ராஜஸ்தானில், ரூ.1,357 கோடி மதிப்பிலான 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ராஜஸ்தானில், ரூ.1,357 கோடி மதிப்பிலான 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, ராஜஸ்தானில் ரூ.1,357 கோடி ரூபாய் மதிப்பிலான 243 கிலோ மீட்டர தூர தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய நெடுஞ்சாலை 168-Aவில் உள்ள சாஞ்சோர் பகுதியிலிருந்து நினவா பகுதியை விரிவாக்கம் செய்வதால், சாலூர் மாவட்டத்தில் கிரானைட் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், சூரத்கர் மண்டிக்கு விவசாயிகள் எளிதாக சென்று வர வழிவகுக்கும் என்றும் கூறினார்.
தேசிய நெடுஞ்சாலை 911-ன்கீழ், ஸ்ரீகங்கா நகரிலிருந்து ரைசிங்நகர் வரை அமைக்கப்பட்டு வரும் 2 வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 62-ன்கீழ், சூரத் நகரிலிருந்து ஸ்ரீகங்கா நகர் வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகள், சர்வதேச எல்லை மற்றும் சாலையில் இருபுறமும் உள்ள ராணுவ நிலையத்தை எளிதில் சென்றடைய வழி ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் வலிமையை அதிகரிக்கும். ராணுவ வீரர்கள் எல்லையை கடந்து இணைப்புகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ராஜஸ்தான் மாநிலத்தை முன்னேற்றம் மற்றும் செழிப்பான பாதைக்கு இட்டு செல்லும் என்றும் கூறினார்.ராஜஸ்தானில், ரூ.1,357 கோடி மதிப்பிலான 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, ராஜஸ்தானில் ரூ.1,357 கோடி ரூபாய் மதிப்பிலான 243 கிலோ மீட்டர தூர தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய நெடுஞ்சாலை 168-Aவில் உள்ள சாஞ்சோர் பகுதியிலிருந்து நினவா பகுதியை விரிவாக்கம் செய்வதால், சாலூர் மாவட்டத்தில் கிரானைட் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், சூரத்கர் மண்டிக்கு விவசாயிகள் எளிதாக சென்று வர வழிவகுக்கும் என்றும் கூறினார்.
தேசிய நெடுஞ்சாலை 911-ன்கீழ், ஸ்ரீகங்கா நகரிலிருந்து ரைசிங்நகர் வரை அமைக்கப்பட்டு வரும் 2 வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 62-ன்கீழ், சூரத் நகரிலிருந்து ஸ்ரீகங்கா நகர் வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகள், சர்வதேச எல்லை மற்றும் சாலையில் இருபுறமும் உள்ள ராணுவ நிலையத்தை எளிதில் சென்றடைய வழி ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் வலிமையை அதிகரிக்கும். ராணுவ வீரர்கள் எல்லையை கடந்து இணைப்புகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ராஜஸ்தான் மாநிலத்தை முன்னேற்றம் மற்றும் செழிப்பான பாதைக்கு இட்டு செல்லும் என்றும் கூறினார்.“தேசிய நெடுஞ்சாலை சிறப்பு விருதுகள்
கருத்துகள்