அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் சட்ட விதிகளின் படி நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன
அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுமென்று அறிவிப்பு வந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி
திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டி அருகில் ஆவிலிப்பட்டி வசிக்கும் சூரியமூர்த்தி தான் அதிமுக உறுப்பினர் எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017 ஆம் ஆண்டில் கட்சியின் விதிகளுக்கு மாறாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதானென்று இதுவரை எந்த ஒரு நீதிமன்றமும் தெரிவிக்காத நிலையில் ஜூன் 23 ஆம் தேதி விதிமுறைகளுக்கு முரணாகத் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. எனவே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்த போது சூரியமூர்த்தி மனுவை நிராகரிக்கக் கோரிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து பதில் மனு தாக்கல் செய்திருந்ததையடுத்து வழக்கு ஜூலை மாதம் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென சூரியமூர்த்தி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதில், ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால் அவரது வழக்கை முன்பே விசாரிக்க வேண்டுமென்று கோரியிருந்ததையடுத்து, இந்த வழக்கை நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே நடந்து வரும் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு விசாரணை நடந்து நிலுவையில் உள்ள CS ,102/2022 வழக்கில் நீதியரசர் வேல்முருகன் வழங்கிய உத்தரவு ஏற்கனவே இருக்கும் நிலையில் அதன் முடிவுகளை மீறி பொதுக்குழுவில் அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிமுறைகள் திருத்தம் செய்ய முடியாது என்ற நிலையில் தற்போது சூரிய மூர்த்தி வழக்கில் சிவில் நீதிமன்றம் வழங்கப் போகும் உத்தரவு தான் தற்போது கட்சியின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் என்பதே தற்போதைய நிலை.எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிக ஆதரவிருப்பதாகத் தெரிந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் கூடுதல் அதிகாரத்தை கட்சியில் வைத்திருக்கிறார். இதை எல்லாம் மீறி ஒருவேளை ஒரே தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டு எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டால், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் மூலம் முடக்குவதற்கான அரசியல் காய்களை ஓ.பன்னீர்செல்வம் நகர்த்துவார் என்றே தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கடிதம் ஒன்றும் ஓபிஎஸ் தரப்பிலிருந்து வெளியானதாக தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதும். கவனிக்க வேண்டும் இது பற்றிய சட்ட ஆலோசனைகளையும், கட்சியின் அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற கட்சி துவங்கிய காலத்தின் மூத்த நிர்வாகியும் முன்னால் அமைச்சருமான பன்ருட்டி எஸ்.ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும் தகவல்கள் வருகிறது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் விவகாரத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி தான் வெற்றி பெற வேண்டும் என சி.வி.சண்முகம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் விருப்பங்கள் என்பதை விட திரு. பன்னீர் செல்வம் சார்ந்த சாதியினரால் தான் வீழ்த்தப்படுவார் என்பதற்காகவே மசோதாவை நிறைவேற்றியதன் மூலம்,(அது உச்ச நீதிமன்றத்தால் ரத்தானது) தற்போது 64 சட்டமன்ற உறுப்பினர்களை தன் கையில் வைத்துக் கொண்டு அரசியல் ஆட்டம் நடத்தும் நிலையில்.
உயர்மட்டக் குழுவிலும் தனது ஆள்களை வைத்துக் கொண்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருசங்கு சொர்க்கம் தான். என்றாலும் அதிமுக தொண்டர்களின் இயக்கம். நாங்கள் இணைந்த போது, பொதுச்செயலாளர் பொறுப்பு அம்மாவுக்கு மட்டுமே உரித்தானது என்று முடிவெடுத்தோம். அப்பதவியில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றே இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. தினகரன் அவர்கள் 18 உறுப்பினர்களை வைத்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர முயன்றதால் தான் இணைப்பு அவசியமாகியது. அதை நாங்கள் எதிர்த்ததால் தான், 5 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு காப்பாற்றப்பட்டது. (இதை அவர் கூறுவது உண்மை இல்லை என்று நாம் அறிந்த நிலையில்) துணை முதல்வர் பதவியையே பிரதமர் ஏற்றுக்கொள்ளச் சொன்னதால் தான் ஏற்றேன். எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அழைத்ததின் பேரில், மாதவரம் மூர்த்தி அவர்கள் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசினார்.
இந்த அஜென்டா எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதால், பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம், அமைதி காக்க வேண்டும். தொண்டர்களைக் காப்பாற்றவே இந்த இயக்கத்தில் தான் உள்ளேன் எனவும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் 3 மாதங்கள் மட்டுமே முதல்வராக இருப்பேன், பின்னர் வேறு ஒருவரை தேர்வு செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியே முதல்வராக பதவியேற்றேன். பதவியை நான் விரும்பவில்லை. தொண்டர்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது. எதிர்க்கட்சியாக நாம் இருக்கும்போது, ஆட்சியை மீண்டும் அமைப்பது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் இது தேவையா என்று தான் என்னை சந்தித்த நிர்வாகிகளிடம் கேட்டுள்ளேன். இரட்டை தலைமை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளர் பதவி காலஞ்சென்ற ஜெயலலிதா லுக்கு மட் மட்டுமே உரித்தானது.? (இது எம்ஜிஆர் கட்சி துவங்கி நடத்தி வந்த நிலையில் அப்போது இராகவானந்தம் பொதுச்செயலாளர் அதன் பின்னர் தான் ஜெயலலிதா) மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவருவது, ஜெயலலிதாவுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். கட்சி பிளவுப்படக் கூடாது என்பதே என் எண்ணம். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை தேவையில்லை. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி ஒரு தீர்மானமும் கொண்டுவர முடியாது. இந்தப் பிரச்சனையை சரிசெய்ய பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் முடிவெடுத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுத்தால் ஒப்புதல் அளிக்கக்கூடிய அளவுக்கான குழு ஒன்றை அமைக்கக் கோரியுள்ளோம். இந்த விவகாரத்தை வெளியில் பேசியது கண்டிகப்பட வேண்டும். இரட்டை தலைமை என்று சொன்ன போது, முதலில் நான் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றார்கள். இரு நாட்களுக்கு பின்னர் அவரும் கையெழுத்திட வேண்டும் என்றார்கள். தொண்டர்களின் எண்ணம் கட்சி இணைய வேண்டும் என்றிருந்ததால், நான் அதை ஒப்புக்கொண்டேன். தொண்டர்கள் மனசஞ்சலம் படக்கூடாது என்பதால் தான் எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்தேன். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ஜெயலலிதா காலமாகிவிட்ட காரணத்தால், தற்காலிக ஏற்பாட்டில் கட்சியை வழிநடத்த சசிகலா நடராஜன் அவர்களை பொதுச்செயலாளர் ஆக்கினோம். அவ்வளவு தான். சசிகலா அவர்களை கட்சியில் இணைப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துப்பேசி முடிவெடுப்பார்கள். இதை ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. தேனி மாவட்ட தீர்மானமும் அப்படியானது தான்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டு ஓ.பன்னீர் செல்வம் விலக மறைமுக அழுத்தமா என்று திரும்பத் திரும்க்ப கேட்டதற்கு தொண்டரகள் முடிவு செய்வார்கள், தொண்டர்கள் முடிவிற்கு முழுவதும் கட்டுப்படுவேன் என்கிறார் ஓ. பன்னீர் செல்வம். இவர் ஒருங்கிணைப்பாளராக வந்தது தொண்டர்கள் விருப்பமா என்பதே கட்சி சார்ந்த நபர்கள் மத்தியில் உள்ள விடை தெரிந்தாலும் கூறமுடியாத வினா ?
அந்தத் தொண்டர் தான் யார்? என்ற வினாவும் இவர்கள் பதவிக்கு வந்தது அதிமுக தொண்டர்கள் சொல்லியா? என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் உண்டு. ஓ.பன்னீர் செல்வம் அளித்த அவரது பேட்டியில் சில முரண்பாடுகள் உள்ளன. டி.டி.வி தினகரன் தலைமையிலான 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. பிப்ரவரி என்பதே உண்மை 2017 ஆம் ஆண்டு அரசின் பலத்தை நிரூபிக்கும் நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, டி.டி.வி.தினகரன்-எடப்பாடி கே.பழனிச்சாமி அணிக்கு எதிராக வாக்களித்தது 11 பேர் கொண்ட ஓ.பன்னீர் செல்வம் சார்ந்த அணி தான். ஆனால் தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததாகவும், அதை எதிர்த்து தாங்கள் வாக்களித்ததால் தான் ஆட்சி தப்பித்தது என்றும் ஒரு தவறாக மாற்றிப் சொல்கிறார் என்பதே நாமறிந்த வரை உண்மை அடுத்ததாக ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மூன்று மாதங்கள் மட்டுமே முதல்வராக இருப்பேன் என்று கூறியதாக தற்போது சொல்கிறார். ஆனால் தர்மயுத்தம் என நடத்திய காலத்தில், தன்னை யாரோ ஒருவர் குரு சிஷ்யன் ஆலோசனை கூற தன்னை அடித்து, முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். என்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்றார். அதுவே அவரது பேச்சில் உள்ள முரண் முதல்வர் பதவி மீது விருப்பம் இல்லாதவர், எதற்காக அன்றைக்கு விலகச் சொன்னதற்காக எதிர்த்துப் போராடினார் என்பது தான் தற்போது உண்மையான தொண்டர்களின் வினா?. இதற்கான பதில்களை அவர் விளக்க வேண்டும். மேலும் அஇஅதிமுக எனும் கட்சி தற்போது உள்ள நிலையில் இதுவரை வழிநடத்தியதாக நம்பப்படும் சிலர் வேடிக்கை மட்டுமே பார்க்க காரணமாக இருப்பது அரசியல் மாற்றங்கள் தான்.இனி அதிமுக என்பது பழைய வாக்கு வங்கி இருக்கும் கட்சியாக இருக்குமா என்பதும் அல்லது இது பிளவுபட்டு மீண்டும் சின்னம் முடக்கப்படுமா. என்பது பொதுக்குழுக் கூட்டம் முடிந்து குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் தான் நமக்கு உண்மை நிலை அறிய முடியும்.
கருத்துகள்