முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி வீர முத்தரையர் சங்கத்தின் பொறுப்பாளரான கே.கே.செல்வக்குமார்

நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி வீர முத்தரையர் சங்கத்தின் பொறுப்பாளரான கே.கே.செல்வக்குமார்


திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை சாலையிலுள்ள எம்ஐடி சோதனைச்சாவடியில் கடந்த 20.ஜூலை.2022 ல் வாகன சோதனையின் போது ஒரு காரிலிருந்து பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டநிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்றதான வழக்கில் முக்கியக் குற்றவாளி முதல் நபர் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கேகேஎஸ்.செல்வகுமார் என்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரை தேடப்படும் குற்றவாளியாக திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளது.

அதன் விபரம் வருமாறு:- திருச்சிராப்பள்ளி புத்தூர் நான்கு ரோட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.என்பவரது மகன் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞரணி யின் அமைப்பாளராக இருப்பதாகவும் இவருக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சிலருக்குமிடையே முன்விரோதமிருந்து வந்ததாகத் தெரிகிற நிலையில், கடந்த 20 ஆம் தேதி இரவு திலீப் திருச்சிராப்பள்ளியிலிருந்து இலால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட்டையடுத்த அகிலாண்டபுரத்தின்.  அருகில் சென்றபோது அங்கே நின்று கொண்டிருந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் கார்க் கண்ணாடி உடைந்தது.





திலீப் உயிர் தப்பினார். இதுபற்றிய தகவலறிந்த திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், லால்குடி துணைக் கண்காணிப்பாளர்  சீதாராமன், சமயபுரம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுமிடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அதையடுத்து  திலீப் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ், சார்பு ஆய்வாளர் வாசுதேவன் 



சமயபுரம் காவல் நிலைய குற்ற எண் 163/ 2022 ன் படி முதல் குற்றவாளியாக கே.கே.செல்வக் குமார் பெயர் சேர்க்கப்பட்டு. வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 28), மாமுண்டி மகன் சுரேஷ் என்ற தாயுமானவன் (வயது 21), செந்தில்குமார் (வயது 42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (வயது 25), வினோத் என்ற ஹரிஹரன் (வயது 25) ஆகிய ஐந்து பேரைக்  கைது செய்தனர்.அதில் குற்றவாளியாக உள்ள நபரான  தமிழ்நாடு வீர முத்தரையர் சங்கத்தின் தலைவராக உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே செல்வக்குமார் தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை தரப்பில் தகவல் மேலும் இதேபோல் ஏற்கனவே திருச்சிராப்பள்ளியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், என்ற ஆர்.வி.அவரது மகன்கள், மருமகன்கள் கைதாகி ஏற்கனவே   சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்   திருச்சிராப்பள்ளியில் வீர முத்தரயைர் பேரவையைச் சேர்ந்த கே.கே.செல்வகுமார் என்பவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து செல்வகுமார் எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் அப்போது  அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.வி என்ற  ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறை கைது செய்த சம்பவம்.  கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் திருச்சிராப்பள்ளி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அந்த ஐந்து பேரும் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாதியின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் சுயநலத்திற்காக கலவரம் செய்யும் இவர்களைப் போன்ற சமூகத்தில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...