காரைக்குடி மதர் சிறப்புப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் நினைவை போற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா
மதர் சிறப்புப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தாளாளர் அருண்குமார் முன்னிலையில்.சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கிளப் ஆஃப் காரைக்குடி பியர்ல் சங்கத்தின் தலைவர் Rtn.சிவசுப்பிரமணியம், செயலாளர் Rtn.S.பிரான்சிஸ் சேவியர் மற்றும் முன்னாள் துணை ஆளுநர் Rtn. G. முத்துக்குமார் கலந்துகொண்டு சிறப்புச் செய்ததுடன் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான கற்பித்தல் உபகரணங்களை வழங்கிய நிகழ்வின் இறுதியில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அணைவரும் மரியாதை செலுத்தினார்கள். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள்