உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னரும் அஞ்சல் துறைத் தேர்வு முடிவுகள் வெளிவருவதில் தாமதம் குறித்து மத்திய அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி.
அஞ்சல் துறை சேவை பிரிவு 2 துறைத் தேர்வுகள் 29.நவம்பர்.2020 ல் நடத்தப்பட்டது. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தால் முதலில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பின்னர் கேரள உயர்நீதி மன்றத்தால் தடை நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தாலும் (எஸ்.எல். பி 5030/2022) 04.மாரச்.2022 அன்று உறுதி செய்யப்பட்டு 3 வாரங்களுக்குள்ளாக தீர்ப்பை அமலாக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதில் 2000 தேர்வர்கள் உள்ளனர் என்றும், தேர்வு முடிவுகள் தாமதமாவதால் 100 அஞ்சல் மாவட்டங்களில் மக்கள் சேவை பாதிக்கப்படுவதாகவும் மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெஙாகடேசனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் உச்சபட்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் ஏன் தாமதம் என அவர் மத்திய அமைச்சரிடம் வினா எழுப்பியுள்ளார்.
கருத்துகள்