பிரதமரின் ஒருங்கிணைந்த மெகா ஜவுளிகள் மண்டலம் மற்றும் ஆடை (பிஎம்-மித்ரா) பூங்காக்கள் திட்டம் குறித்த தேசிய மாநாட்டை ஜவுளி அமைச்சகம் நடத்தியது
பிரதமரின் ஒருங்கிணைந்த மெகா ஜவுளிகள் மற்றும் ஆடைகள் (பிஎம் மித்ரா) பூங்காக்கள் திட்டம் குறித்த தேசிய மாநாட்டை ஜவுளி அமைச்சகம் 2022 மே 4 அன்று நடத்தியது. இந்த மாநாட்டை ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திரு யு பி சிங் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர் திருமதி சுப்ரா, பிஎம்-மித்ரா பூங்காக்கள் திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பிஎம்-மித்ரா திட்டம் குறித்து விவரித்தனர். 18 ஆலோசனைகளை அவர்கள் முன்மொழிந்தனர்.
ஆடை தயாரிப்புக்கு தேவையான நூற்றல், நெய்தல், பதப்படுத்துதல் / சாயமேற்றுதல், அச்சிடுதல் என ஒருங்கிணைந்த ஜவுளி மதிப்புத் தொடரை உருவாக்கும் வாய்ப்பை பிஎம் மித்ரா திட்டம் ஒரே இடத்தில் வழங்குவதால் தொழில்துறையின் போக்குவரத்துச் செலவு குறையும்.
கருத்துகள்