முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சிங்கம்புணரியில்  பத்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கம்புனரிக்கு வருகிறார்

சிங்கம்புணரி வட்டம் கோட்டைவேங்கைபட்டியில் சமத்துவபுரத்தை திறந்துவைத்தும்,

திருப்பத்தூர் வட்டம் காரையூரில் பத்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 

கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் இலவச மனைகள் 100 அடங்கும் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன,

அந்தக் காலகட்டத்தில் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம் பட்டி ஊராட்சி கோட்டை வேங்கைப்பட்டியில் 2010 ஆம் ஆண்டில் ரூ.1.92 கோடியில் சமத்துவபுரம் கட்டும் பணிகள் துவங்கிய

கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு மாறியதையடுத்து கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டன, தொடர்ந்து திமுக தரப்பினர் வலியுறுத்தியதன்பேரில், மீண்டும் கட்டுமானப் பணிகள் துவங்கி 2012 ஆம் ஆண்டு முழுமையடைந்தது. 

2016 ஆம் ஆண்டில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது .

ஆனால் அதன்பிறகு சமத்துவபுரம் திறக்கப்படவில்லை  இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு வந்த திமுக தலைவர், தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் சமத்துவபுர வீடுகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார், 


தி.மு.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவபுரம் வீடுகளை திறக்க ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கேஆர்.பெரியகருப்பன் நடவடிக்கை மேற்கொண்டார். 

சமத்துவபுரம் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று 08. ஜுன்.2022, காலை 9 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டை வேங்கைப்பட்டியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் காலை 10 மணிக்கு திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் சோழம்பட்டியில் நடக்கும் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார், 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன்,

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பூபதி, உதவி அலுவலர் ராஜ செல்வன், பாதுகாப்பு பணியில் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்பி.செந்தில் குமார் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் ஆத்மநாதன், வினோஜி, மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும்  புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ள தமிழக முதல்வர், தங்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை.





அறந்தாங்கி வட்டத்தில் மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி முன்மாதிரி பள்ளியாக மாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி, அங்கிருந்து 2019 ஆம் ஆண்டில் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றார்.அங்கு, மக்கள் பங்களிப்பு, அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி அனைத்து வகுப்பறைகளிலும் தொங்கு கூரை அமைத்தார்.

தரை தளங்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அனைத்து வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் போர்டு, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டது. விளையாட்டுக் கருவிகளுடன் கூடிய கலையரங்கம்,  சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படும் இப்பள்ளிக்கு, புதுக்கோட்டைக்கு வரவுள்ள தமிழக முதல்வர் வரவேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பச்சலூர் பள்ளி மாணவர்கள் கருத்து: எங்கள் பள்ளி கரும்பலகை இல்லாத அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் பள்ளியாக செயல்படுகிறது. இந்த பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் அண்மையில் டெல்லிக்கு சென்று அங்குள்ள அரசு முன்மாதிரியைப் பார்வையிட்டு வந்துள்ள தமிழக முதல்வர், நம் மாநிலத்தின் முன்மாதிரி பள்ளியாக திகழும் எங்கள் பள்ளிக்கும் வரவேண்டும் என்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று வரும் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நினைவு நுாலகத்தை நேற்றிரவு பார்வையிட்டார்.

நேற்று இண்டிகோ விமானத்தில் மாலை 6:35 மணிக்கு முதல்வர் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்துார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், எ.வ.வேலு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.





மதுரை புது நத்தம் ரோடு பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகே 2.04 லட்சம் சதுரடி பரப்பளவில், 7 மாடிகளுடன் கூடிய, நவீன வசதிகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டு வரும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நுாலகப் பணிகள் 2022 ஜனவரி மாதம் 11ஆம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 75 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதனை நேற்று தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இரவு 7:34 மணிக்கு வந்த முதல்வர், முன்னால் முதல்வர் மு.கருணாநிதி சிலை அமையும் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, கலையரங்கு அமைய உள்ள தரைதளம், கருணாநிதி அரங்கம் அமைய உள்ள முதல் தளத்தையும் பார்வையிட்டார். கட்டுமான விவரங்களை பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி விளக்கினார். இரவு 8:03 மணிக்கு அவர் மேலுார் அருகே தும்பைப்பட்டியிலுள்ள தனியார் விடுதியில்தங்கினார்.

இன்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி சமத்துவபுரத்தை காலை 9:45 மணிக்குதிறந்து வைக்கிறார்.11:00 மணிக்கு காரையூரில் நடக்கவுள்ள விழாவில் 49 ஆயிரம் பயனாளிகளுக்கு 240 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவி வழங்குகிறார்.அங்கிருந்து புதுக்கோட்டை செல்கிறார்.   



காரையூர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தன்னிடம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார். சிவகங்கை இராணி வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரியை சிவகங்கையில் துவங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...