முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஇஅதிமுக பொதுக்குழுவில் நடந்த நிகழ்வு கூறும் உண்மை

 கம்ப இராமாயணம் சுந்தர காண்டம் காப்பிலிருந்து துவங்குவோம்


  "அலங்கலில் தோன்றும் பொய்மை  அரவெனப் பூதம் ஐந்தும் விங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்  கலங்குவது எவரைக் கண்டால் அவர் என்பர் கைவில் ஏந்திஇலங்கையில் பொருதார் அன்றோ?மறைகளுக்கு இறுதி ஆவார்"

(அலங்கள்-- மலர்மாலை) இக்கால சூழ்நிலையில்நிலம் நீர் காற்று  ஒளி ஆகாயத்தில் ஊடுறுவிய தொற்றுக்கிருமிகள் --உயிர்கிருமிகள் இவற்றால் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றங்கள்  மலர்மாலையில் உட்புகுந்த பாம்பு  அதுமட்டுமா?   கம்பனின் காவிய உவமை நயம் எக்காலத்திற்கும் பொருந்தும் படியான நிகழ்வுகள். மற்றும் கிடைத்த தரவுகள்





அதிமுகவின் ஒரு தரப்பினர் பணத்தை அள்ளி விட்டதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு பேசும் நபர்கள் கருத்தை புறம் தள்ளி விட முடியாது தான் என்பதே புதிய கணக்கு சொல்வதாக அமைகிறது 

  இனி அடுத்த ஒரு வருஷத்துக்கு பொதுக்குழுவைக் கூட்ட முடியாது என்ற போதிலும் இடையே ஒரு தேதியில் நடைபெற புதிய அவைத் தலைவர் தேதி அறிவிப்பு செய்துள்ள செய்திகள் வருகின்றன.

அப்படியே அவசரமாகக் கூட்ட வேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்  கையெழுத்து வேண்டும். சரி இப்போது அஇஅதிமுக பொதுக்குழு நீதிமன்றத்தில் கூறிய உத்தரவு காரணமாக ஒரே தலைமை முடிவு எடுக்க இயலாத நிலையில்  அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்ட மேடையிலிருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர். அதைத் தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், ``சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழுத் தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால்  தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும். அதிமுக-வை அழிவுப்பாதைக்குச் சதிகாரர்கள் கொண்டு செல்கிறார்கள்” என்றார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், `தொண்டர்களின் கடிதத்தை அடுத்து, ஜூலை மாதம் 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்” என அறிவித்ததைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், `சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழுக் கூட்டம்’ எனக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு கீழே இறங்கினார். அதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அரங்கில் இருந்தவர்கள் தொடர்ச்சியாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டன.






இந்த நிலையில் பேசிய கே.பி.முனுசாமி, ``பொதுக்குழுவின் 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படாது. இதைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரிக்கிறார்கள். ஒற்றைத் தலைமை வந்தால் மட்டுமே அந்தத் தீர்மானங்கள் நிறைவேறும்” என்றார்அ இஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் குறித்து ஜூலை 19 ஆம் தேதி நமது பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் கூறிய கருத்து தற்போது உண்மையான நிகழ்வுகளாக நடந்த நிலையில். முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் கட்சியின் தலைமை அதிகாரத்திற்கான இத்தனை சிக்கல்கள் வரும் என்று அஇஅதிமுகவின்  பொதுச்செயலாளராக  தேர்வாகி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்த பிறகு வழக்கு நீதிமன்றத்தில் நடத்தும் சசிகலா நடராஜன்  நினைத்திருக்கவில்லை.கூவத்தூரில் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தன்வசமாக மாற்றி பின்னர் சிறை சென்றவர் அப்போதும் எடப்பாடி கே.பழனிச்சாமி மொத்தமாக கட்சியை விலைக்கு வாங்குகிறாரோ அல்லது கைப்பற்றுகிறார். என்பதைக் கணிக்கத் தவறி விட்டார் என்பதும் 





பொதுச் செயலாளர் சசிகலா நடராசனை சொல்லி விட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக் குழுவில் உருவாக்கிய அதே ஆயுதத்தை எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் தற்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக பயன்படுத்துகிறது.

அன்று எதையெல்லாம் தன்னைப் பாதுகாக்கப் பயன்படுத்தினாரோ அதற்கு நேர் எதிராகப் போராட முயற்சி செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

முனைவர் எம். நடராசன் இல்லாத குறையையும், தன் நிழல் நின்ற காக்கைக் கூட்டம் தன்னை நட்டாற்றில் விட்டு விட்டது என்பதையும் சசிகலா நடராஜன் தற்போது நன்கு உணர்ந்திருப்பார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யாருக்கும் விசுவாசம் அல்லது ஒரு சார்பு நிலை இல்லை என்பதையும், கட்சி மற்றும் சின்னம் மற்றும் கொடி ஆகியன யார் அதிகாரத்திற்காக வருகிறதோ அவர்கள் தான் தேவை அதற்கு அரசியல் செய்வது தான் இன்றைய பொது விதியாகிப் போனது.

காலம் சென்ற முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா இருக்கும் போதே பலர் அவருக்கு எதிராக அரசியல் செய்தார்கள். ஆனால் இன்று எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் இப்படிச் சரணடையக் காரணம் ஊழலன்றி வேறேதுமில்லை என்பதை உணர முடிகிறது. 

அஇஅதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. '23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்திலிருந்து இ மெயில் வந்தது; அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களைத் தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்தனர்.             விடிய விடிய நடந்த மேல்முறையீட்டு மனு விசாரணை, அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர்.

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. முடிவில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து,நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்றிரவே ஒ.பன்னீர்செல்வம். தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரண்டு நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர். எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில், வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயணனும், மற்றும் ஓ.பன்னீர்செல்வம். தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலெட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.






பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம். தரப்பும், பொதுக்குழுவை நடத்த வேண்டும் என எடப்பாடி கே.பழனிச்சாமி, தரப்பும் விடிய விடிய வாதம் செய்தனர். வாதம் அதிகாலை 4.00 மணிக்கு முடிவடைந்த நிலையில், 4.20 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அதிமுக பொதுக்குழு நடத்த எந்தத் தடையுமில்லை. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று காலை 10:00 மணிக்கு அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த நிலையில் இன்று நடைபெறும் அ.தி.மு.க., பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் வாக்குகள் பிரிவதை பாரதிய ஜனதா கட்சியும் விரும்புவதாகவே  தெரிகிறது இரட்டை இலைச் சின்னம் முடங்குவதும். முடங்காததும் என்பதை பொறுத்தே அது அமையும்.

இதன் வாயிலாக எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் கூடுதல் தொகுதிகளை தங்களுக்காக கேட்டுப் பெற முடியும் என்றும் ஒரு அரசியல் நிலவ அதுவே தற்போது அரசியல் பார்வையாளர்கள் பேச்சாகவும் உள்ள நிலையில்.

அஇஅதிமுக தொண்டர்கள் தங்கள் அரசியல் எதிர்காலம் பற்றி இதுசிந்திக்க வேண்டிய நேரம். 

இதில் மூத்த பத்திரிக்கையாளர் விமர்சனங்களையும் கவனிக்க வேண்டியது. எடப்பாடி கே.பழனிச்சாமி அரசியல் தெரிந்த எத்தனுக்கு எத்தன். சர்வாதிகாரியும் கூட. ஆனால் ஒ. பன்னீர் செல்வம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஆபத்தானவர். என்பது அக்கட்சியின் பல நபர்களின் உணர்வு மாற்று கட்சியின் முன்னோடிகள் கணிப்பு. அக் கட்சியில் கடந்த கால நிகழ்வுகள் 

இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் என்ன செய்வார்கள்?

இதில் மேலும் கவனிக்க வேண்டியது, “ இப்போதைக்கு தேர்தல் ஆணையம் செல்ல மாட்டோம்” என்ற திரு. வைத்தியலிங்கத்தின் குறிப்பு கவனிக்க வேண்டியது.அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே பார்க்க வேண்டும் 

முழுக்க முழுக்க எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால், முழு தாக்கம் பொதுக்குழு துவங்கி, வைகைச் செல்வன் வரவேற்றுப் பேசியதும் நடுவில் புகுந்த முன்னாள் அமைச்சரும் தற்போதய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீரென ஒலிபெருக்கி முன் வந்து '23 தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது' , என்று சத்தமாக கூறிவிட்டு அமர்ந்தார். அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, ' என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே என்ற எம்ஜிஆர் திரைப்படப் பாடலைக் குறிப்பிட்டு விட்டு தலைவன் ஒருவன் இருக்கிறான். அவன் வருவான், வருவான் என்று ஆவேசமாகக் கூறிவிட்டுச் சென்ற போதே அந்தக் கூட்டம் எதை நோக்கிச் செல்கிறது, யாருக்கு மகுடம் சூட்ட நினைக்கிறதென்பது புரிந்தது.

அதை நிரூபிப்பது போல், அடுத்ததாகப் பேசிய கே.பி.முனுசாமி, அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஒற்றை தலைமை தீர்மானத்தோடு தான் கூட்டப்படுமென்ற உடனே அரங்கத்தில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், கைதட்டினர்.

முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும் போது, ஒற்றைத் தலைமை நாயகன் எடப்பாடி கே.பழனிசாமி என்று உயர்த்தி பிடித்ததையெல்லாம் மேடையில் அமர்ந்திருந்த ஓ.மன்னீர்செல்வம் சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

திரும்பவும் பேசிய சி.வி.சண்முகம் ஒற்றை தலைமைத் தீர்மானத்தோடு அடுத்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கான தேதியை அவைத்தலைவர் இப்பொழுதே அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையில் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூறிவிட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய காகித தொகுப்பு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் கொடுத்தார்.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததவர் போல், தமிழ் மகன் உசேனும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை மாதம் 11 ஆம் தேதி இதே மண்டபத்தில் நடக்குமென்று உடனே பதிலளித்தார். ஒரு பொதுக்குழுவை புதிதாக கூட்டுவதற்கு முன்பு, எந்த தேதியில் கூட்ட வேண்டும் என்று, கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்காமல் தேதியை உடனே முடிவு செய்ய முடியுமா?  என்பதும் ஆனால், தமிழ் மகன் உசேன் உடனடியாக தேதியை அறிவித்தது அங்கிருந்தவர்களை மட்டுமல்லாமல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இது முன்கூட்டியே பேசி வைத்து அரங்கேற்றப்பட்ட நாடகமென்பது தெரிந்தது. என் பலர் பேசினர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் முன் கூட்டியே செய்யப்பட்டதும், மேடையில் பேசிய எல்லாருமே ஒரே மாதிரியாகப் பேசியதும், எடப்பாடி கே. பழனிச்சாமி எந்தளவுக்கு திறமையாக அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தியுள்ளார் என்பதைக் காட்டியது. மொத்தத்தில் இதில் பொதுநீதி யாதெனில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...