ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்து கொண்டார். முதலில் காக்கிநாடா ரங்கராய மருத்துவக் கல்லூரியில் “உலக குருதிக் கொடையாளர்” தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விடுதலைப் பெருநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த அமிர்த ஏரிகள் இயக்கத்தின் கீழ் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிருஷ்ணராஜூ குளத்தை தூர் வாரும் பணிகளை மத்திய இணையமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும், பெத்தபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 3 சக்கர ரிக்ஷாக்களை வழங்கினார். தொடர்ந்து, ஆந்திர மாநிலம், காக்கிநாடா, கோணபாபபேட்டா பகுதியில் பல்வேறு மீன்வளர்ப்புப் பண்ணைகளை நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உப்படா மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு வளர்ச்சி நிலைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, காக்கிநாடா ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அரசு திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் காக்கிநாடா மாவட்ட ஆட்சியர், பிதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்