முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை புதிதாக முதன்மை தலைமை ஆணையரும் சில இடங்களில் சோதனைகளும்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக  ரா. ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக ரா. ரவிச்சந்திரன், இ.வ.ப., 17.06.2022 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்த இவர், இந்திய வருவாய் பணியில் 1987ஆம் ஆண்டு சேர்ந்தார். இவர் மதுரையில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேளாண்மைப் பட்டமும் மற்றும் கப்பல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

தற்போது, ​​‘தரவு ஆளுமை சிக்கல்கள்’ என்ற தலைப்பில் நிதியியல் துறையில் பிஎச்.டி. பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் மதிப்பீடு, விசாரணை, நிர்வாகம் மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் பல்வேறு பதவிகளில் நாடு முழுவதும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி திருமதி . கீதா ரவிச்சந்திரன் அவர்களும், இந்திய வருவாய் பணியில் 1987ஆம் ஆண்டு சேர்ந்தார், அவர், தற்போது மும்பை வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

திரு. ரா. ரவிச்சந்திரன் அவர்கள், கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தில் பிரிதிநிதியாக துணை இயக்குநர் ஜெனரலாகவும், (SEBI) செபியின் தலைமை பொது மேலாளராகவும் (விசாரணை மற்றும் கண்காணிப்பு) பதவியில் இருந்தார்.

ஐபிஓ (IPO) ஊழல் மற்றும் பென்னி ஸ்டாக் கையாடல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசாரணை வழக்குகளை அவர் கையாண்டுள்ளார். வருமான வரித் துறையின் முதல் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு மற்றும் செபியின் ஒருங்கிணைந்த சந்தை கண்காணிப்பு அமைப்புகள் திட்டம் (IMSS) அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். மேலும், நாக்பூரில் உள்ள தேசிய நேர்முக வரிகள் பயிற்சி மையத்தில் (NADT) கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆகவும் பணியாற்றியுள்ளார்.



பணமோசடி தடுப்புச் சட்டம், எல்லை தாண்டிய வரிவிதிப்பு, விஷன் 2020, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே நிதி அறிவு மற்றும் வருமான வரித் துறையின் முடிவுகள் கட்டமைப்பு ஆவணம் ஆகியவற்றின் கீழ் சட்டத்தை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களில் அவர் ஒரு பகுதியாக இருந்தவர். அவர் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், பல சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மத்திய பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் வருகை தரும் ஆசிரியராக இருந்துள்ளார். அவர் தென் கொரியாவில் சர்வதேச வரிவிதிப்பு, பரிமாற்ற விலை மற்றும் ஒப்பந்த சிக்கல்கள் என்ற தலைப்பில் OECD ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கான புலனாய்வுக்கான டிஜிட்டல் சாட்சியப் புலனாய்வுக் கையேடு முதன்முறையாக அவரால் தயாரிக்கப்பட்டு, அக்டோபர், 2014இல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் வெளியிடப்பட்டது. மேலும் 2016 ஆம் ஆண்டு, முதல் முறையாக தரவு பகுப்பாய்வு கையேடு அவரால் தயாரிக்கப்பட்டது.

பிட்காயின் பரிவர்த்தனைகள் மீதான அகில இந்திய செயல்பாட்டின் ஒரு பகுதியாக அவர் பிட்காயின் பரிமாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மீதான விசாரணையை கையாண்டார். இதன் விளைவாக அதிக அளவு வெளியிடப்படாத வருமானம் கண்டறியப்பட்டது என வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்



ரூ. 3 கோடி மற்றும் ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

தமிழ்நாட்டில் முன்னணி தொழில் நிறுவனங்களை நடத்தும் குழுமத்தின் பல்வேறு வர்த்தக இடங்களில்  வருமான வரித்துறையினர் அண்மையில் (15.6.2022) சோதனை மேற்கொண்டனர். சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கோயம்புத்தூர் உள்பட 40-க்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

 இந்த சோதனையின் போது பல்வேறு போலி ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. போலியான கொள்முதல் ரசீதுகளை கணக்குப்புத்தகங்களில் பதிவு செய்து ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  பொருள்கள் விநியோகிப்போருக்கு காசோலை மூலம் பணம் வழங்கி பின்னர் அதனை பணமாக பெற்றுக்கொண்டு கணக்கில் வராத முதலீடுகளாக மாற்றப்பட்டிருப்பது, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து கண்டறியப்பட்டது. சர்வதேச சங்கிலித்தொடர் ஓட்டல்களில் இந்தியாவில் இருந்து மறைமுக செயல்பாடுகளி்ல் இந்த குழுமம் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.





 சோதனை நடவடிக்கையின் மூலம் கணக்கில் காட்டப்படாத

ரூ. 3 கோடி ரொக்கமும், ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை எம்.ஜி.எம். குழுமத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில் ரூபாய்.400 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிகிறது.

சென்னையைத் தலைமையிடமாக இயங்கும் எம்.ஜி.எம். குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினா் கடந்த 15-ஆம் தேதி முதல் முதல் 5 நாள்கள் சோதனை செய்தனா். சென்னை மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக அலுவலகம், சாந்தோமில் உள்ள எம்.ஜி.எம். குழும உரிமையாளா் வீடு, எம்.ஜி.எம். எக்ஸ்போா்ட்ஸ் அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, ஹோட்டல்கள், வேளாங்கண்ணியில் உள்ள ஹோட்டல்கள் உட்பட 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் அனைத்து இடங்களிலும் தற்போது படிப்படியாக நிறைவு பெற்றது குறித்து வருமான வரித்துறையின் முதன்மை ஆணையா் சுரபி அலுவாலியா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்

"சோதனையின்போது, வரி ஏய்ப்பு தொடா்பான பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்ததில், பல்வேறு தொழில்களில் உண்மையாக கொள்முதலை மறைத்து போலியான ரசீதுகள் மூலம் ரூபாய். 400 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், கணக்கில் காட்டாத வருமானத்தையும், லாபத்தையும் கொண்டு சில தொழில்களில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் செயல்படும் ஹோட்டல்களை, இந்தியாவில் இருந்து கட்டுபடுத்தக் கூடிய வகையில், இங்கு அலுவலகம் இயங்குவதும் தெரிய வந்துள்ளது. சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூபாய்.3 கோடி, ரூபாய் .2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன".

எம்ஜிஎம் குழும நிா்வாகிகளிடம் வருமானவரித்துறையின் புலனாய்வு பிரிவு விரைவில் விசாரணை நடத்த உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...