இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள், செயலி வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது, இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள்
வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள், செயலி வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது, இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள், இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலத்தில், கடன் வழங்கும் செயலிகள், வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள் மீது 7,813 புகார்களை இந்திய ரிசர்வ் வங்கி பெற்றுள்ளதையடுத்து, நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளை, விரைவில் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கக்கூடுமென்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அண்மைக் காலமாக, செயலி வாயிலாக வெகு விரைவாக கடன் வழங்குவது அதிகரித்து வரும் நிலையில், கடனை வசூலிப்பதில், இந்நிறுவனங்கள் கொடுங்கோலர்கள் போல நடந்துகொள்ளும் முறைகள் குறித்த புகார்களும் அதிகரித்து வருகின்றன.கடன் வசூலிப்பவர்களின் தவறான வார்த்தைப் பிரயோகங்கள், அகால நேரங்களில் தொலைபேசி அழைப்புகள் என பலவிதங்களில் கடன் வாங்கியவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்
அதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது ஒரு கவனம் வைத்திருக்குமாறு, அணைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு மஹாராஷ்டிராவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புகார்கள் வந்துள்ளதையடுத்து கர்நாடகா, புதுடில்லி, ஹரியானா, தெலுங்கானா மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளதாக தகவல்.
கருத்துகள்