ரூ.2.01 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள், சிகரெட்டுகள் பறிமுதல், 4 பயணிகள் கைது
ரகசிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து சென்னை வந்த இரண்டு விமானப்பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 2.573 கிலோ எடையுள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.13 கோடியாகும்.
மற்றொரு நிகழ்வில் துபாயிலிருந்து சென்னை வந்த இரண்டு பயணிகளிடமிருந்து 1.578 கிலோ எடைகொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.69.43 லட்சமாகும். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6.85 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களும் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.2.01 கோடியாகும், கடத்தல் தொடர்பாக நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு கே ஆர் உதய்பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்
கருத்துகள்