ஆய்வுகள் நடத்திய டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரத்தைப் பரிசோதித்தார்.
சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள், நியாய விலைக் கடைகள், அமுதம் சிறப்பு விற்பனை அங்காடிகளில்
நேற்று காலை முதல் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரத்தைப் பரிசோதித்தார். சர்க்கரையை வாயில் போட்டுப் பார்த்தார். இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளின் ஊழியர்களிடமும் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆகிய இரண்டு துறைகளுமே சாமானிய மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள துறைகளாகும். இதனால் இந்தத் துறையை முன்னேற்றிடும் வகையில் அரசுடன் கலந்து பேசி இன்னும் பல புதிய திட்டங்களை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இனி வரும் நாட்களில் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ''நான் ஏசி ரூம் அதிகாரி கிடையாது. கீழ்மட்டத்திலுள்ள ஊழியர்கள், அலுவலர்களின் கருத்தைக் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன். அடுத்த வாரம் டெல்டா மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் செல்கிறேன். விவசாயிகளின் நெல் கொள்முதல் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும்.''விரைவாக நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அவர்கள் முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை நானே நேரடியாக ஆய்வு செய்து இனி கண்காணிக்க இருக்கிறேன். ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அமுதம் அங்காடிகள் உலகத்தரத்துக்கு தரம் உயர்த்தப்படும்.'' என டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்தார்.
கருத்துகள்