மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் பட்டியலில் புதியவற்றை சேர்ப்பதை அடையாளம் காண்பதற்காக
தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையக் குழு அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 14 லிருந்து பயணம் செய்யவிருக்கிறது
அருணாச்சலப் பிரதேசத்தில் குறிப்பாக திபெத் - சீன எல்லைப் பகுதியில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்களைப் பார்வையிட தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் முழு குழுவினர் 2022 ஜூன் 14 முதல் 18 வரை பயணம் செய்யவிருக்கின்றனர். பண்டைய இலக்கியங்கள் மற்றும் வாய்மொழி வரலாறாக தேசத்தின் பிற பகுதிகளை அருணாச்சலப்பிரதேசத்துடன் இணைக்கின்ற உள்ளூர் மக்களின் சமய நம்பிக்கைகள் தொடர்பான விஷயங்களைக் கண்டறிய இந்த குழுவினர் உள்ளூர் பழங்குடித் தலைவர்களையும் இந்தக் குழுவினர் சந்திக்கவுள்ளனர். குழுவின் தலைவர் திரு தருண் விஜயுடன் திரு ஹேம்ராஜ் காம்தரந், பேராசிரியர் கைலாஷ் ராவ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மிகுந்த கிளர்ச்சியூட்டும் ஞானம் தரும் முறையில் ருக்மணியின் தொன்மையான கதையையொட்டி கலாச்சார இழைகளை வலுப்படுத்தும் வகையில் அருணாச்சல பிரதேசத்திலிருந்து குஜராத்தின் போர்பந்தர் வரை பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட வருடாந்தர பயணத்திற்கு இந்தப் பெருமை சேரும் என்று திரு தருண் விஜய் கூறினார்.
பாரம்பரிய பாதுகாப்பிலும் புதிய நினைவுச் சின்னங்களை மத்திய அரசால் பாதுகாக்கப்படும் தேசிய தொல்லியல் இணையத்தின் பட்டியலில் சேர்ப்பதிலும் அருணாச்சலப்பிரதேசம் மிகவும் பின்தங்கி இருப்பதாக அவர் கூறினார். உள்ளூர் சமய நம்பிக்கைகள், அவர்களின் நினைவுச் சின்னங்கள் வலுவானதாக இருப்பினும் வலுவற்றதாக இருப்பினும் அவை குஜராத்தின் மேற்கு கடற்கரையுடனும் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் இணைந்திருப்பது அங்கீகரிக்கப்படாமலும் கவனிக்கப்படாமலும் உள்ளன. இந்தப் பயணத்தின் அறிக்கை மத்திய கலாச்சார அமைச்சர் மற்றும் பிரதமரிடம் அளிக்கப்படும் என்று தருண் விஜய் கூறினார்.
கருத்துகள்