பாலைவனமாதல் மற்றும் வறட்சி நாள் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் ஏற்பாடு
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பாலைவனமாதல் மற்றும் வறட்சி நாள் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் ஏற்பாடு
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில், பாலைவனமாதல் மற்றும் வறட்சி தினம் இன்று நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாரப் பிரச்சினைகளில் நிலத்துக்கு உள்ள முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நிலத்தை ஆரோக்கியமானதாகவும், நல்ல விளைச்சலை தரக் கூடியதாகவும் வைத்திருக்க தனிநபர்களையும், குழுக்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பூபேந்திர யாதவ், மாசடைந்தள்ள நிலத்தை 2020-ம் ஆண்டுக்குள் மீட்டெடுப்பதை கடமையாக கொண்டு இந்தியா செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறியதாக தெரிவித்தார். நிலங்களை மறுசீரமைப்பது தொடர்பான செயல்களில் முன்னேற்றம் அடைய இணைந்து பணியாற்றுவதை இந்திய அரசு ஏற்று கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துகள்