மாற்றுத்திறன் குறித்த மத்திய ஆலோசனை வாரியத்தின் 5வது சந்திப்பு
மத்திய சமுகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் இன்று (ஜுன் 24) மாற்றுத்திறன் குறித்த மத்திய ஆலோசனை வாரியத்தின் 5வது கூட்டம் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சகத்தின் இணையமைச்சர் செல்வி பிரதிமா பவுமிக், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளை அறிவிக்கை செய்யவேண்டும் என்றும் மாநில ஆலோசனை வாரியங்களையும், மாவட்ட அளவிலான குழுக்களையும், மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்களையும் விரைந்து அமைக்கவேண்டும் என்றும்
மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய ஆலோசனை வாரியம் அறிவுறுத்தியது. மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை திட்டத்தை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்திய வாரியம், அப்போதுதான் 2022 ஆகஸ்ட் மாத வாக்கில் முழுமைத் தன்மையை எட்டமுடியும் என்று கூறியது. மேலும் மாற்றுத் திறனாளிகள் கவுரவமான வாழ்க்கையை நடத்த அவர்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
கருத்துகள்