அரிசிக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை நீக்க வலியுறுத்தி தமிழ் நாட்டில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்
அரிசிக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை நீக்க வலியுறுத்தி தமிழ் நாட்டில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 4,000 அரிசி ஆலைகள், 20,000 சில்லறை விற்பனை கடைகள் தற்போது அடைக்கப்பட்டுள்ளன.
மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அனைத்து வகை உணவுப் பொருட்களான நவ தானியங்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டதை நீக்கம் செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் அரிசி ஆலைகள் சம்மேளனம், அனைத்து தானிய வர்த்தக அமைப்புகள், மற்றும் சங்கங்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம், கர்நாடகா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இச் சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள சுமார் 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அரிசி மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சார்ந்த மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். அதன் காரணமாக தற்போது இருப்பதை விட, 3 முதல் 5 ரூபாய் வரை அரிசியின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அரிசிக்கு அதுவும் சுத்தம் செய்யப்பட்டு பைகளில் அடைக்கப்பட்டு
விற்பனை செய்யும் போது ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒன்றாகும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக விலை கொடுத்து அரிசி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக அதாவது விலை பெறாமல் கொடுக்கிறது இலவசமாக. அரிசி கோதுமை மற்றும் மளிகைச் சாமான்களை. ரேசன் கடைகளில் பொது விநியோகமாக கொடுக்கப்படும் அரிசியை அனைத்து விதமான மக்களும் வாங்குவதில்லை அதை சாப்பிடுவதுமில்லை இதுவே உண்மை. அப்படி இருக்க ஜிஎஸ்டி வரி விதிப்பை மறு பரிசீலனை செய்து ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உதவிவிட வேண்டும் எனவும்
கோரிக்கை முன் வைக்கும் நிலையில் நிர்ணயம் இன்றி அரிசி ஆலைகள் பல விலை நிர்ணயம் செய்வதும் ஏற்புடையதாக இல்லை இது மாநில உணவு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பது மற்றும் கண்காணிப்பு செய்வது அவசியம் மற்றும் அவசரமும் ஆகும்.வியாபாரிகள் மட்டுமே இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்தியது தான் நிதர்சனம் இப்போது மக்கள் வரி செலுத்த வேண்டிய நிலை காரணமாக அரசு வியாபாரிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் இங்கு பொது நீதி
கருத்துகள்