2022-23-ம் ஆண்டின் முதல் காலாண்டில், கையகப்படுத்தப்பட்ட மற்றும் வணிகரீதியிலான நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி 79% அதிகரித்து 27.7 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது
2022-23--ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரி, நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலர், பரிந்துரைக்கப்பட்ட ஆணையம் ஆகியவற்றால், திட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில் ஜூலை 06, 2022 அன்று ஆய்வு செய்யப்பட்டது. முதல் காலாண்டில் எட்டப்பட்ட உற்பத்தி, 27.7 மில்லியன் டன் ஆகும். இது 2021-22-ம் நிதியாண்டின் இதே காலாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 15.5% அளவை விட 79% அதிகமாகும்.
நிலக்கரி சுரங்கங்களின் இத்தகைய உயர் வளர்ச்சிக்குப் பாராட்டு தெரிவித்த அமைச்சகம், 2022-23-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில், நிலக்கரி சுரங்கங்களிலிருந்து 32 மில்லியன் டன் உற்பத்தி என்ற இலக்கை அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தது. வணிகஏல சீர்திருத்தங்களின் கீழ், 2021-ம் ஆண்டில் ஏலம் விடப்பட்ட இரண்டு சுரங்கங்கள், முதல் காலாண்டில் 1.57 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பதும் பாராட்டுகளுடன் குறிப்பிடப்பட்டது.
கருத்துகள்