முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆபரேஷன் சிவசேனா மூலம் கட்சியை உடைத்த இரண்டாம் கட்டத் தலைவர்.

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் கௌஹாத்தியில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை யோகா முகாமென சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை சாம்னா விமர்சிக்கிறது. 


மகாராஷ்டிரா சட்டசபையில்  288 இடங்களில் பாஜகவுக்கு 106 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் மட்டுமே கிடைத்தன.ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, இந்திய தேசிய காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், இணைந்து சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த.


சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவிருந்தது. தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அரசியல் செய்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் சட்ட மன்ற மேலவைத் தேர்தலில் ஓரளவு வெற்றியும் கிடைத்த நிலையில்



தற்போது மாறிய அரசியல் சூழ்நிலையில் முகநூல் நேரலை மூலமாக தொண்டர்களிடம் உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாதென விரும்பினால் முதல்வர் பங்களாவிலிருந்து அப்படியே வெளியேறத் தயாராக இருக்கிறேன்.' என்று கூறியதையடுத்து அவர், முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையான வெர்சா இல்லத்திலிருந்து பெட்டியுடன் தனது வீட்டுக்குப் புறப்பட்ட நிலையில்



ஜூலை 21 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் முகாமிட்டுள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 சட்டமன்ற உறுப்பினர்கள் . அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியினர் ஆளும் வேறு மாநிலமான அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு இரண்டு நாட்களில் மட்டும் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர்கள் பலம் 39 ஆக அதிகரித்துள்ளது.அரசுக்கு எதிராக அசாம் ப்ளூ ரேடீசன் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள்



ஜூலை 23 ஆம் தேதி மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் அதை உறுதிபடுத்தியிருக்கிறார். இந்த நிலையில்  மராட்டிய மாநிலத்தில் திரைமறைவில் செயலாற்றிய மூன்று பாஜக தலைவர்கள் உதவ முதல்வர் உத்தவ் தாக்கரேக்குத் தெரியாமல் ஷிண்டே சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்ற தகவல் 

தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிவசேனா கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் 39 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றநிலையில் இதன் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சிவசேனாவை உடைத்ததன் பின்னணியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேரந்த 3 பாஜக இரண்டாம் கட்டத் தலைவர் மூன்று நபர்கள் என பேசப்படுகிறது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டுமென சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் 39  பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவர்கள் முதலில் குஜராத்தின் சூரத் நகருக்கும், பின்னர் அசாம் மாநிலம் கௌஹாட்டிக்கும் தனி விமானத்தில் சென்றனர். இவர்கள் கௌஹாத்தியில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.

சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே காலத்திலிருந்து குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே கட்சி இருந்து வருகிறது. சிவசேனாவில் அதன் தலைவர் உத்தவ் தாக்கரேயின் நிழலைத் தாண்டி யாரும் எதுவும் செய்து விட முடியாது. கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட அவரிடம் பேசுவதற்கே அஞ்சும் நிலை தான் இதுவரை இருந்துள்ளது.

அப்படிபட்ட சூழலில் அக் கட்டுப்பாடுகளைத் தாண்டி சிவசேனா உடைந்தது எப்படி என்ற கேள்வி அரசியல் மேடைகளில் எழுகிறது. மராட்டிய மாநில அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே எப்படி 39 சட்ட மன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு கட்சித் தலைமைக்கு சவால் விடும் நிலைக்குச் சென்றார் என்ற ஆச்சரியம் அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் உள்ளது. தற்போது 

சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தாங்கள் காரணமல்ல என்றும் அதில் தங்களுக்கு எந்த விதமான தொடர்புமில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. ஆனால் மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூன்று பேர் திரைக்குப் பின்னால் முக்கியப் பங்காற்றியுள்ளதும் இங்கு பேசப்படுகிறது.

சிவசேனா அதிருப்தியாளர்களை மும்பையிலிருந்து சூரத்துக்கும் பின்னர் கௌஹாத்திக்கும் அழைத்துச் செல்ல வாகனங்கள் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ரவீந்திர சவான், டாக்டர் சஞ்சய் குடே மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணித் தலைவர் மோஹித் காம்போஜ் ஆகியோர் கடினமாகச் செயல்பட்டு கனகச்சிதமாக இந்த பணியைச் செய்து முடித்துள்ளனர்.

முன்பு முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசில் சவான் மற்றும் குடே ஆகியோர் அமைச்சர்களாக இருந்தவர்கள். தற்போது அவர்களும் சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுடன் கௌஹாத்தியில் தங்கியிருப்பதாகக் பேசப்படுகிறது.

இந்த நடவடிக்கை எல்லாம் முக்கூட்டியே திட்டமிடப்பட்டு சரியான நேரத்தில் செய்யப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் தெரிகிறது. மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரஹாந்த் பாட்டீல் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கிரீஷ் மஹாஜன் ஆகியோர் இதற்கான முயற்சியைப் பின்னணியிலிருந்து எடுத்துள்ளனர். எனினும் அவர்கள் கூட நேரடியாக சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கவில்லை என்பதும் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாதிக்காத வகையில் 

இந்த ரகசிய ஏற்பாட்டை அறியாத முதல்வர் உத்தவ் தாக்கரே இருக்கும் நிலையில்.

ஏக்நாத் ஷிண்டே தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைத் தொடர்பு கொண்டு பேசிதயாகவும், பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை இதனைச் செய்து முடிக்க அதன் மாநிலத் தலைமைக்கு அதிகாரத்தை வழங்க ஒத்துழைப்பு வழங்கக் கூறியதாகத் தன் தெரிய வருகிறது.

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை மும்பை நகரத்திலிருந்து வெளியேற்றி சூரத் அழைத்து செல்லும் பணி முழுவதுமே மிகவும் விரைவாகவும், இரகசியமாகவும் நடத்தி முடிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநில காவல்துறையின் புலனாய்வுப் பிரிவினரால் கூட அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகுமளவிற்கு கண கட்சிதமாகப் பணிகள் நடந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க்கைச் சேர்ந்த சவான், குங்குமப்பூவின் விற்பனைக்கு பெயர் போன மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவலியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005 ஆம் ஆண்டில் கல்யாண் டோம்பிவலி மாகராட்சித் தேர்தலில் முதல் கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.  பின்னர் மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவராகயிருந்தார்.

2009 ஆம் ஆண்டில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஆரம்பத்தில் மூத்த தலைவர் வினோத் தவாடேவுடன் நெருக்கம். பின்னர் அப்போதைய முதல்வர் பட்னாவிஸிக்கு நெருக்கமானார். சவான் 2016 ஆம் ஆண்டில் மாநில அமைச்சரானார். அத்துடன் மீரா பயந்தர், தானே மற்றும் நேவி மும்பை உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியின் பொறுப்பை ஏற்று திறம்பட செய்தார்.

இது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில்‘இந்தப் பணிக்கு சவானின் தேர்வு சரியான நடவடிக்கை. சிவசேனா பற்றிய அவரது நுணுக்கமான அறிவு மற்றும் அதன் வலிமையான தந்திரங்கள் போன்றவற்றை தெரிந்தவர். இதுமட்டுமின்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் எப்போதும் தொடர்பிலிருப்பவர். சிவசேனாவின் வலுவான செயல்பாடுகளையும், அதன் தற்போதைய நகர்வுகளையும், பலவீனங்களையுமறிந்து அதற்கேற்ப செயல்பட சரியான நபரென்பதால் அவரை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தேர்வு செய்து பொறுப்பை கொடுத்தது.

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஷிண்டே

சவானுக்கு ஷிண்டேவுடன் நல்ல உறவிருக்கிறது. தானேவில் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் இருவரும் எப்போதும் கைகோர்த்துச் செல்வதும் வழக்கம். இந்த உறவு அவர் ஷிண்டேவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை எளிதாக்கியுள்ளது. மேலும் 

ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் கல்யாண் தொகுதியில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் தான் சவானின் தொகுதியான டோம்பிவலியும் இடம் பெற்றுள்ளது.

‘ஆபரேஷன் சிவசேனா’வில் பணியாற்றிய மற்றொரு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சஞ்சய் குடே

ஆயுர்வேத மருத்துவப் பயிற்சியாளர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவராகவும் குடே இருந்து வருகிறார். 2004 ஆம் ஆண்டு முதல் புல்தானாவின் ஜல்கான்-ஜமோட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வருகிறார்.

மூன்றாவது நபர் வாரணாசியைச் சேர்ந்த காம்போஜ், இந்திய பொன் நகை சங்கத்தின் தலைவராக இருந்தார். மேலும் நகை வணிகத்தைத் தவிர, ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளிலும் பங்குகளை வைத்துள்ளார். கடந்த ஆண்டு, கம்போஜ் தனது குடும்பப் பெயரை ‘பாரதியா’ என மாற்றிக் கொண்டார்.

இந்த விவகாரத்தில் பாஜக தலைமை மிகவும் ரகசியமாக செயல்பட்டுள்ளது. இந்த மூன்று பேர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அதற்காக தெரியாதது போல நடந்து கொண்டது. பாரதிய ஜனதா கட்சியின் சில மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், இந்த நடவடிக்கையில் மூன்று தலைவர்களின் தலையீடு எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

சிவசேனாவில் நிகழும் எந்த ஒரு விஷயத்திலும் பாஜகவுக்கு எந்தத் தொடர்புமில்லை என மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் மீண்டும் கூறியிருந்தார். ஆனால் இரகசியமாக இந்த மூன்று இரண்டாம் கட்டத் தலைவர்களும் சரியான முறையில் செயலாற்றி தங்கள் இலக்கை எட்டி சிவசேனாவை உடைத்தே விட்டர்.

அடுத்தாக மகாராஷ்டிராவில் என்ன அரசியல் நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி செய்யப் போகிறது என்பதும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இது குடியரசு தலைவர் தேர்தலுக்கு பிறகு தான் அரசியல் நடவடிக்கைகள் தொடர வாய்ப்புண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு