கொழும்புவில் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை இந்தியா நிறுவ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையின் கொழும்புவில் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை இந்தியா நிறுவ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இலங்கையின் கொழும்புவில் 2022 மார்ச் 30 அன்று நடைபெற்ற 5-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை, கொழும்புவில் இந்தியா நிறு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பரிமாற்றம், அனுபவப் பகிர்வு, திறன் கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே, தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்வதை ஒருங்கிணைப்பது, ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற வசதியின் நோக்கமாகும்.
கருத்துகள்