முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை உலக மிதிவண்டி தினம்

உலக மிதிவண்டி தினத்தில் மகாத்மா காந்தியின் படத்தைப் பகிர்ந்துள்ளார் பிரதமர்

இன்று உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை” என்ற கருத்தை குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, இன்று உலக மிதிவண்டி தினம், நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த மகாத்மா காந்தியை விட சிறந்தவர் யார்”.உலக மிதிவண்டி தினம் கொண்டாட்டம்

உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் தமிழ்நாட்டில் சென்னை உட்பட புராதன சிறப்பு வாய்ந்த ஆறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டது.


ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக மிதிவண்டி தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர அமிர்த பெருவிழாவையொட்டி நாடுமுழுவதும் 75 இடங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. தலைநகர் புதுதில்லியில், மேஜர் தியான்சந்த் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

சென்னையில், நேரு இளைஞர் மையம், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனரகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து உலக மிதிவண்டி தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் நேரு இளைஞர் மையத்தின் மாநில இயக்குனர் திரு என் எஸ் மனோகரன் தலைமையில் நடைபெற்ற மிதிவண்டி பேரணியை  தமிழக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் திரு மகேஷ்குமார் அகர்வால், தொடங்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திரு மகேஷ்குமார் அகர்வால், மிதிவண்டி பயன்பாட்டின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதேபோன்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், வேலூர் கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாட்சி ரயில் நிலையம், சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஆகிய புராதன சிறப்புமிக்க இடங்களிலும், உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது.


மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உலக மிதிவண்டிதினத்தை முன்னிட்டு மிதிவண்டி பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.உலக சைக்கிள் தினமான இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜு, திரு மன்சுக் மாண்டவியா, திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்

உலக சைக்கிள் தினத்தையொட்டி, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை  இணை அமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் எம்.பி.யுமான டாக்டர். ஹர்ஷ்வர்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  திரு மனோஜ் திவாரி,  திரு ரமேஷ் பிதுரி, இளைஞர் விவகாரத் துறை செயலாளர் திரு. சஞ்சய் குமார், விளையாட்டுச் செயலாளர் திருமதி. சுஜாதா சதுர்வேதி மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


தியான் சந்த் மைதானத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் 7.5 கிமீ பேரணியில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நேரு யுவகேந்திரா சங்கம்  நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் பேரணிகளை ஏற்பாடு செய்தது. 

பேரணியைத் தொடங்குவதற்கு முன்பு உரையாற்றிய திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தியா விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடும் நிலையில், மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் மிதிவண்டி பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கான தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் நோக்கம், உடல் ஆரோக்கியத்திற்காக மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதாகும்  என்று கூறினார்.

“பிட்னஸ் பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி விரும்புகிறார்.  ஃபிட் இந்தியா பிரச்சாரத்தில் சைக்கிள் ஓட்டுதல் மிகப்பெரிய பங்கை வகிக்க முடியும். உலக சைக்கிள் தினத்தில், ஒவ்வொருவரும் சைக்கிள் ஓட்டுவதை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் வழங்குகிறோம். சைக்கிள் ஓட்டுதல் உங்களை ஆரோக்கியமாகவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும் உதவும்” என்று திரு தாக்கூர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...