தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளமருகில் குளத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு
சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயில்கின்ற இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம் ஜூலை மாதம் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன் முனீஸ்வரனிடம் கைத் தொலைபேசி மூலம் தாங்கள் சார்ந்துள்ள ஜாதி ரீதியில் பேசியுள்ள.
பதிவு செய்யப்பட்ட ஆடியோவில், நீயும் நானும் ஒரே ஜாதி, ஆனா அந்த பி.டி. டீச்சர் வேற ஜாதி எனக் கூற அதற்கு அந்த மாணவன் 'எல்லோரும் சமம் தானே டீச்சர்' எனப் பதில் தந்துள்ளார். மேலும்
அந்த ஆசிரியர் வேறு விபரத்தை நாடாமல். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொறுப்பு அந்தச் ஜாதியினருக்குச் செல்லக்கூடாது எனவே உங்க ஜாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளதாகவும்.
அந்த வகையில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய
நிலையில் , மாணவரிடம் ஜாதி ரீதியாகப் பேசிய பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகிய ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த செல்போன் உரையாடல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், இந்த உரையாடலில் பேசிய குளத்தூர் அரசுப் பள்ளி மாணவன் முனீஸ்வரனிடம், தமிழ்நாடு அனைத்து தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் முகவை கே கே பேசியதாக ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளதில் அவர் அந்த மாணவனிடம், "தென்மாவட்டங்களில் ஜாதி வன்முறையை தூண்டும் வகையில்" அந்த ஆசிரியை சொன்னது போல் எதுவும் செய்யக் கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், மாணவனிடம் ஜாதி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய இந்த ஆசிரியைகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது மட்டுமின்றி, குளத்தூர் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் தங்கமாரியப்பன், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிப் பள்ளியில் பணிபுரிந்து வரும் உதவித் தலைமை ஆசிரியை கலைச்செல்வி மற்றும் கணினி ஆசிரியை மீனா ஆகிய இருவரும் பள்ளி மாணவனிடம் ஜாதி பற்றி பேசியுள்ளதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமுதாய மக்களிடம் ஜாதி பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் செயல்பட்ட இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சூழலில்இந்தப் பிரச்சினை தொடர்பாக குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்ந்த நபர்களிடம் விசாரணை செய்ததில், நீண்ட காலமாகப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கிடையே நடைபெறக்கூடிய அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்புகளாக ஜாதிய எண்ணத்தோடு ஆசிரியர்களில் சிலர் செயல்படுதாகவும், அதற்கு பள்ளியில் பயிலக்கூடிய சில மாணவர்களை இரண்டு தரப்பு ஆசிரியர்களும் பயன்படுத்துவதால் ஏற்பட்ட விளைவின் ஒரு பகுதியே அந்த ஆடியோ வெளியான விவகாரம் எனவும் கூறப்படுகிறது.
ஜாதி ரீதியிலான மனப்போக்கு குளத்தூர் பள்ளியில் வரக் காரணமென்ன ?
அதாவது, நீண்ட காலமாக குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாங்கள் பணி புரிவதால், தங்களுக்கு மேலான பதவி உயர்விலுள்ள ஆசிரியர்கள் யார் பள்ளிக்கு புதிதாக வந்தாலும், தங்களை அனுசரித்துத் தான் செல்ல வேண்டும், தங்களை மிஞ்சி இந்தப் பள்ளியில் செயல்படக்கூடாது என்ற தவறான ஆளுமை எண்ணம் கொண்ட அதிகாரப் போட்டியே இந்த விவகாரத்தின் அடித்தளமாக.
அது தான் தற்போது, மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஜாதிய ரீதியாகவும் பேசி அவர்களிடம் ஜாதி உணர்வைத் தூண்டும் அளவிற்கு, ஆசிரியர்களின் போக்கு சென்றுள்ளதைக் காண முடிகிறது.
ஆகவே, அந்த இரு ஆசிரியர்களின் தவறான செயலுக்கு, அவர்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டதுடன் நின்றுவிடாமல், இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்து, பள்ளியின் ஒட்டுமொத்த ஆசிரியர்களிடம் உரிய விசாரனை மேற்கொண்டு, நீண்ட நாள் பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்து, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வாக இருக்குமென அப் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் விருப்பமாக உள்ளது. இதில் ஒரு பொது நீதி சில ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் பிழைகள் வரும் பொழுதுகளில் பொது மக்கள் சிலாகிதம் அடைய வைக்கப்படுகிறார்கள்.என்ற விவாதம் நடக்கும் நிலையில்.
மாணவன் ஆசிரியர் உரையாடலை யார் பதிவு செய்து வெளியிட்டார்கள்? என்ற வினாவுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை.
கருத்துகள்