கிரிப்டோ நாணயங்கள் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் விழிப்புணர்வுக் காணொளி வெளியீடு
சென்னை பெருநகர் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சில நாட்களுக்கு முன் சுற்றறிக்கை வெளியிட்டிருந்ததில், “பிட் ஃபண்ட் மைன் இன்வெஸ்ட்மெண்ட் கம்பனி, ஆன்லைன் பிட்காயின் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தைக் கட்டி இரண்டு காவலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இதுபோன்ற ஆசை அறிவிப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளனர்.
காவலர்கள் தங்களது சேமிப்புகளைத் தரமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்தி ஆதாயங்களைப் பெற வேண்டுமே தவிர இதுபோன்ற தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு ஏமாறக்கூடாது” எனத் கதெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு தற்போது வீடியோ மூலம் பரப்புரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரிப்டோ நாணயங்கள் (பிட்காயின்) மோசடி குறித்து பேசியுள்ளதில். "வணக்கம் பொதுமக்களுக்கான பதிவிது.
இப்பொழுது இணையதளத்தில் பிட்காயினில் இன்வெஸ்ட் பண்ணவைத்து மோசடி செய்வது நடந்து கொண்டிருக்கிறது. அதனை நம்பி மக்கள் முதலில் சின்ன அமௌண்ட்டை போடுகிறார்கள். அந்த அமௌண்ட்டுக்கு டபுள் அமௌண்ட்டை அவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். அதன்பிறகு இன்னொருமுறை இன்வெஸ்ட் பண்ணுறாங்க. அதற்கும் அமௌண்ட்டை டபுள் செய்து தருகிறார்கள். ஆனால் அடுத்தமுறை இன்வெஸ்ட் பண்ணும்பொழுது இன்னும் அதிகமாக இன்வெஸ்ட் பண்ணுங்க அப்போதான் மெம்பர்ஷிப் கிடைக்கும், அக்கவுண்டில் கொண்டு சேர்க்க முடியும் என்று பல்வேறு காரணங்களைக் காட்டி பெரிய தொகையை இன்வெஸ்ட் பண்ண வைத்து, பின்னர் ஒண்ணுமில்லாமல் பண்ணிவிட்டுறாங்க.சென்னை கமிஷனர் சொல்லியிருக்கிறார், இந்த குற்றங்களைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய காவலர்களே பணத்தை விட்டு ஏமாந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனவே இந்தப் பணம் போச்சுனா கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். பணம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போயிருச்சுனா சர்வதேச போலீசாரை நாடவேண்டியிருக்கும். சர்வதேச போலீசாராலேயே ஒன்னும் பண்ண முடியல.
சென்னையில் ஒரு காவலர் 20 லட்சம், இன்னொரு காவலர் 30 லட்சத்தை இழந்திருக்கிறார்கள். பேராசையைத் தூண்டி உங்களை ஏமாத்திருவாங்க. பேராசை பெருநஷ்டம்'' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு மற்றும் மத்திய நிதியமைசகம் வரைவு மசோதா குறித்து ஒரு பார்வை :-. பலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், “கிரிப்டோகரன்சி என்பது பணமல்ல. அது ஒரு பண்டம். ரிசர்வ் வங்கியால் பணம் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதற்கு மட்டுமே உரிமையுள்ளது. தற்போது கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் எந்தவித முறையான சட்டங்களும் இல்லாத நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, தன்னிச்சையாக அதற்குத் தடை விதிக்க முடியாது,“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி தரப்பில், ‘2013 ஆம் ஆண்டு முதலே கிரிப்டோகரன்சி குறித்து நாங்கள் கவனமாக இருந்து வருகிறோம். அது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் ஒரு பிரிவுதான். அதை துவக்கத்திலேயே சரி செய்யாவிட்டால், நாட்டிலுள்ள பணப் பரிமாற்ற முறையில் தாக்கம் ஏற்படுத்தி விடும். ஆகவே கிரிப்டோகரன்சி குறித்து எங்களால் முடிவெடுக்க முடியும்' என வாதிட்ட நிலையில்
2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி குறித்து கெடுபிடியான சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த துறைகள் கிரிப்டோகரன்சி தொடர்பாக எந்த வித சேவையிலும் ஈடுபட முடியாதபடி செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி, 3 மாதத்திற்குள் கிரிப்டோகரன்சி தொடர்பாக தனி நபரிடமோ, தனிப்பட்ட நிறுவனத்திடமோ மேற்கொண்டு வரும் அனைத்து வித வர்த்தகங்களையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டது. குறித்தான வழங்காததால் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகிங்டன் நாரிமன், அனிருத்தா போஸ் மற்றும் வி ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 180 பக்கங்களுக்கு விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பிட்காயின், எத்திரியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகள் பல உலக நடைமுறைக்கு வந்து 11 ஆண்டுகள் தான் ஆகின்றன. குறைந்த காலக்கட்டத்தில் இந்த கிரிப்டோகரன்சி துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், பெரும் சறுக்கல்களையும் சந்தித்துள்ளது.
இந்த நிலையற்ற தன்மையால் தான் கிரிப்டோகரன்சிகளை பலரும் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதில்லை. ஆனால், சிலர் கிரிப்டோகரன்சி மூலம் பரிமாற்றம் செய்வதை சட்டபூர்வமாகவும் மாற்றியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு, ஜப்பான் பிட்காயினை சட்டப்பூர்வ பணமாக அங்கீகரித்தது. பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகளையும் அங்கீகரித்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னர் அரசு சார்பில் ஒரு வரைவு மசோதா வெளிவந்த நிலையில் விரைவில் வரிவிதிப்பு குறித்து தக்க முடிவு வருமென எதிர்பார்ப்பு நிலவுகிறது..
. ஆனால் இதை தவறான வழியில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையிலும் மற்றும் இது குறித்து முழுமையான விபரங்கள் அறியாத பலர் யாரோ ஒரு புரோக்கர் ஏமாற்றி அவர்களது பணம் மோசடி நடந்த நிலையில் தான் இதில் குற்றம் நடக்கிறது இதுவே தமிழகத்தில் காவல்துறை இயக்குனர் வெளியிட்ட பதிவு காணொளி ஆகும். இது குறித்து நாம் ஏற்கனவே பல ஆதங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம் அதன் தொடர் நடவடிக்கை பொருளாதார குற்றப்பிரிவு சைபர் குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவு இணைந்து சென்னை மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பெற்ற புகார்கள் மீது நடவடிக்கை உடனடியாக எடுத்தால் மோசடி நபர்கள் சிக்குவது உறுதி இது காலதாமதம் காரணமாக பல ஊழல் மோசடி நபர்கள் இதுவரை சிக்கவில்லை , ஆனால் பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அதிக அளவில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்