பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு 100-வது பிறந்த நாளி பாத பூஜை செய்து வணங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று 100வது பிறந்த நாளை சதாசிவம் என்ற சதாபிஷேக விழா கொண்டாடுகிறார். தாயாரை காலையில் வணங்கி ஆசீர்வாதம் பெற்றார.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி குஜராத் மாநிலத்தில் காந்திநகரின் புறநகர் பகுதியில் உள்ள ராய்சன் எனுமிடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். மோடியின் தாயாருக்கு இன்று 100 வது பிறந்த நாளாகும். இதையடுத்து நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்தவர் குஜராத்தில் 21 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்கிறார். முன்னதாக 100 வது பிறந்தநாளில் தனது தாயாரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். மேலும் அவருக்கு பாத பூஜையும் செய்து வழிபட்டார்.
100வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரதமர் மோடியின் தாயார் இருக்கும் பகுதியில் உள்ள சாலை ஒன்றுக்கு ஹீராபென் பெயரை சூட்ட காந்தி நகர் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு நாள்களுக்கு முன்பு முடிவு செய்திருந்ததனை மேயர் ஹிதேஷ் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாநகராட்சி நிர்வாகம் ஒத்தி வைத்திருக்கிறது.
ஈன்ற தாயை தெய்வமாக வணங்குபவர், ஆயிரம் நிறை, குறைகள் கொண்டிருந்தாலும்... வானுறையும் தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்படுவார். வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று பேரும் புகழும் பெற்றிட இதுவே முழுமுதல் தகுதி... என்பதற்கு நரேந்திர மோடி ஒரு சிறந்த உதாரணம். மஹாத்மா காந்தி எம்ஜிஆர், கலைஞர் அணைவரும் தங்களது அன்னையர் மீது வைத்திருந்த பாசம் மரியாதை அளப்பரியது.
கருத்துகள்