முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம் கடந்த நிலையில் சசிகலா நடராஜன் வருகை அரசியலில் பலன் தருமா

 காலம் கடந்த நிலையில் சசிகலா நடராஜன் வருகை அரசியலில் பலன் தருமா ?       


                  சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தனது ஆதரவாளர் வீட்டுத் திருமண நிகழ்வில் சசிகலா நடராஜன் பங்கேற்றார் திருமண நிகழ்ச்சியில் பேசியவர் குரங்கு கதை சொன்ன நிலையில் அது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில்.

. அவர் பேசிய விபரம்: அ.தி.மு.க. உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் நானிருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாதென்றார் கட்சியைக் காப்பாற்றி மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்க தகுந்த நேரம் வந்து விட்டதென்றார்






மாங்கொட்டையை ஊன்றி மரமாக வளரச் செய்தால் இஷ்டத்திற்கு மாம்பழங்களை பறித்துச் சாப்பிடலாம் என ஒரு குரங்கு மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது.சிறிது காலமாகியும் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவசரம். அந்த அவசர புத்தி குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. இதனால் செடி முளைக்கவில்லை.








ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையைத் துார எறிந்து விட்டு வருத்தப்பட்டது. குரங்கின் அவசரப் புத்திதான் அதற்குக் காரணம்.விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால் சில காலம் பொறுமை காக்க வேண்டும்.அதுபோல கட்சியினர் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் அதிமுக வலிமை  பெறும். எனப் பேசினார். .தோல்விக்கான மனம் திறந்த சுய பரிசீலனைக்கு அதிமுகவில் யாரும் தயாரில்லை! என்ற நிலையில் அதிகார அரசியலில் முந்துகிற ஒருவர் தற்காப்பு அரசியலுக்கான சண்டையில், சசிகலா நடராஜனைக் கேடயமாக்குகிறார்கள் என்ற விவாதத்தில் முன்னால் முதல்வர் ஒருவர் உள்ளது தான். அந்தக் கேடயம் அவரை காப்பாற்றுமா இல்லை, கதறடிக்குமா என்பதே வினா ?

ஒட்டுமொத்தக் கட்சியும் பொதுக் குழுவைகா கூட்டி சசிகலா நடராஜனைக் கட்சியை விட்டு விலக்கியது! சசிகலாவை எதிர்த்து 90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா சேர்க்கை என பேச்செடுத்தாலே கட்சிக்குள் எத்தகையை கொந்தளிப்பையும், கோபத்தையும் சந்திக்க நேரும் என்று கூட அவர் மற்றும் அவரை இயக்கும் நபர்களுக்கு நன்றாகத் தெரியும். 

ஆனபோதிலும், தேனி மாவட்ட நிர்வாகிகளை சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட வைத்து…, பிள்ளையைக் கிள்ளி  தொட்டிலை ஆட்டிய கதையாக களமாடுவதும் இதில் ஏதோ ஒரு சூட்சும அரசியலை எடப்பாடி  பழனிச்சாமி தரப்பில்  சொல்ல வருகிறார் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில். என அரசியல் அறிந்த பலர் பேசும் நிலையில்

சசிகலா நடராஜன் வருவது அதிமுகவிற்கு சக்தியா? சரிவா? என்பது மற்றொரு வினாவாகும்.  முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயம்  சார்ந்த ஒரு பிரிவு சார்ந்த கட்சி நபர்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பிரிவு  சசிகலா நடராஜன்  வகையறாக்கள்  முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததே.  அதை மறைமுகமாக வழிநடத்திய காலஞ்சென்ற முனைவர் ம.நடராஜன்  மற்றும் ஜெயலலிதாவின்  மறைவிற்குப் பிறகு அதிமுகவிலிருந்து சசிகலா நடராஜன் ஓரங்கட்டப்பட்டதும் முக்குலத்தோரில்  ஒரு பிரிவு கட்சியின் நபர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த  சட்டமன்றத் தேர்தலின் போது வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் குறித்து அதிமுக அரசு வெளியிட்ட அரசாணையால் தென்மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் சார்ந்த இரு பிரிவுகளாக உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் அதிருப்தியாலும் மற்றும் கூட்டணிக் கட்சிகள்  தக்க பலன் தராமல் போனதால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தோல்வியைத் தழுவியது. மேலும், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுகவிலிருந்த முக்குலத்தோரில் இரு பிரிவுகளாக இருந்த.    எம் பி சி  சமுகம் சார்ந்த கட்சியினர் திமுக மற்றும் பாஜக பக்கம் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர்  நகரத் தொடங்கினர்.

கோயமுத்தூர் சார்ந்த

கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தாலும்  அது அப் பகுதியில் பாஜகவின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் நிலையில் தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி குறையத் தொடங்கியது. முக்குலத்தோரில்  இரு பிரிவுகளைச் சேர்ந்த பலர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த போதிலும் இன்னும் அதிக முக்கியத்துவம் வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே முக்குலத்தோர் சார்ந்த அ திமுகவினைச் சேர்ந்த கட்சியினர் சசிகலா நடராஜன் மற்றும் , டி.டி.வி. தினகரன் பக்கம் போகாமல் தடுத்து வைத்திருந்த நிலையில் இந்த மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோருக்கான முக்கியத்துவம் இல்லையெனில் திமுக, பாஜக பக்கம் சிறகடித்து ப்பறக்கத் தயாராகி விட்டதாகவும் ஒரு தகவல் தெரிய வருகிறது.

கோயமுத்தூர் சார்ந்த கொங்கு மண்டலத்தை மட்டுமே கைக்குள் வைத்திருக்கும் அதிமுக தலைமை , முக்குலத்தோரில் இரு சமூகத்தில்   முக்கியத்துவம் கொடுத்து தென் மண்டலத்தையும் தன்வசம் வைத்திருக்குமா என்பது ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பைப் பொறுத்திருக்கும் என்கின்றனர் அதிமுகவின் விபரம் அறிந்த பலர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் முக்குலத்தோரின் இரு பிரிவு கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டாயமும் இருந்து வருகிறது.   இதில் பிற்படுத்தப்பட்ட சமூகமாக என்றும் இருந்து வரும் ஒரு சமூகத்திற்கான சமூக நீதி அதிமுகவின் கடந்த ஆட்சியில் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை அதற்கேற்றார் போல் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை சனிக்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்ற முன்னால் அமைச்சர் இசக்கி சுப்பையா இல்ல விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்கள் ஜாதி ஒதுக்கீடுகள் வாங்குவதால் ஜாதிக்கு எந்தப் பயனும் முன்பும் இல்லை இனியும் இருக்கப்போவதில்லை என்றே பலரும் உணரும் நிலையில்.

 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்த்திற்கு முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா பதவி வழங்கிய பிறகு தற்போதைய தலைமை வழங்கவில்லை  என்ற விபரத்தையும் எடுத்துச் சொல்லியுள்ளனர். கட்சியிலிருக்கும் முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகள் சொன்ன கருத்தை பரிசீலனை செய்வதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இவர்கள் ஜாதி உரிமை படி பதவி வாங்க அரசியல் நடத்தி வருகிற நிலையில் ஜாதிக்கு அதனால் பலன் உண்டா என்பது தான் அந்த சமூகத்தின் நலன் சார்ந்த மக்களின் வினா? மற்றும் அவரது அரசியல் புதிய வருகை என்பது அவர் சொன்ன கதை படியே கூறவேண்டுமானால் குரங்கு ஆப்பசைத்த கதை போலாகக்கூடாதென்பதே அக்கட்சியின் தொண்டர்கள் நிலை. தற்போது திமுகவும் பாஜகவும் நேரெதிர் அரசியல் செய்யும் நிலையில் அதிமுகவும் இங்கு தேவை என்பதை மக்கள் மறந்து நிலை . எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாக்கு வங்கி இப்போது அதிமுக பக்கம் அப்படியே உள்ளதா என்பதே அரசியல் அறிந்தவர்களின் பதில் தேடும் வினா. தற்போதய நிலையில் அக் கட்சி வளர நல்ல தலைவர் தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...