தமிழக ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கான இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (BIS) உணர்திறன் பயிற்சி சென்னையில் நடைபெற்றது
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்டச் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
சென்னையில் உள்ள இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மாநில அரசுத் துறைகள் அனைத்து டெண்டர்களிலும், குறிப்பாக மொத்த கொள்முதலுக்கு ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. தர நிர்ணயம் மற்றும் தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கான மாநில அளவிலான சந்தித்தலின் போது பிஐஎஸ் அதிகாரிகளின் குழு சமீபத்தில் இதன் முக்கியத்துவம் பற்றி விவாதித்தது. மாநில அரசு துறைகள் தயாரிப்புகளை வாங்குவதற்கு அல்லது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு டெண்டர்களைக்கோருகின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான டெண்டர் ஆவணங்களில் ஐஎஸ்ஐ மார்க் தயாரிப்புகளைக் குறிப்பிடவும், மொத்தக் கொள்முதல் அனைத்திற்கும் ஐஎஸ்ஐ மார்க் தயாரிப்புகளைத் தேடவும் பிஐஎஸ் வலியுறுத்தும். இதன் மூலம் தரமான பொருட்களை வாங்க முடியும்.தமிழக அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் துறைகள் தொடர்பான தரநிலைகளை உணர்த்தும் வகையில் பிஐஎஸ் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வரிசையில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சியைப் இந்தியத் தர நிர்ணய அமைவனம் -சென்னை 2022 மே 12-13 தேதிகளில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடத்தியது.
தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.வி.இறையன்பு ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, தங்கள் துறைகளில் உள்ள தரநிலைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தகைய பயிற்சியின் நோக்கமாகும் என்று அவரது உரையின் போது தெரிவித்தார். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அவர்களின் செயல்முறைகளை நெறிப்படுத்தவும் அரசாங்கக் கொள்கைகளை சிறப்பாகச் செயல்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார். தரமான பொருள் மற்றும் தரநிர்ணயம் பற்றிய பல நிஜ வாழ்க்கை மற்றும் நிறுவன உதாரணங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.
திரு யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி - தென்பகுதி & துணை இயக்குநர் ஜெனரலுமான (தெற்கு) பிஐஎஸ், திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார், மேலும், இது போன்ற திட்டங்கள் தரநிலைகள் உருவாக்கம், தர மேம்பாடு மற்றும் இணக்க மதிப்பீடு ஆகியவற்றில் மாநில அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் மேலாண்மை திட்ட உரிமங்களை பெறுவது பற்றியும் கூறினார். முன்னதாக விருந்தினர்களை வரவேற்று பேசிய விஞ்ஞானி திருமதி ஜி.பவானி, தரநிர்ணயம் மற்றும் உரிமம் வழங்குதல் பற்றி விளக்கினார்.
கருத்துகள்