இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னரும் இராமேஸ்வரம் கோவில் பரம்பரை தக்காருமான இராஜா என். குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பிலிருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தைத் தாங்கியவர்கள். சேது எனில் சேது சமுத்திரம் என்னும் கடல் பகுதி, பதி எனில் காவலர் எனப்படும். சேதுபதிகளாக அறியப்படுகிறனர். மதுரை பாண்டியர்கள் ஆட்சியின் கீழிருந்த இராமநாதபுரம் 1520 ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இராமநாதபுரம் நிர்வாகத் தலைமையிடமாக இருந்ததுமதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670 ஆம் ஆண்டில் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் 1803 ஆம் ஆண்டில், இராமநாதபுரம் தனி அரசுரிமைக்கு மாறியது.
மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டதில் அதிலிருந்து பிரிந்த சிவகங்கை மட்டுமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றது, புதுக்கோட்டை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆதரவு நிலை கொண்டது.
கருத்துகள்