முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில்


பிரதமர் ஆற்றிய உரை  சென்னைக்கு மாலை வணக்கம்

வணக்கம்

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களே, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் திரு அர்காடி த்வோர்கோவிச் அவர்களே, இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைத்து செஸ் விளையாட்டு வீரர்களே, அணிகளே உலகம் முழுவதும் உள்ள செஸ் விளையாட்டு ரசிகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவரையும் இந்தியாவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நான் வரவேற்கிறேன் சதுரங்கத்தின் தாயகமான இந்தியாவிற்கு மிகவும் பெருமைமிகு செஸ் போட்டித் தொடர் வந்துள்ளது. இந்திய வரலாற்றின் சிறப்பான தருணத்தில் இந்தப் போட்டித் தொடர் இங்கு நடைபெறுகிறது. காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 75-வது ஆண்டினை இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். இது நமது சுதந்திரப் பெருவிழாவின் அமிர்த காலமாகும். இந்த முக்கியமான தருணத்தில் எங்கள் நாட்டிற்கு நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு கவுரமாகும்.



நண்பர்களே,


இந்தப் போட்டித் தொடரின் ஏற்பாட்டாளர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். மிகக் குறுகிய காலத்தில் அவர்கள், மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று இந்தியாவில் உள்ள நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், விருந்தோம்பலை போற்றிப் பாடிய திருவள்ளுவர், “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்றார். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக நமது ஒவ்வொரு முயற்சியும் இருக்க வேண்டும். விளையாட்டில்

நீங்கள் சிறப்பாக விளங்க நாங்கள் உதவி செய்வோம்.


நண்பர்களே,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் பல முதல்களையும், பதிவுகளையும் கொண்டிருக்கிறது. சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 30 ஆண்டுகளில் ஆசியாவுக்கு முதல் முறையாக இது வந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான நாடுகள் இதில் பங்கேற்கின்றன. முன் எப்போதும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான அணிகள் இதில் பங்கேற்கின்றன.




மகளிர் பிரிவில் மிக அதிக எண்ணிக்கையில் வீராங்கனைகளை இந்தப் போட்டித் தொடர் கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இந்த முறை தொடங்கியது. இந்த செஸ் ஒலிம்பியாட் நமது நினைவுகளில் எப்போதும் நிலைத்திருக்கும்.


நண்பர்களே,

நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும் நிலையில். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் 75 முக்கியமான இடங்களின் வழியாக பயணம் செய்தது. 27,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான இதன் பயணம், இளைஞர்களின் மனங்களில் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. செஸ் போட்டியில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் எதிர்காலத்தில் எப்போதும் இந்தியாவிலிருந்து தொடங்கும் என்பதும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்த நல்லெண்ணத்திற்காக சர்வதேச செஸ் கூட்டமைப்பிற்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.




நண்பர்களே,

இந்த செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடம் மிகவும் பொருத்தமானது அழகிய சிற்பங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல கோவில்கள் பல்வேறு விளையாட்டுக்களை சித்தரிக்கின்றன. நமது கலாச்சாரத்தில் விளையாட்டு எப்போதும் தெய்வீகமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சதுரங்க வல்லபநாதர் கோவிலை நீங்கள் காணலாம். திருப்பூவனூரில் உள்ள இந்தக் கோவில் சுவாரஸ்யமான ஒரு கலையைக் கொண்டிருக்கிறது. அது இளவரசியுடன் கடவுளே சதுரங்கம் விளையாடி






யது தொடர்பான கதையாகும். இயற்கையாக தமிழ்நாடு சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுபூர்வ தொடர்பைக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்தியாவிற்கான சதுரங்க ஆதிக்க மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. இது இந்தியாவிற்கு பல செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது.

சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்திற்கான இல்லமாக தமிழ்நாடு உள்ளது, உலகின் பழமையான மொழி தமிழ்மொழி. சென்னை, மகாபலிபுரம் மற்றும் அருகே உள்ள பகுதிகளை அறிவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன்.




நண்பர்களே, விளையாட்டு அழகானது, ஏனென்றால் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி இதற்கு உள்ளது. மக்களையும், சமூகத்தையும் விளையாட்டு இணைக்கிறது.ஈடுபடுவதன்

குழுவாக விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஒருங்கிணைந்து பணியாற்றும் திறனை இது வளர்க்கிறது. இந்த நூற்றாண்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மிகப் பெரிய நோய் தொற்று பாதிப்புக்கு எதிராக உலகம் போராடத் தொடங்கியது. நீண்டகாலமாக வாழ்வாதாரம் தொடர்ந்து பயணிக்காத நிலை நீடித்தது. அதே நேரத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உலகை ஒருங்கிணைத்தது. ஒவ்வொரு போட்டியும் ஒரு முக்கிய செய்தியை நமக்கு வழங்கியது.

நாம் ஒருங்கிணைந்து செயல்படும் போது நாம் வலிமையாக இருக்கிறோம். நாம் ஒருங்கிணையும்போது நாம் சிறந்த பங்களிப்பை வழங்குகிறோம். அதே உத்வேகத்தை நான் இங்கு காண்கிறேன்.


கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய காலம் உடல் திறன் மற்றும் உடல் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு உடல் அளவிலும், மனதளவிலும் உணர்த்தியது. அதனால்தான் விளையாட்டுத் திறமையை ஊக்குவிப்பதும், விளையாட்டிற்கான உள்கட்டமைப்பிற்கு முதலீடு செய்வதும் முக்கியம் என்றாகிறது.

நண்பர்களே, தற்போது உள்ளது போல் இந்தியாவில்





விளையாட்டிற்கான சிறந்த தருணம் இதுவரை இருந்ததில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒலிம்பிக், பாராலிம்பிக், டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெற்றி பெறாத விளையாட்டுகளிலும் நாம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோம். இன்று விளையாட்டு சிறந்த தொழில் வாய்ப்பாக உள்ளது. இளைஞர்களின் சக்தி மற்றும் இசைவான சூழல்

ஆகியவற்றின் சரியான இணைப்பின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வரும் நமது திறமைமிக்க இளைஞர்கள் நாட்டிற்கு பெருமையை சேர்க்கின்றனர். இந்தியாவின் விளையாட்டு புரட்சியில் பெண்கள் முன்னணியில் இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நிர்வாக கட்டமைப்பு, ஊக்கத்தொகை முறைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நண்பர்களே,











இன்றைய தினம் சர்வதேச விளையாட்டிற்கு சிறந்த நாளாக அமைந்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நாம் தொடங்குகிறோம். இங்கிலாந்தில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது நாட்டைப் பெருமைப்படுத்தும் நோக்கில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்!

நண்பர்களே,




விளையாட்டில் தோற்பவர்கள் என்று யாரும் கிடையாது. விளையாட்டில் எப்போதும் வெற்றியாளர்கள் அல்லது எதிர்கால வெற்றியாளர்களே இருக்கிறார்கள். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை நான் வாழ்த்துகிறேன். இந்தியாவில் மேற்கொண்டுள்ள உங்களது பயணம் சிறந்த அனுபவங்களை உங்களுக்கு தரும் என்றும், வரும் காலங்களில் இது உங்கள் நினைவுகளில் பெட்டகமாக நீடித்து

நிலைத்திருக்கும் என்றும் நம்புகிறேன். இருகரம் நீட்டி இந்தியா உங்களை எப்போதும் வரவேற்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தற்போது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியதாக நான் அறிவிக்கிறேன்! போட்டி தொடங்குகிறது.44-வது செஸ் ஒலிம்பியாட் தொடங்கியதாக பிரதமர் அறிவித்தார்

செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது; மிகப் பெரிய அளவிலான இப்போட்டியில் இந்தியா பங்கேற்கிறது

“செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த செஸ் போட்டி நடைபெறுகிறது”

“44வது செஸ் ஒலிம்பியாட் பல்வேறு முதலாவது மற்றும் சாதனைகளின் போட்டியாகும்"

“இந்தியாவின் சதுரங்க சக்கரவர்த்தியாக தமிழ்நாடு திகழ்கிறது”

“சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்திற்கான இல்லமாக தமிழ்நாடு உள்ளது மற்றும் உலகின் பழமையான மொழி தமிழ்"

“தற்போது உள்ளது போல் இந்தியாவில் விளையாட்டிற்கான சிறந்த தருணம் இதுவரை இருந்ததில்லை”

"இளைஞர்களின் சக்தி மற்றும் சுற்றுச்சூழலின் சரியான இணைப்பின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருகிறது"

“விளையாட்டில் தோற்பவர்கள் எவரும் கிடையாது. அவர்கள் வெற்றியாளர்கள் மற்றும் எதிர்கால வெற்றியாளர்கள்”

பிரதமர் திரு.நரேந்திர மோடி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக்  சிங் தாக்கூர், திரு.எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவர் திரு.ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.





அப்போது பேசிய பிரதமர், உலகில் உள்ள அனைத்து செஸ் விளையாட்டு வீரர்களையும், ரசிகர்களையும் இந்தியாவிற்கு வரவேற்பதாக கூறினார். விடுதலைப் பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் இந்த மகத்துவமிக்க விளையாட்டு நடைபெறுவதாக குறிப்பிட்டார். செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த செஸ் போட்டி நடைபெறுவதாக தெரிவித்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் பல்வேறு முதலாவது மற்றும் சாதனைகளின் போட்டியாகும் என்று பிரதமர் கூறினார். செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவில் முதல் முறையாக  செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது என்று தெரிவித்தார். 30 ஆண்டுகளில் ஆசியாவில் முதல் முறையாக இப்போட்டி நடைபெறுவதாக கூறினார். முன்பு நடைபெற்ற போட்டியை விட அதிக நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டார். மகளிர் பிரிவில் அதிக வீரர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதலாவது ஜோதி ஓட்டம் இந்த முறை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

செஸ் விளையாட்டுடன் தமிழ்நாட்டிற்கு பாரம்பரிய தொடர்பு இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அதனால்தான் இந்தியாவுக்கான செஸ் கேந்திரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறினார். இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்திற்கான இல்லமாக தமிழ்நாடு உள்ளது என்றும் உலகின் பழமையான மொழி தமிழ்மொழி என்றும் அவர் கூறினார்.

விளையாட்டு அழகானது என்று கூறிய பிரதமர், இது அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக உள்ளது என்று தெரிவித்தார். மக்களையும், சமூகத்தையும் விளையாட்டு இணைப்பதாக அவர் கூறினார். குழுவாக விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஒருங்கிணைந்து பணியாற்றும் திறனை வளர்ப்பதாக அவர் தெரிவித்தார். தற்போது உள்ளது போல் இந்தியாவில் விளையாட்டிற்கான சிறந்த தருணம் இதுவரை இருந்ததில்லை என்று அவர் கூறினார். ஒலிம்பிக் பாராலிம்பிக், டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை வெற்றி பெறாத விளையாட்டுகளிலும் நாம் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளதாக அவர் கூறினார். இளைஞர்களின் சக்தி மற்றும் சுற்றுச்சூழலின் சரியான இணைப்பின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டில் தோற்பவர்கள் என்று யாரும் கிடையாது. விளையாட்டில் எப்போதும் வெற்றியாளர்கள் அல்லது எதிர்கால வெற்றியாளர்களே இருக்கிறார்கள்.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகள்  மற்றும் விளையாட்டு வீரர்களை நான் வாழ்த்துகிறேன். இந்தியாவில் மேற்கொண்டுள்ள உங்களது பயணம் சிறந்த அனுபவங்களை உங்களுக்கு தரும் என்றும், வரும் காலங்களில் இது உங்கள் நினைவுகளில் பெட்டகமாக நீடித்து நிலைத்திருக்கும் என்றும் நம்புகிறேன்.  இருகரம் நீட்டி இந்தியா உங்களை எப்போதும் வரவேற்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதலாவது ஜோதி ஓட்டத்தை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய விளையாட்டரங்கில் பிரதமர் ஜூன் 19, 2022 அன்று தொடங்கி வைத்தார். கடந்த 40 நாட்களாக சுமார் 20,000 கி.மீ. தொலைவிற்கு சிறப்புமிக்க 75 இடங்களை கடந்து போட்டி நடைபெறும் மகாபலிபுரத்தை செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தடைந்தது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மகாபலிபுரத்தில் 2022, ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 1927 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்போட்டி முதன் முறையாக இந்தியாவிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவில் முதன் முறையாகவும் நடைபெறுகிறது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் இந்தியா 6 அணிகளைச் சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்கின்றனர்.பிரதமர் விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

பிரதமர் நரேந்திரமோடி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி, தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், பிரதமர் நரேந்திரமோடி 2 மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் இருந்து பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்ததாகவும், தற்போது இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்துள்ளார் என்றும் பேசினார். மேலும், நாட்டின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், பழங்குடியினத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி 75 வருடங்களில் நிகழாத சாதனையை பிரதமர் செய்துள்ளார் என்றும் பேசினார். மேலும், ஐ. நா. சபையில் ’யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பேசியது’, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தமிழ் மொழியை உலக அரங்கிற்கு பிரதமர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் நல்லாட்சியை வழங்கி வருவதாகவும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் இணையமைச்சர் தெரிவித்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என தெரிவித்த இணையமைச்சர், பிரதமர் விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக பெருமிதத்துடன் கூறினார்.பிரதமர் தமிழில் சொன்ன திருக்குறள்:

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு” ஹிந்தி உச்சரிப்புன்னாலும் அதை எந்த சுணக்கமும் இல்லாம சரளமா பேசியும், வரலாற்றை/ புள்ளி விவரங்களை கேட்கிறவங்களுக்கு சுவாரஸ்யமா பேசி வச்சது, அப்டியே எல்லாத்தையும் தன் பக்கம் ஈர்க்கிற அந்தத் திறமை தான்!                                      சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோ டி ஆலோசனை மேற்கொண்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அஇஅதிமுக வின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்   கூட்டணிக்  கட்சி பிதமரை சந்தித்து  வரவேற்ப்பு அளித்துள்ளார். அவர் இன்று விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்து பேச உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு