பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட கடைகள் அனைத்தும் நாள் முழுவதும் செயல்பட அனுமதி அரசாணை வெளியீடு
பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட கடைகள் அனைத்தும் நாள் முழுவதும் செயல்பட அனுமதி அரசாணை வெளியீடு
தமிழக அரசு.சார்பில் ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கவும்.ஒவ்வொரு பணியாளரின் விவரங்களும் நிறுவன உரிமையாளரால் காட்சிப்படுத்தப்படவும் . ஊழியர்களின் ஊதியம், கூடுதல் நேர ஊதியம் சேமிப்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டுமெனவும். எந்த ஒரு ஊழியரும் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாதெனவும்.
பணியாளர்கள் விடுமுறையிலோ அல்லது பணி நேரத்திற்குப் பிறகோ பணிபுரிவது கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்.
பெண் ஊழியர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை எனவும்.
பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, அவர்களின் பாதுகாப்பிற்கு போதுமான சூழ்நிலையை வழங்கி இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டுமெனவும்.
ஷிப்டுகள் எனப்படும் பணி சுழற்சி முறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும். போக்குவரத்து வசதிகள் இருப்பதைக் குறிக்கும் வகையில், நிறுவனத்தின் முக்கிய நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும்.
பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படுவது கட்டாயம் எனவும் .
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க, புகார் குழுவை ஏற்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்