முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி இடைத்தேர்தல் அஇஅதிமுக சின்னம் கிடைக்குமா

 தமிழ்நாட்டில் உள்ளாட்சி  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்  இன்று அ.இ.அ.தி.மு.க சார்பில் ஒரு அறிவிப்பு வந்துள்ளதில் அதன் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுமெனக் கூறப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகிய இருவரின் பெயரில் தான் அறிவிப்புகள் வெளியானது.       ஆனால் தற்போது வந்த அறிவிப்பானது தலைமை கழகமென மாற்றப்பட்ட கடிதம் வெளியிடப்பட்டது. இதன்மூலம் அஇஅதிமுகவில் படிவம் A,B, மூலம் கையெழுத்திடும் நபர்   யார் ? என்று தெரியவில்லை.

இந்நிலையில் தான் புதிய பிரச்சனை வந்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை மாதம் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அறிவிப்பை தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனுத்தாக்கல் ஜூன் மாதம் 20 ஆம் தேதியில் துவங்கியது. ஜூன் மாதம் 28 ஆம் தேதியில் வேட்புமனு பரிசீலனையும்,  ஜூன் மாதம் 30 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும் இன்று ஜூன் மாதம் 27 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதி நாளாகும். தேர்தல் ஜூலை மாதம் 9 ஆம் தேதியில் நடைபெற்று ஓட்டு எண்ணிக்கை ஜூலை மாதம் 12 ஆம் தேதியில் நடைபெற உள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டு மாவட்டக்கவுன்சிலர், 20 ஒன்றியக் கவுன்சிலர், 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 436 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2 மாநகராட்சிக் கவுன்சிலர், 2 நகராட்சிக் கவுன்சிலர், 8 பேரூராட்சிக் கவுன்சிலர் உள்பட 510 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தான் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இந்தப் பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு படிவம் A தாக்கல் செய்த பிறகு படிவம் B சின்னங்கள் ஒதுக்கீடு செய்ய வசதியாக முன் கூட்டியே ஏ, பி என்ற படிவங்கள் வழங்கப்பட கட்சியின் சார்பில் வழங்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டு தங்களின் வேட்பாளர்களுக்கு வழங்குவர்.அஇஅதிமுகவை பொறுத்தமட்டில் தற்போது ஒருங்கிணைப்பாளர்    ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் இந்தப் படிவங்களில் கையெழுத்திட்டு வந்தனர். தற்போது அதிமுகவில் உள்கட்சிப் போட்டி நீதிமன்றத்தில் வந்த நிலையில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சி.வி.சண்முகம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதென தெரிவி்த்த நிலையில். இதனால் வேட்புமனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக வேட்பாளர்களின் படிவங்களில் யார் கையெழுத்திடுவார்கள் என்ற கேள்வி எழுந்ததனால் அஇஅதிமுகவின் இரட்டை இலை சின்னம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. இப்போதுள்ள நிலையில் இரட்டைத் தலைமை காலாவதியாகி விட்டதென்றால் அந்த இடம் தானாகவே முந்தைய நிலைக்குச் சென்றுவிடும் என்பது சட்டவிதி.
முந்தைய நிலை செல்லுமா? செல்லாதா? என்பதைப் பின்னர் தான் நீதிமன்றத்தில் தீர்வாகும்.

இவர்கள் வாதம் சரி என்றால்!. இப்போது பொதுச் செயலாளர் யார் ? என்ற வினா எழுகிறது.

பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்க அஇஅதிமுக  எனும் கட்சியின் அமைப்புச் சட்டமும் துணை  விதிகளும் அனுமதிக்கிறதா?

அல்லது ஏற்கனவே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா நடராஜன் கையில் அதிகாரம் தானாகவே சென்று விடுகிறதா? என்பதும் தான் இங்கு எழு வினா.

 "அரசியல் சாதுர்ய" நடவடிக்கை மட்டுமே ராஜதந்திரமாகும். அதுவே சாணக்கியத் தனமாகிறது.


தங்களை முதல்வர் பதவியில் அமர வைத்து விட்டு பக்கத்து மாநிலத்தில் நான்கு ஆண்டுகள் சிறை வாசம் சென்ற பெண் ஆளுமைக்கு எதிராக செய்யப்பட்ட அரசியல் சூழ்ச்சியும், தற்போது  மராட்டிய மாநிலத்தில் 56 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிவ சேனைக் கட்சியில் 39 சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமை மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் என்றால் கட்சியின் கட்டமைப்பை எத்தனை எளிதாக பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆளும் நிலையில் அசைத்து விடுகிறதென்பது குறித்து அரசியல் அறிந்த மக்கள் மத்தியில் பரவலாக தற்போது பேசப்படுகிறது. கடந்த காலங்களில் அதாவது 

29.டிசம்பர்.1993 அன்று தஞ்சாவூரில் கூடிய திமுக வின் பொதுக்குழு 

 மிகப்பெரிய நெருக்கடியில் கூட்டப்பட்ட அந்தப் பொதுக்குழு அதன் வரலாற்றில் காலஞ்சென்ற 

எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறிய போது கூட சந்திக்காத நெருக்கடியை காலம்சென்ற கலைஞர் மு. கருனாநிதி  சந்தித்த காலமது. சிறுபொறியும் பெரும் கலவரமாக வெடிக்குமளவுக்கு கட்சிக்காரர்கள் கொந்தளிப்பிலிருந்த சூழல். இப்போது உள்ள தொலைக்காட்சிகளோ, தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலம் ஆனாலும் சின்னஞ்சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் இராணுவக்கட்டுப்பாட்டோடு நடத்தப்பட்ட பொதுக்குழு அந்த திமுகவின் பொதுக்குழு. செய்தியாளர்களுக்கு முழுமையான அனுமதியோடு நடந்தது. அதனால் தான் அந்தப் பொதுக்குழுவையும் அதன் முடிவுகளையும் இந்திய உச்சநீதிமன்றமே ஆமோதித்தது. அதை நடத்திக்காட்டிய கட்சியின் தனைவர் கலைஞர்.மு.கருனாநிதிமற்றும் அப்போது மாவட்டச் செயலாளர் காலம்சென்ற கோ.சி.மணி. 
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திமுகவின் பொதுக்குழுவை இன்றைய நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தான். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சீரழிவின் அதளபாதாளத்தை முகத்தில் அறைந்து சொல்வதற்கு அப்படி செய்வதை தவிர வேறு வழியில்லை. இதை நகைச்சுவையாகக் கடப்பது தவறு. எவ்வளவு பெரிய சிகரங்களை பார்த்தோம் எவ்வளவு கீழ்மையில் கிடக்கிறோம் என்று தீவிரமாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிற ஒரு இயக்கம். 

என்றால் அது எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா என்ற கவர்ச்சி கலந்த தலைவர் ஆளுமை தான் 

தமிழ்நாட்டின், அதன் அரசியலின், திராவிடர் இயக்கத்தின் தற்போதுள்ள சீரழிவின் அதளபாதாளம்.

சட்டப்படி தேர்தலிலேயே நிற்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தண்டனை பெற்ற முதல் குற்றவாளியாக இருந்தாலும் செல்வி.ஜெ.ஜெயலலிதாவை முதல்வராக்கிய 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அ.இ.அதிமுகவை மட்டும் சீரழிக்கவில்லை. திமுகவையும் சேர்த்தே பாதித்தது. அதற்கு ஒப்பானது அதிமுகவும் எடப்பாடியும் இனியும் அரசியலில் வளர்ச்சி பெற்று வலுவடைவது கூட நடக்குமா என்பதே கேள்வி ஆனால் பாஜக தயவு தேவை  நடக்கும் எதுவுமே நல்லதுக்கல்ல என தொண்டர்கள் நிலை, தமிழ்நாட்டுக்கும் அதன் நலன்களுக்கும்.

எடப்பாடி அதிமுகவை கைப்பற்ற  தாமதம் செய்து வந்தால்  தமிழ் நாட்டில் எதிர்க்கட்சிக்கு உள்ள ஸ்பேஸ் ஐ பிஜேபி கைப்பற்றிவிடும் வாய்ப்பு  உருவாகிவிடும் நிலை இருந்ததென்பதும்.

எடப்பாடி கே.பழனிச்சாமியை உறுதியாக ஆதரித்த டெக்ஸ்டைல்ஸ் பள்ளத்தாக்கு முதலாளிகள் ( முதலாளிகள் என்றே படிக்க வேண்டும்.. ஜாதி அல்ல) திமுக பக்கம் சாயத் தொடங்கியதற்கு உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள்  தான் சாட்சி. 

கொங்கு கலாச்சார முதலாளித்துவ வர்க்கம், வணிகர்கள், பெரும் ஒப்பந்ததாரர்கள், பணக்கார விவசாயிகளின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி அஇஅதிமுகவின் தலைவராகியே தீர வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுள் அதிருப்தியாளர்கள் தேவைகளை முன்வைக்கும் பொறுப்பை அங்கு ஏற்கனவே காலூன்றி விட்ட பாஜக எடுத்துக் கொள்ளும்.

அதே நேரம் ஓ. பன்னீர் செல்வத்தை வெளியேற்றுவது தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு இழப்பு ஏற்படுத்துமா என்பது மாதிரியான ஒரு நிலையில் இல்லை என்று தெரிந்தே எடப்பாடி கே.பழனிச்சாமி இந்த சவாலை முன் எடுக்கிறார். 

திமுகவில் முன்பு மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகும் முன் மு.க அழகிரியை ஓரம் கட்டி கட்சியை முழுமையாக கைப்பற்றிய முன்னுதாரணமும் இருக்கிறது. அதிமுகவின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அமைப்புகள், நிர்வாகிகள் தன்  பக்கம் இருந்தால் ஆளும் கட்சியின் பால் அதிருப்தி கொண்டவர்கள் தன்னிடம் வந்தே ஆகவேண்டும் என்று கணக்கிடுகிறார். 

கொங்கு முதலாளிகள் பாஜக வின் பக்கம் ஒரேயடியாக சாய்ந்து விடவில்லை என்பதற்கு இப்போது எடப்பாடி கே.பழனிச்சாமி பெற்றுள்ள வெற்றி இல்லாத வெற்றிடம் என்றாலும் அதில் அதிக ஆதரவாளர்களே சாட்சி. கொங்கு முதலாளிகளுக்கு பாஜக உடன் சில முரண்பாடுகள் உள்ளன, அவர்களுக்கு அஇஅதிமுக தேவைப் படுகிறது என்பதை எடப்பாடி கே.பழனிச்சாமியின் திட்டவட்டமான தற்போதய நடவடிக்கை காட்டுகிறது.  

ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போல ஆளுமை ஆக முடியுமா என்பது சந்தேகம் தான்.

ஒரு பிராந்திய முதலாளித்துவ குழுவால் எவ்வளவு தூரம் போய் அரசியலில் பயணிக்க முடியும் என்று புரிந்து கொள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி ஈடுபட்டுள்ள இந்தப் பரிசோதனை உதவும். இந்த நிலையில் ஜூலை மாதம் 11 ஆம் தேதி அஇஅதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாதென டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மனுவை  அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. தமிழ்மகன் உசேன் தற்காலிக அவை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அவர் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே தவறு எனும் பட்சத்தில் அவர் ஜூலை மாதம் 11 ஆம் தேதி அறிவித்துள்ள பொதுக்குழுக் கூட்டமும் செல்லாது; அதற்கு அவருக்கு அதிகாரமும் இல்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் அ.இ.அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி அஇஅதிமுக-வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதோடு, தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டார். அதிமுக-வில் அவைத்தலைவர் தலைமையில் தான் பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். அவரது கையெழுத்திட்டே பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அழைப்பிதழ், அது தொடர்பான அறிக்கைகள் வெளியாகும். பொதுக்குழு விரைவில் நடைபெறவிருப்பதாலேயே அவைத்தலைவர் அறிவிக்கப்பட்டதாகக் கட்சி வட்டாரத்தில் அப்போதைய நிலையில் சொல்லப்பட்டது. ஆனால், உனடியாகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை.

தற்போது அந்தப் பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியில் சட்டவிரோதமாக உருவாக்க முயற்சி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டிய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை அமைப்புச் சட்ட விதிகளை மீறி அவைத் தலைவரை வைத்து அழைப்பு விடுத்துள்ளது எனவே 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெறுவதாக உள்ள அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிக்கும் அனுமதிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் சார்பாக ஆன்லைன் மூலமாக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் தேர்தல் ஆணையரை நேரடியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில் 

சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெறவில்லையென்றும், இந்தப் பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தெரிவித்தனர். இந்தநிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு முடிவு வந்த பிறகு தான் உண்மை நிலை தெரியும். இதற்கு முன்னர் அ.இஅதிமுக-வின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் தேர்தல் ஆணையத்துக்கு வினா எழுப்பியதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச்செயலாளர் யார் என தற்போது வரை தீர்மானிக்கவில்லை என பதிலளித்துள்ளது. மேலும், அதிமுக-வில் உட்கட்சி பிரச்னை தொடர்ந்து நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன