முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அவரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து

இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அவரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய  7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகள் சிலவற்றின் நிலைப்பாடு. ஆனால் தமிழ்நாடு ஆளுநரோ அதை ஏற்க மறுத்து ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது பேரறிவாளனை ஜாமீனில் விடுதலை செய்தது


உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை, நன்னடத்தை உள்ளிட்டவைகள் அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசு உடன்படாத நிலையில்  இதை  சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மே மாதம்  10 ஆம் தேதிக்குள் முடிவெடுத்தாக வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிடுமெனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.


மேலும் மாநில அரசின் முடிவுகளை தடுத்து வைக்கும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது போல தெரிகிறது. இந்தப்  பின்னணியில் டாக்டர்  சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ள நிலையில்

அதில், விடுதலைப் புலிகளின் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் கருணை அளித்தால் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும். 1999-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பேரறிவாளன் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மேலும் ஒரு கருணை காட்டி பேரறிவாளனை விடுதலை செய்யப் போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.   


எப்பொழுதும் சரியான நேரத்திற்கு களமிறங்கும் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி இப்பொழுதும்  வந்துவிட்ட காரணமாக

பல விவாதங்கள் தற்போது பேசப்பட்டு வருகிறது 

டாக்டர் சுப்பிரமணியன் சாமி துர்வாச முனிவர் போன்றவர், பெரும்பாலும் வாய்திறக்கமாட்டார் ஆனால் பேசும்பொழுது தமிழக விவகாரங்களை சரியாக பேசுவார், செய்ய வேண்டியதை மிக சரியாகவே செய்வார்

புலிகளின் எதிர்காலத்தைச் சொன்னவர் அவரே, இனி தங்களுக்கு எதிரியே இல்லை என முன்னாள் முதல்வர் காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவும் அவரது உயிர் தோழி வி.கே.சசிகலாவும் நடராஜனும் 1991 முதல் ஆடிதீர்த்த இலஞ்ச இலாவண்ய காலங்களில் மிகவும் தைரியமாக எதிர்த்து ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவர் மனக்கண்ணின் முன்னால் சிரித்தவரும் அவரே! மு‌.க அழகிரியினை முதன் முதல் எச்சரித்தவரும் அவரே! ஸ்பெக்ட்ரம் வழக்கு என ஒன்று இப்பொழுதும்  இருக்கும் முழு காரணகர்த்தா டாக்டர்சுப்பிரமணியன் சுவாமி எனும் அசாத்திய மனிதர்

அவர் இப்பொழுது தமிழகம் கண்டிக்கத் தயங்கும் அல்லது அஞ்சும் நிகழ்வு பற்றி கடுமையாக பேசியிருக்கின்றார்.

பொதுவாக டாக்டர் சுவாமி நுழைந்த எல்லா விவகாரங்களும் அவருக்குத்தான் வெற்றியினை கொடுக்கும்,  என்னென்ன விளவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்

சுவாமியின் நடவடிக்கைகள் எப்பொழுதும் தொடக்கத்தில் பலனளிக்காது ஆனால் காலம் பின்னாளில் அவர் சொன்னதும் செய்ததும் சரி என்பதை மிகவும் தெளிவாக காட்டும், வெற்றி சுவாமிக்குத்தான் வரும் என்பது குறிப்பிடதக்கது

காரணம் தர்மம் அவரிடம் முழுக்க குடி கொண்டிருக்கின்றது.    ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது.

ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார் அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.குண்டுவெடிப்பின் போது மரணமடைந்தவர்கள் 16 நபர்களின் பட்டியல்


ராஜீவ் காந்தி: முன்னாள் பிரதமர், தர்மன்: காவலர், சந்தானி பேகம்: மகளிர் காங்கிரஸ் தலைவர், ராஜகுரு: காவல் ஆய்வாளர், சந்திரா: மகளிர் காவலர், எட்வர்டு ஜோசப்: காவல் ஆய்வாளர், கே. எஸ் முகமது இக்பால்: காவல்துறைக் கண்காணிப்பாளர்,. லதா கண்ணன்: மகளிர் காங்கிரஸ் உறுப்பினர், டேனியல் பீட்டர்: பார்வையாளர்,. கோகில வாணி: லதா கண்ணனின் பத்து வயது மகள். லீக் முனுசாமி: காங்கிரஸ் பிரமுகர், சரோஜா தேவி: 17 வயது கல்லூரி மாணவர், பிரதீப் கே குப்தா: ராஜீவ் காந்தியின் பாதுகாப்பாளர், எத்திராஜூ, முருகன்: காவலர், ரவிச்சந்திரன்: கமாண்டோ வீரர், காவல் துணை ஆய்வாளர் அனுசுயா டெய்சி உட்பட 43 நபர்கள் காயமுற்றனர். என்பது கடந்த நிகழ்வுகளாகும்                      தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த  ஏ.ஜி.பேரறிவாளன் என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்  அவர் திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் வசித்த நபர்  மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்றவர் சென்னை பெரியார் திடலில் விடுதலை பத்திரிகை  அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றியவர். இவர் 1991 ஆம் ஆண்டு, ஜுன் மாதம்  11 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு  2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்து பின்பாக தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  18 ஆம் தேதியன்று வழங்கப்பட்டது. முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்குத் தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடுகின்றார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் மே மாதம்  27-ஆம் தேதி பேரறிவாளன் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தங்கள் கருத்துகளைத் தெரிவித்து நீதிபதிகள். ``அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?'' எனக் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...