தமிழ்நாட்டில் பணிபுரிய விரும்பாத டாக்டருக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் .
இட ஒதுக்கீட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டின் படி இடம் பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில், நரம்பியல் துறையில் பட்ட மேற்படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ஜித் வி.ரவி தமிழ்நாட்டில் பணியாற்ற மறுத்ததால், தமிழ்நாடு அரசுக்கு, ரூபாய் 50 லட்சம் செலுத்த வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பயின்ற அறுவை சிகிச்சை மருத்துவர் தமிழகத்தில் பணிபுரியாததால் அபராதம் ரூ.50 லட்சம் செலுத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த போது, தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்; தவறும் பட்சத்தில், 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனைக்குட்பட்டு, அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில். அதை மீறி இரண்டாண்டு காலம் கட்டாயப் பணி, 50 லட்சம் ரூபாய் இழப்பீடென தமிழ்நாடு அரசு குறைத்தும், அதை ஏற்க மறுத்து நீதிமன்றம் சென்றதால், தற்போது, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளதால். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பெற்று, மருத்துவப் படிப்பை அல்லது முதுநிலை மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், தமிழ் நாடு மாநில அரசு பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது. அதனால், குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஆனாலும், அதை மீற பலர் முற்படுகின்ற நிலையில். படிப்பை முடித்தவுடன் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று, பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஒரு நல்ல திட்டம். மருத்துவக் கல்லூரியில் D.M. Neurology பயின்று, செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் தேர்ச்சியுற்றார். ஆனால் தனது சொந்த மாநிலத்திலிருந்து அருகே உள்ளதென்ற அடிப்படையில் தமிழகத்தில் சீட்டு கிடைத்ததும் அங்கேயே சேர்ந்த அவர் சில ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார்.
பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறியதாக, அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் படிக்கும் மருத்துவர்கள், படிப்பு முடிந்து 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது ரூபாய் 2 கோடி வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பது தான் மருத்துவர் ஸ்ரீஜித் தமிழகத்தில் 2 வருடங்கள் பணிபுரிய வேண்டும், அவ்வாறு பணிபுரிய விரும்பாத பட்சத்தில் ரூபாய் 50 லட்சத்தை தமிழக அரசுக்கு அபராதமாக அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த ஒப்பந்த பணி குறித்தும், இழப்பீட்டு அபராதம் குறித்தும் அனைத்து மாநிலங்களிலும் ஒரேமாதிரியான விதியை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. விசாரணையின் போது, மனுதாரர் 2021-ஆம் ஆண்டு பணியிடங்களை வழங்குவதற்கான கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. ஆனால், அவர் அதில் பங்கேற்கவில்லை.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 2020 ஆம் ஆண்டில் சுகாதாரத் துறையின் செயலாளரால் வெளியிடப்பட்ட தகவல்தொடர்புகளை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கவனத்தில் கொண்டார். சேவை அல்லாத விண்ணப்பதாரர்களுக்கான பத்திர கால அளவை 10 ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகவும், பத்திரத் தொகை ₹50 லட்சமாகவும் அரசாங்கம் குறைத்தது. தற்போதைய வழக்கில் தொடர்பு பொருந்தும், அனைத்து மாநிலங்களிலும், இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டாயப் பணி ஒப்பந்தங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டுமென, உச்ச நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியுள்ளதை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். கடந்த, 2012 ஆம் ஆண்டில், கர்நாடகா மாநிலத்தில் அரசு ஒரு சட்டமியற்றியதன் படி, ஒருவர் மருத்துவப் படிப்பு முடித்தவுடன், கிராமப்புறத்தில் அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகே, டாக்டர் பட்டமே வழங்கப்படும். அது போன்ற நடைமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம்.
நாட்டுப்பற்று, மற்றும் சேவை மனப்பான்மை இல்லாத மருத்துவப் படிப்பு மாணவர்களுக்காக செலவழித்த பணத்தை, அரசு திரும்பப் பெறுவதில் தவறேதுமில்லை. நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்து, குறிப்பிட்ட ஆண்டுகள் இங்கு சேவை செய்யாமல் வெளிநாடுகளுக்குச் செல்ல நினைப்பவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவு வரவேற்கத்தக்கதாகவே பார்க்கலாம்.
கருத்துகள்