இந்தியா –நேபாளம் எல்லை மேலாண்மை குறித்த 12-வது கூட்டு நடவடிக்கைக் குழுக்கூட்டம்
இந்தியா- நேபாள எல்லைப்புற மேலாண்மை பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த 12-வது கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இந்திய தரப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (எல்லைப்புற மேலாண்மை) மற்றும் நேபாள தரப்பில் அந்நாட்டு உள்துறை அமைச்சக இணை செயலாளர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நேபாளத்தின் பொக்காராவில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மறு ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன் எல்லைப் பகுதியில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகள், எல்லைப்புற கட்டமைப்பை வலுப்படுத்துதல், அதிகாரமளித்தல் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் திறன் மேம்பாடு, தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டத்தை நேபாளத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்