியில் இணைந்து உள்ளார் அப்போது இந்து மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம் திறப்பு அன்று மாலை அர்ஜுன் சம்பத் வருகிற நேரத்தில் மாட்டு தலை அலுவலகம் முன்பு அவரே போட்டு பிறர்  மீது பழி போட்ட  சம்பவத்தை அறிந்த அர்ஜுன் சம்பத் இவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதன் பிறகு காவல்துறை விசாரணையில் மாட்டு தலையை சென்னை புளியாந்தோப்பிலிருந்து இவரே வாங்கி வந்து தனது அலுவலகம் முன்பு போட்ட விபரம் காவல்துறை விசாரணையில் தெரிந்தது அப்போது அதிமுக ஆட்சி நடந்த நிலையில் மதக் கலவரங்களை உருவாக்க நினைத்த பாலச்சந்தரைக் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பொறுப்பு வாங்கினார் அதன் பிறகு தனக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது எனக் கூறி ‌ பாதுகாப்பு வாங்கி ஆயுத காவலருடன் பாலச்சந்தர் இருந்து வந்த நிலையில்


உள்ளூர் ரவுடிகளை எதிர்த்து தன்னை பெரிய ஆளாகக் காட்டி கொள்ள காவல்துறை பாதுகாப்புடன் பிரபல ரவுடி தர்கா மோகன் ஆட்கள் பிரதீப், கார்த்திக் ஆகியோருடனே அடிக்கடி மோதல் போக்கை கையாண்டு வந்ததாகவும்

ஆறு பேர் கொண்ட கும்பல் இவரை கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது ..

மேலே கூறப்பட்ட பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இது கட்சியின் விவகாரத்தில் நடந்த கொலையா ? அல்லது சொந்த விவகாரத்தில் கட்சி இதுவரை இவரைக் காப்பாற்றி வந்ததா என்பது விசாரணை முடிவில் தெரியும்.

காவல்துறை விசாரணையில் உண்மை வெளியே வரும் அதுவரை பல வகையான விவாதம் பேசப்படுகிறது. இயல்பானதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...