சுங்கச்சாவடிக் கட்டணங்களின் தரவுகளைச் சேகரித்து புதிய சேவையை விரைவில் வழங்கத் தயாராக கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருக்கும் 2000 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிக் கட்டணங்களின் தரவுகளைச் சேகரித்து புதிய சேவையை விரைவில் வழங்குகிறது.
உலகின் பிற நாடுகளிலும் அளிக்க உள்ளது .கூகுள் நிறுவனம் இந்த சுங்கச்சாவடிக் கட்டண விபரங்கள் முதல்கட்டமாக நாட்டின் சில பகுதிகளுக்கு தற்போது மட்டுமே அளித்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விரைவில் இச்சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது கூகுள் பேம்ப்ஸ்-ல் எப்போதும் போலவே நீங்கள் செல்ல வேண்டிய இடத்தைப் பதிவு செய்து
Directions என்பதைக் கிளிக் செய்த உடனே எவ்வளவு மணிநேரத்தில் செல்ல முடியும், எவ்வளவு கிலோமீட்டர் தொலைவு என்பதன் விபரமிருப்பதை அறியலாம்.
அதனுடன் மூன்றாவதாக ஒரு வட்டத்திற்குள் 1,2,3 என தத்தம் வழித்தடத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும்
அந்த வட்டத்தைக் கிளிக் செய்தால் போதும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை காட்டும். இதைப் பயன்படுத்தி எளிதாக சுங்கச்சாவடிகளைக் கடந்து தாங்கள் பயணங்கள் சிறப்பானதாக மாற்றமாகும்.
கருத்துகள்