வருமானவரித்துறை சார்பில் காட்பாடி அரசு பள்ளியில் மரம் நடும் விழா
சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் வருமான வரித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையே நடந்த பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் முதன்மை தலைமை ஆணையர் (வரிவிலக்கு), புதுதில்லி திருமதி. ரேஷ்மி சக்சேனா சஹ்னி கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்ற மாணவ, மானவிகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக இன்று காலை நடந்த மரம் நடும் விழாவில் தமிழ்நாடு வருமான வரித்துறை வரிவிலக்கு ஆணையர் திரு. ரவி ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் திரு. முனுசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.
கருத்துகள்