முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரக மேலாண்மை நிறுவனமான ஆனந்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் உரை

கூட்டுறவு அமைச்சகம் குஜராத்தில் இன்று தமது மூன்றாவது நாள் பயணத்தின்போது ஊரக மேலாண்மை நிறுவனமான ஆனந்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

குஜராத்தில் இன்று தமது மூன்றாவது நாள் பயணத்தின்போது ஊரக மேலாண்மை நிறுவனமான  ஆனந்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா  உரையாற்றினார்

தங்களின் பட்டங்களைப் பெற்றுள்ள மாணவர்கள் காந்திஜியின் கனவுகளை நனவாக்கப் பாடுபடவேண்டும் என்று அவர் தமது உரையில் கேட்டுக்கொண்டார். ஊரக வளர்ச்சியை துரிதப்படுத்தாமல்,  ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாக  ஊரக  வளர்ச்சியை உருவாக்காமல்,   கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் வளம்  மிக்கவர்களாக  மாற்றாமல் இந்தியா ஒரு போதும் தற்சார்பு உடையதாக மாறாது என்று அவர் கூறினார்.  "பட்டங்கள் பெற்ற மாணவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நாட்டின் ஊரக வளர்ச்சிக்காக பாடுபடுவதை நினைவில் கொள்ளவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் இந்தப்  பங்களிப்பிலிருந்து உங்களை யாரும் தடுக்க இயலாது. உங்கள் வாழ்நாள் தொலைநோக்கு பார்வையாக ஊரக வளர்ச்சி இருப்பதற்கு  உறுதி ஏற்பது ஐஆர்எம்ஏவுக்கு குருதட்சணை அளிப்பதாக இருக்கும். இதுவே கிராமங்களில் உள்ள ஏழைகளின்  வாழ்க்கையை வளமாக்கும்" என்று அவர் கூறினார்.


ஊரக வளர்ச்சி என்பது வெறுமனே கொள்கை சார்ந்தது அல்ல என்று கூறிய அமைச்சர்,  கிராமங்களுக்குப் பணியாற்ற உறுதியுடன் தம்மை அர்ப்பணிக்கும்போது மட்டுமே அது நடைபெறும் என்றார். நவீன காலத்தில் ஊரக வளர்ச்சி ஏற்பட்டாலா அது காலத்திற்கு பொருத்தமானதாக மாறிவிடும்.  இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப அது உருவாக்கப்படும்.  ஊரக வளர்ச்சி என்பது காலத்திற்கேற்ப  அமைக்கப்படவேண்டும். சர்தார் படேல் மற்றும் திருபுவன் பாய் ஆகியோரின் புனிதமான மண்  இதனைக் கள அளவில் கொண்டுசெல்லும் என்று நான் நம்புகிறேன். 


பல கோடி ரூபாய் சம்பாதித்த பிறகும் நீங்கள் திருப்தி அடைய முடியாது.  உங்கள் வாழ்க்கையில் ஒரு நபரை சுய தேவை பூர்த்தி அடைந்தவராக மாற்றினால் நீங்கள் சுய திருப்தி அடைய முடியும்.  தீர்வு என்பது வாழ்க்கையில் தீர்மானமாக  இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். திருப்தி என்பது மற்றவர்களுக்கு பணியாற்றுவதில் இருந்து வருகிறது.  டாக்டர் வர்கீஸ் குரியனை நினைவுகூர்ந்த மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்,  நீடித்த தன்மை, சூழலுக்கு உகந்ததாக இருத்தல்,  சமத்துவம்,  சமூக பொருளாதார வளர்ச்சியில் சமநிலை ஆகியவற்றை ஊரக மக்களிடையே  உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தை உருவாக்கினார் என்பதை சுட்டிக்காட்டினார். பட்டம் பெறும்  மாணவர்கள் இதனை எப்போதும் நோக்கமாகக்  கொண்டிருக்க வேண்டும்.  வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை நீங்கள் பெறும்போது அதிலிருந்து  திருப்பித் தருவது உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.  இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில் இருக்கிறது என்று காந்தி அவர்கள் குறிப்பிட்டார்.  இந்தியா பலமாக மாற  வேண்டுமென்றால் கிராமங்கள்  வசதியாகவும் தற்சார்புடையதாகவும் இருக்கவேண்டும் என்றார்.  இதைத்தான் 2014ல் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அவர் பிரதமரான பிறகு இது நடந்தது.  நாட்டிற்கும் உலகத்திற்கும் ஊரக வளர்ச்சி பற்றிய புதிய தொலைநோக்குப் பார்வையை திரு நரேந்திர மோடி முன்வைத்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறிய படி, ஒவ்வொரு நபரும் ஒரு பயன்பாடு கொண்டிருக்கிறார்.   வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும் . எனவே எவரொருவரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்த ஒருவரும் பிறப்பால் பெரியவராதில்லை. சிறந்த சிந்தனையால் மட்டுமே பெரியவர் ஆகிறார் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...